Tamilnadu

News March 17, 2024

திருச்சி மாநகராட்சி ஆணையர் முக்கிய அறிவிப்பு

image

திருச்சி மாநகராட்சி ஆணையர் பொதுமக்களுக்கு இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையத்தில் அரக்குழாயில் மண் துகள்கள் மூலம் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றை சரி செய்ய 2 மாத காலம் தேவைப்படுவதால் இந்த ஏரியாவை சுற்றியுள்ள 35 நீர் தேக்க மேல்நிலைத் தொட்டிகளுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் நீர் வினியோகம் செய்யப்படும் என்றார்.

News March 17, 2024

மயிலாடுதுறை புகார் தெரிவிக்க தொலைபேசி எண் வெளியீடு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்க 24 மணி நேரமும் இயங்கும் வகையில் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் அல்லது அரசியல் கட்சியினர் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக எந்நேரமும் 1800-425-8970 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மயிலாடுதுறை தேர்தல் நடத்தும் அலுவலர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.

News March 17, 2024

கடலூர் 22-வது வார்டில் தெருமின் விளக்கு பணி

image

கடலூர் மாநகராட்சி 22-வது வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தெருமின் விளக்குகள் பராமரிப்பு பணி இன்று நடைபெற்றது. கடலூர் மாநகராட்சி 22-வது வார்டு சொரக்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தெருமின் விளக்குகளில் பராமரிப்பு பணி, இன்று 22-வது வார்டு மாமன்ற சுபாஷினி ராஜா தலைமையில் நடைபெற்றது.

News March 17, 2024

செங்கல்பட்டு: மூதாட்டியிடம் மூன்று லட்சம் திருட்டு

image

தாம்பரம், மீனாம்பாள் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்வரி(68). இவருக்கு கைப்பேசியில் தொடர்வு கொண்ட மர்மநபர்கள் பிரபல வங்கி அதிகாரிகள் எனக் கூறி, புதிய எ.டி.எம் கார்டு வழங்குவதற்காக  ஓ.டி.பி எண் கேட்டுள்ளனர். ஓ.டி.பி-யை சொன்ன அடுத்த நொடியில் வங்கி கணக்கில் இருந்து 3 லட்சம் பணத்தை திருடியுள்ளனர். இதுகுறித்து நேற்று மூதாட்டி அளித்த புகாரின் பேரில் தாம்பரம் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

News March 17, 2024

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மார்ச்.18 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரையில் நடைபெறாது என பொதுமக்களுக்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் , ஆட்சியருமான ஏ.பி மகாபாரதி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News March 17, 2024

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நிறுத்தம் 

image

2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் பிரதிவாரந்தோறும் திங்கள் கிழமை நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் பிற கூட்டம், கிராம பகுதியில் மக்கள் தொடர்பு முகாம்கள் போன்றவை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

News March 17, 2024

கரூரில் விற்பனை ஜோர்!

image

கரூரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், கரூரில் கூலிங்கிளாஸ் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் கோடைக்காலம் காரணமாக, வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பது வழக்கம்.ஆனால் நடப்பாண்டு மார்ச் மாத துவக்கத்தில் இருந்தே, தமிழகத்தில் கோடையை போல் வெயில் சுட்டெரிக்கிறது.இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதிப் படுகின்றனர்.

News March 17, 2024

வேலூர்: ஆந்திராவில் இருந்து கஞ்சா 

image

ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் இன்று குடியாத்தம் தாலுகா போலீசார் சைனகுண்டா சோதனை சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திரத்தைச் சேர்ந்த மணிகண்டன் 2 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 17, 2024

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு சிறை விதிப்பு

image

ராமேஸ்வரத்தில் இருந்து 484 விசைப்படகுகள் நேற்று (மார்ச் 16) காலை மீன் பிடிக்கச் சென்றன. இந்நிலையில் இலங்கை நெடுந்தீவு அருகே இன்று அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 2 விசைப்படகுகளையும் அதிலிருந்த 21 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து காரைநகர் கொண்டு சென்றனர். இவர்களுக்கு மார்ச் 27 வரை நீதிமன்ற காவல் விதித்து ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News March 17, 2024

திருப்பூர்: எம்எல்ஏ அலுவலகத்திற்கு சீல்

image

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக அடுத்த மாதம் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் நான்காம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து பல்லடம் எம்எல்ஏ அலுவலகத்தை தாசில்தார் ஜீவா தலைமையிலான வருவாய்த் துறையினர் நேற்று சீல் வைத்தனர்.

error: Content is protected !!