India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) பயிற்சியாளர் சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க ஜூன் 13ம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இணையதளத்தில் பதிவு செய்ய வசதி இல்லாத மாணவர்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை , அரக்கோணம் ஐடிஐ அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள சேர்க்கை உதவி மையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பெரிய காஞ்சிபுரம் தர்கா பகுதியில் கழிவுநீர் கால்வாய் நிரம்பி சாலைகளில் கழிவு நீர் வழிந்தோடி வருகிது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமின்றி தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மதுரையில் அனைத்து பள்ளிகளிலும் சேர்க்கை கொண்டாட்டம் நிகழ்ச்சி நடத்த முதன்மை கல்வி அதிகாரி(சி. இ. ஓ.,) கார்த்திகா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், பள்ளி திறந்த முதல் நாளில் இருந்தே அரசு, உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கொண்டாட்டம் நிகழ்ச்சி நடத்தவும், தொடக்கப் பள்ளிகளில் முதல் வகுப்பு சேர்க்கையை 100% மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை, காரைக்குடி நெடுஞ்சாலையிலுள்ள கவிநாடு கண்மாயில் மாவட்ட சீமைக் கருவேல மரங்களை அகற்றும் தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 548 சீமைக் கருவேல மரங்களை அகற்ற ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் அப்தாப் ரசூல், வருவாய் அலுவலர் ஆர்.ரம்யாதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மெரினா கடற்கரையில், மக்களை இரவு 10 மணிக்கு மேல் இருக்கக் கூடாது எனக் கூறி காவல் துறையினர் அப்புறப்படுத்துவதாக சமூக ஆர்வலர் ஜலீல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், சென்னை மாநகர காவல் சட்டம் 41ன் படி பொது இடங்களில் கூடுவதற்கு நேரக் கட்டுப்பாடுகள் விதிக்க அதிகாரம் உள்ளது என காவல்துறை சார்பில் கூறப்பட்டது. இதனால், இனியும் இந்த நேரக் கட்டுப்பாடுகள் தொடரும்.
மாவட்டத்தில் உணவுப் பொருட்கள் சார்ந்த உற்பத்தியை ஊக்குவிக்க பிரதான் மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மாவட்ட வள நபர் பணிக்கு விண்ணப்பிக்க மாவட்ட நிர்வாகம் தற்பொழுது அழைப்பு விடுத்துள்ளது. ஜூன் 20 ஆம் தேதிக்குள் மாவட்ட தொழில் மையத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரியில் போதைப் பொருள்கள் நடமாட்டத்தை குறைக்க போலீஸாா் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா். முத்தியால்பேட்டை, முதலியாா்பேட்டை, இலாசுப்பேட்டை, வில்லியனூா் கிருமாம்பாக்கம், பாகூா், தவளக்குப்பம் பகுதிகளில் உள்ள கடைகளில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
அதில் ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை, பீடி, சிகரெட் போன்றவற்றை கைப்பற்றி, 22 போ் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள குடியரசு தின விழா அன்று
இந்திய அரசாங்கத்தால் மேன்மை பொருந்திய பணிகளுக்காக வழங்கப்படும் பத்ம விருதுகளுக்கு (பத்ம விபுஷன் , பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ) தகுதியுடையவர்கள் awards.gov.in மற்றும் padmaawards.gov.in தளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் இன்று(ஜூன் 8) தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் அமலிநகர் பகுதியை சேர்ந்த ஜார்ஜ் (49). இவர், இன்று அதிகாலை மீன் பிடிப்பதற்காக கடற்கரையில் இருந்து சுமார் 20 மீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் கடல் சீற்றம் காரணமாக படகிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருச்செந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுராந்தகம் சார்பதிவாளராக (பொறுப்பு) திலீப்குமார் (40) என்பவர் உள்ளார். கடந்த 6ம் தேதி செங்கல்பட்டு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார், சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தி ரூ1, 50, 000 பணத்தை கைப்பற்றி திலீப்குமார் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து நேற்று காலை கடலூர் பீச் ரோட்டில் உள்ள திலீப்குமார் வீட்டில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
Sorry, no posts matched your criteria.