Tamilnadu

News June 14, 2024

திருப்பத்தூர்: மனைவியை கொன்ற கணவன்

image

திருப்பத்தூர் அடுத்த கந்திலி நரியனேரியை சேர்ந்தவர் ராமன் ( 30. இவர் சென்னையில் பானிபூரி கடை நடத்தி வருகிறார். குடும்ப பிரச்னையில் இவரது மனைவி சூர்யா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.  போலிசார் விசாரணையில் கணவர் ராமன் தனது மனைவியை கழுத்து நெரித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனையெடுத்து போலீசார் ராமனை நேற்று இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News June 14, 2024

தென்காசி: ஒரு நாளைக்கு ரூ.1000 சம்பளம்

image

தென்காசி மாவட்டம் அன்னை சத்யா அம்மையார் அரசினர் குழந்தைகள் இல்லத்திற்கு ஆற்றுப்படுத்துனர்கள் (Counselling) பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலைப்பட்டம் பெற்றவர்கள், ஜூன் 25ஆம் தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். மாதம் 9 முறைக்கு மிகாமல் மதிப்பூதிய அடிப்படையில் ஒரு வருகைக்கு போக்குவரத்து உட்பட ரூ.1000 வழங்கப்படும்.

News June 14, 2024

நெல்லை காங்., தலைவர் மரணம்; சிபிசிஐடி விசாரணை

image

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கடந்த மாதம் 4ஆம் தேதி கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், நேற்று ஜெயக்குமார் உடல் கிடந்த கரைச்சுத்துப்புதூர் தோட்டத்தில் பிற்பகல் 3 மணி முதல் 5.20 மணி வரை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். தொடர்ந்து, குடும்பத்தின மற்றும் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

News June 14, 2024

சென்னையில் இன்று நள்ளிரவு முதல் முடிவுக்கு வருகிறது.

image

கடலில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக, கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி மீன்பிடி தடை காலம் தொடங்கியது. 61 நாட்களுக்குப் பிறகு இன்று இரவு 12 மணியுடன் (ஜூன் 14) முடிகிறது. 2 மாதங்களாக சென்னை காசிமேட்டைச் சேர்ந்த 15,000 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தப்பட்டிருந்தன. இன்று நள்ளிரவு முதல் மீனவர்கள் மீண்டும் மீன்பிடிக்க செல்கின்றனர். இதனால் மீன்களின் விலை குறையும் என தெரிகிறது.

News June 14, 2024

மத்திய அரசு நிதியுடன் பாரம்பரிய சிகிச்சைகள்

image

மத்திய அரசின் உதவியுடன், அமுதம் கூட்டுறவு அமைப்பு மூலம், தற்போது மதுரை பை-பாஸ் சாலை பொன்மேனியில் ‘ஆயுஷ்’ மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
சிறப்பு என்னவென்றால், ஒரே இடத்தில் ஆயுர்வேதம், சித்தா, ஹோமி யோபதி , யோகா மற்றும் இயற்கை மருத்துவ பாரம்பரிய சிகிச்சைகள் கிடைப்பதுதான்.
இந்த மருத்துவமனை, மத்திய அரசு நிதியுதவியின் கீழ் செயல்படுகின்றது.

News June 14, 2024

சீரமைப்பு பணியைத் தொடங்கிய எம்.பி., எம்.எல்.ஏ

image

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் பேரூராட்சிக்கு உட்பட்ட புதுப்பட்டி பகுதியில், ஊரணி ஒன்று நீண்ட நாள்களாக பராமரிப்பு இன்றி கிடந்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் நகர்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், இந்தப் பணியை, சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, தென்காசி எம்.பி. ராணி ஸ்ரீகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மேலும், சீரமைப்பு பணி உடனடியாக முடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 14, 2024

ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய நாளை சிறப்பு முகாம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6 வட்ட வழங்கல் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பம் செய்யலாம். இதற்கான முகாம் நாளை ஜூன் 15ஆம் தேதி நடக்கிறது. பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

News June 14, 2024

மாவட்ட கல்வி அலுவலர் பணியிடம்; சிஇஓ தகவல்

image

நெல்லை மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இதற்கான உத்தேச பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துசாமி தெரிவித்துள்ளார். தகுதியான தலைமை ஆசிரியர்கள் தங்கள் விபரங்களை சரி பார்த்து கொள்ள வேண்டும் என்றும், திருத்தங்கள் ஏதாவது இருந்தால் உடனடியாக முதன்மை கல்வி அலுவலகத்தை அணுக வேண்டும் என்றும் கூறினார்.

News June 14, 2024

உதயநிதியிடம் வாழ்த்து பெற்ற காங்., எம்.பி.க்கள்

image

I.N.D.I.A கூட்டணி சார்பில் திருவள்ளூர், கன்னியாகுமரி, மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர்கள் சசிகாந்த், விஜய் வசந்த், சுதா ஆகியோர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர. இந்நிலையில், நேற்று பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

News June 14, 2024

மருத்துவமனைகளுக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள்

image

வளசரவாக்கம் மண்டலத்திற்குட்பட்ட நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலையத்தில், நேற்று மேயர் பிரியா தலைமையில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. அதில், சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளுக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான மருத்துவ சேவை பயன்பாட்டிற்கான உபகரணங்களை ஸ்கூல் (SCHOOL) தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கா. கணபதி மாநகராட்சி ஆணையர் உடன இருந்தனர்.

error: Content is protected !!