India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அ.தி.மு.க வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் கலைச்செல்வி மோகனிடம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அருகில் மாவட்ட செயலாளர்கள் வி.சோமசுந்தரம், திருக்கழுக்குன்றம் ஆறுமுகம் மாநில அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா கணேசன், சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் பகுதியில் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளாத அதிகாரிகளை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் 3,650 பேர் வரும் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க போவதாக போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில், தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்; எங்கள் உரிமை எங்களுக்கு வேண்டும்; மதுக்கூர் வடக்கு பகுதிக்கு வாக்கு சேகரிக்க வர வேண்டாம் என்ற போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன், கேகே நகர் எம்ஜிஆர் சிலையிலிருந்து தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர் சங்கீதாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்தபோது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.
ஈரோடு மக்களவைத் தொகுதி எம்.பி கணேசமூர்த்தி(77) பூச்சிக்கொல்லி மாத்திரையை தின்று தற்கொலைக்கு முயன்றதால் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று காலையும் டாக்டர்கள் அவரது உடல் நிலையை கண்காணித்து தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேரில் பார்த்து நலம் விசாரித்தனர்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிட அதிமுக வேட்பாளர் ஜெய பெருமாள், மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். மாவட்ட செயலர் முனியசாமி, முன்னாள் அமைச்சர்கள் அன்வர் ராஜா, மணிகண்டன், பரமக்குடி சட்டமன்ற முன்னாள் எம்எல்ஏ சதன் பிரபாகர் உடனிருந்தனர்.
தமிழகத்தில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று (மார்ச் 25) வேட்புமனு தாக்கல் செய்தனர். அதன்படி, விழுப்புரம் (தனி) எம்பி தொகுதியில் விசிகவின் ரவிக்குமார், அதிமுகவின் பாக்யராஜ், பாமகவின் முரளி சங்கர் உள்ளிட்டோர் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். அதில் பலர் நல்ல நேரம் பார்த்து வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 27 கடைசி நாளாகும்.
புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட 49 மையங்களில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை துவங்குகிறது. இத்தேர்வில் 7685 மாணவர்கள் 7408 மாணவியர் என 15093 பேர் தேர்வு எழுதுகின்றனர். அதன்படி நாளை 26 ஆம் தேதி மொழிப்பாட தேர்வுடன் தொங்கும் இத்தேர்வுகள் அடுத்த மாதம் 8 ஆம் தேதி யுடன் முடிவடைகிறது. இத்தேர்வு காலை 10 மணியளவில் தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடக்கிறது.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிட திமுக தலைமையிலான இந்திய கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனி (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அமைச்சர் ராஜகண்ணப்பன், திமுக மாவட்ட செயலர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ, சட்டமன்ற உறுப்பினர்கள் முருகேசன், ராம.கருமாணிக்கம் உடனிருந்தனர்.
கோவை, வெள்ளியங்கிரி மலை ஏறிய சேலத்தை சேர்ந்த தியாகராஜன்(35) என்பவர் உயிரிழந்துள்ளார். பனிப்பொழிவு அதிகமாக இருந்த நிலையில், கடந்த 24 மணி வெள்ளியங்கிரி மலை ஏறிய 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், சேலத்தை சேர்ந்த தியாகராஜன் என்பவர் முதல் மலை – குரங்கு பாலம் அருகே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் நிராகரிக்கப்பட்ட 605 தபால் வாக்குகளை சரிபார்த்து 20 நாள்களில் மறு எண்ணிக்கை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி அதிமுக எம்எல்ஏ அசோக்குமார் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் செங்குட்டுவன் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.