Tamilnadu

News August 22, 2025

நாகையில் அப்பா அம்மா மகனுக்கு ஆயுள் தண்டனை

image

நாகை மாவட்டம் முட்டம் கிராமத்தை சேர்ந்த பரமசிவம், மனைவி பாக்கியவதி, மகன் மகாதேவன் ஆகியோர், அதே பகுதியை சேர்ந்த நரசிங்கமூர்த்தி என்பவரை கடந்த 2022ல் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதுகுறித்த வழக்கில் நாகை மாவட்ட நீதிபதி கந்தகுமார் நேற்று தீர்ப்பளித்தார். அப்போது பரமசிவம், பாக்கியவதி, மகாதேவன் ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

News August 22, 2025

சென்னை கலெக்டர் அறிவிப்பு

image

சென்னை மாவட்ட இளைஞர் நீதி குழுமத்தில் சமூகப்பணி உறுப்பினர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணிகளுக்கு உளவியல், சட்டம், சமூகவியல் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவ்விண்ணப்பங்களை dsdcpimms.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து செப்.15 -க்குள் குழந்தைகள் நலத்துறை இயக்குநரகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்‌ என கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

News August 22, 2025

சேலம்: ரூ.67,100 சம்பளம்: POLICE வேலை! APPLY NOW

image

சேலம் மக்களே POLICE ஆக வேண்டுமா? தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க..!

News August 22, 2025

காஞ்சிபுரம்: ITI, டிப்ளமோ போதும், சூப்பர் வேலை!

image

ஆவடியில் உள்ள ராணுவ வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் கீழ் எஞ்சின் தொழிற்சாலையில் தொழிற்பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு ITI, டிப்ளமோ & இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.18,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நேரடியாக நேர்காணலில் கலந்துகொள்ளலாம். நேர்காணல் செபடம்பர் 15ம் தேதி நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க.

News August 22, 2025

BREAKING: நெல்லை வந்தடைந்தார் அமித்ஷா

image

நெல்லை மாவட்டத்தில், பாஜக பூத்கமிட்டி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஹெலிகாப்டர் மூலம் மத்திய அமைச்சர் அமித்ஷா நெல்லை வந்தடைந்தார். நயினார் நாகேந்திரன் வீட்டில் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக அமித்ஷா ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வேல்முருகன், தமிழிசை மற்றும் அண்ணாமலை ஆகியோர் பங்கேற்க உள்ளனர். பின்னர் நெல்லையில் நடைபெறும் பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.

News August 22, 2025

நாமக்கல்: ரூ.1,15,000 சம்பளம்: அரசு SUPERVISOR வேலை!

image

நாமக்கல் மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் துணை நிறுவனத்தில் உள்ள, 63 சீனியர் மற்றும் ஜூனியர் சூப்பர்வைசர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு B.E/B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.45,000 முதல் ரூ.1,15,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<> இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. கடைசி தேதி 26.08.2025 ஆகும். மக்களே SHARE பண்ணுங்க!

News August 22, 2025

கள்ளக்குறிச்சி: நேரில் ஆய்வு செய்த ஆட்சியர்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஊராட்சி ஒன்றியம் நாககுப்பம் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமான பணிகளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிகழ்வின் போது துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர். மேலும் விரைவில் பணிகளை முடிக்கவும் அறிவுரை வழங்கினார்.

News August 22, 2025

தென்காசி: ஆகஸ்ட்.24 அமைச்சர் மா.சுப்பிரமணியன் வருகை

image

தென்காசி மாவட்டத்தில் உள்ள தலைமை அரசு மருத்துவமனையில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடங்கள் மற்றும் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் மற்றும் கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கட்டப்பட்டுள்ள மேலும் கட்டப்பட்டு இருக்கும் புதிய கட்டிடங்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆகஸ்ட் 24ஆம் தேதி பங்கேற்று தொடங்கி வைக்கிறார்.

News August 22, 2025

மயிலாடுதுறை: கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த மாணவர்களிடம் வழங்கப்படும் பயிற்சிகள் குறித்து நேரடியாக அவர் கேட்டறிந்தார். பின்னர் கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து நேரடியாக பார்வையிட்டார்.

News August 22, 2025

மாமாங்கம் மேம்பாலம் இன்று பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது

image

சேலம்-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் மாமாங்கத்தில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்காக இன்று (ஆக.22) திறக்கப்பட்டது. இதனால் அந்த சாலை வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள்,லாரி,பேருந்து ஓட்டுநர்கள்,பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.புதிய மேம்பாலத்தால் போக்குவரத்து நெரிசல் அறவே குறையும் என எதிர்பார்ப்பு!

error: Content is protected !!