India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நெல்லை தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா இன்று விடுத்துள்ள அறிக்கை; குமரி கடல் மன்னார்வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அடுத்த 4 நாட்களுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். மழையை பொறுத்தவரை குமரி மாவட்டத்தில் தினசரி மழை பெய்யும். மாஞ்சோலை, குற்றாலம், செங்கோட்டை தென்காசி, வால்பாறை ஆகிய இடங்களிலும் தினசரி மழை பெய்யும் என தெரிவித்துள்ளார்.
செங்கோட்டையிலிருந்து அம்பை வழியாக திருநெல்வேலி செல்லும் ரயில்கள் எண் 06658, 06682, 06684, 06686, திருநெல்வேலியிலிருந்து அம்பை வழியாக செங்கோட்டை செல்லும் ரயில்கள் எண் 06681,06683,06685,06687 நிரந்தரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் இந்த எண்கள் நிரந்தர எண்களாக அமலுக்கு வருவதாக இன்று (ஜூன். 10)தென்னக ரயில்வே நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
தூத்துக்குடி ஜெயராஜ் சாலையில் உள்ள கூட்டுறவு நியாயவிலை கடையில் இன்று அமைச்சர் கீதா ஜீவன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது பொதுமக்களுக்கு தேவையான ரேஷன் பொருள்கள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளதா எடை சரியாக வினியோகம் செய்யப்படுகிறதா பொருள்களின் தரம் எவ்வாறு உள்ளது என அப்போது ஆய்வு மேற்கொண்டார்,
சென்னை பெருநகரில் கடந்த 14 நாட்களில் 66 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை இன்று தெரிவித்துள்ளது. தொடர்ச்சியான குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. அதன்படி, கடந்த மே.27 முதல் ஜூன் 9 வரையான வாரகாலத்தில் 1 பெண் உட்பட 66 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆண்டிபட்டி வட்டம், திருமலாபுரம் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் 5-ஆவது சுற்று தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா, இன்று (10.06.2024) தொடங்கி வைத்து பார்வையிட்டார். கோமாரி நோய் தடுப்பூசி முகாம் இன்று முதல் ஜூன் 30ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
ஈரோடு ஈ.வி.என். சாலையில் உள்ள ஈரோடு தெற்கு மின் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் வரும் 12ஆம் தேதி மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கொடுமுடி, சிவகிரி, கஸ்தூரிபாய் கிராமம், சோலார், கணபதிபாளையம், அறச்சலுார் , எழுமாத்தூர், மொடக்குறிச்சி ஆகிய பகுதிகளில் உள்ள மின் பயனீட்டாளர்கள் பங்கேற்று மின்சாரம் சார்ந்த குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெறலாம் என தெரிவிக்கப்பட்டது.
புதுக்கோட்டை, நகராட்சி அம்பாள்புரம் 1ம் வீதி சீடு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் இயங்கும் கிரசண்ட் மனவளர்ச்சி குறைபாடு உடையோருக்கான சிறப்பு பள்ளியில் மதிய உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா இன்று தொடங்கி வைத்தார். அருகில் மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், சீடு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் ராஜேந்திரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மத்திய இணைச் இணைய அமைச்சராக டாக்டர் எல்.முருகன் இரண்டாவது முறையாக மீண்டும் பொறுப்பேற்றுள்ளார்.அவருக்கு பாரதிய ஜனதா கட்சியின் நாமக்கல் கிழக்கு மாவட்டம் நாமக்கல் நகரத்தின் சார்பாக நாமக்கல் நகரத் தலைவர் சரவணன் டெல்லிக்கு இன்று நேரில் சென்று டாக்டர் எல்.முருகன் அவர்களை சந்தித்து அவருக்கு பொன்னாடை போர்த்தி இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
நாமக்கல் தெற்கு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி துவக்க நாளான, அரசு பள்ளிக்கு வருகை தரும் மாணவ, மாணவியருக்கு, இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் இன்று மிட்டாய் கொடுத்து வரவேற்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் தங்கராஜ் மாவட்ட குழு உறுப்பினர் கிஷோர் பங்கேற்றனர். மாணவர்கள் சிறப்பாக கல்வி பயில வேண்டும் என, மாணவ மாணவியரை இந்திய மாணவர் சங்கத்தின் நிர்வாகிகள் வாழ்த்தினர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் காவல்துறையினரின் குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் 12ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்ததற்கும் அவர்கள் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கும் உதவியாக காவலர் சேமநலநிதி உதவித்தொகையை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி மாணவர்களுக்கு வழங்கினார்.
Sorry, no posts matched your criteria.