India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவை குளத்துபாளையம் பகுதியில் இன்று (மார்ச்.26) நடைபெற்ற அறிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் மகேந்திரன், செ.தாமோதரன், அமுல்கந்தசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி பொள்ளாச்சி மக்களவை அதிமுக வேட்பாளர் கார்த்திகேயனை அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றினார்.
சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் தங்கம், இவர் இன்று பொன்னேரி அடுத்த சிறுவாபுரிமுருகன் கோயிலுக்கு செல்வதற்காக செங்குன்றம் அடுத்த பாடி பேருந்து நிலையத்திலிருந்து பாடியை சேர்ந்த கமலக்கண்ணன் என்பவரிடம் லிப்ட் கேட்டு சென்றார். அப்போது சோழவரம் அடுத்த ஜனப்பசத்திரம் கூட்டு சாலை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தங்கம் உயிரிழந்தார். கமலக்கண்ணன் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் திருவிழாவில் வாக்காளர்கள் 100% வாக்குப்பதிவு செய்வதை வலியுறுத்தும் வகையில் அச்சடிக்கப்பட்டுள்ள தேர்தல் திருவிழா அழைப்பிதழ் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. திருமண அழைப்பிதழ் போன்று தற்போது தேர்தல் திருவிழா அழைப்பிதழ் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கோவை காந்திபுரம், மில் ரோட்டில் கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இங்கு ஒரு சிறிய முருகன் சிலை வைக்கப்பட்டது. இது நேற்று உடைந்து இருந்தது.
இதனை பார்த்த பக்தர்கள் இது குறித்து காட்டூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடைக்கப்பட்ட கல் சிலையை மீட்டு விசாரித்து வருகின்றனர். இது குறித்து காட்டூர் போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
தேர்தல் பணிகளில், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பணி ஒதுக்கீடு உத்தரவில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
பெரும்பாலான இடைநிலை ஆசிரியர்களுக்கு சூப்பர்வைசர் பணியும், முதுகலை ஆசிரியர்களுக்கு உதவியாளர் பணியும் ஒதுக்கப்பட்டுள்ளதால் சீனியர், ஜூனியர் ஈகோ யுத்தம் துவங்கியுள்ளது.
ஆசிரியைகளை அவர்கள் சேலை கலரைக் குறிப்பிட்டு மைக்கில் அழைப்பது வேறு மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது என்றனர்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 100% வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு அரசின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றது. இந்நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த நகை வடிவமைப்பாளர் UMT ராஜா 100% வாக்குப்பதிவை எடுத்துரைக்கும் வண்ணம் 2 கிராம் தங்கத்தில் பூட்டு சாவியை இன்று (மார்ச்.26) உருவாக்கி உள்ளார்.
மேலும் இதற்காக இரண்டு நாட்கள் செலவிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இதுவரை 405 வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.மற்றொரு பக்கம் கூட்டணி கட்சித் தலைவர்கள் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.மயிலாடுதுறை தொகுதிக்கு சற்றுமுன் காங்கிரஸ் தரப்பில் இருந்து சுதா ராமகிருஷ்ணன் வேட்பாளராக அறிவித்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட இன்று (மார்ச் 26) ஒரே நாளில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர், சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 13 வேட்பாளர்கள் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான சுப்புலட்சுமியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுவரை வேலூர் தொகுதியில் போட்டியிட 31 பேர் மனு தாக்கல் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம் அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி பாமக பெண் வேட்பாளர் செளமியா அன்புமணி வழிபாடு செய்தார். அப்போது தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்பி. வெங்கடேஸ்வரன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இன்று (26.03.2024) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் (காவல் பார்வையாளர்) பரத்ரெட்டி பொம்மாரெட்டியுடன் 2024 ஆம் ஆண்டு மக்களவை பொதுத்தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ் ஆகியோர் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.