India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மார்ச்.18 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரையில் நடைபெறாது என பொதுமக்களுக்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் , ஆட்சியருமான ஏ.பி மகாபாரதி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் பிரதிவாரந்தோறும் திங்கள் கிழமை நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் பிற கூட்டம், கிராம பகுதியில் மக்கள் தொடர்பு முகாம்கள் போன்றவை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
கரூரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், கரூரில் கூலிங்கிளாஸ் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் கோடைக்காலம் காரணமாக, வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பது வழக்கம்.ஆனால் நடப்பாண்டு மார்ச் மாத துவக்கத்தில் இருந்தே, தமிழகத்தில் கோடையை போல் வெயில் சுட்டெரிக்கிறது.இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதிப் படுகின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் இன்று குடியாத்தம் தாலுகா போலீசார் சைனகுண்டா சோதனை சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திரத்தைச் சேர்ந்த மணிகண்டன் 2 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து 484 விசைப்படகுகள் நேற்று (மார்ச் 16) காலை மீன் பிடிக்கச் சென்றன. இந்நிலையில் இலங்கை நெடுந்தீவு அருகே இன்று அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 2 விசைப்படகுகளையும் அதிலிருந்த 21 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து காரைநகர் கொண்டு சென்றனர். இவர்களுக்கு மார்ச் 27 வரை நீதிமன்ற காவல் விதித்து ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக அடுத்த மாதம் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் நான்காம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து பல்லடம் எம்எல்ஏ அலுவலகத்தை தாசில்தார் ஜீவா தலைமையிலான வருவாய்த் துறையினர் நேற்று சீல் வைத்தனர்.
மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்-பிரியா தம்பதி கடந்த 3 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இருவரையும் சமாதானப்படுத்த இரு குடும்பத்தாரும் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரு குடும்பத்தினரும் தகராறில் ஈடுபட்டு தாக்கி கொண்டதில் இருவருக்கு மண்டை உடைந்தது. இது குறித்து இரு குடும்பத்தை சேர்ந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் சம்பந்தமான புகார்களை தெரிவிக்க மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பாட்டில் உள்ள மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
இதில் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 7034 மற்றும் 04365 – 252594,252595,252 599 ஆகிய எண்களில் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கிஸ் அறிவித்துள்ளார்.
கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல், சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இரும்பு லோடு ஏற்றி வந்த லாரி மீது பின்னால் வந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் டிப்பர் லாரி ஓட்டுநர் சுந்தர் என்பவரின் இரு கால்களும் நசுங்கின. இச்சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு ஸ்டோனி பாலம் அருகே மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. அங்கு, இன்று காலை 40 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் ஒருவர் உடலில் காயங்களுடன் நிர்வாணமாக இறந்து கிடந்தார். தகவலறிந்து வந்த ஈரோடு சூரம்பட்டி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அடித்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.