India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரையில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்புமனுக்கள் மீது இன்று பரிசீலனை நடைபெறுகிறது. அந்தந்த தொகுதிகளுக்காண பொதுப் பார்வையாளர்கள் முன்னிலையில் வேட்புமனுக்கள் பரிசீலனை நடக்கிறது. முறையாக கையெழுத்து போடப்படாத, ஆவணங்கள் இணைக்கப்படாத மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும். மனுக்களை வாபஸ் பெற விரும்புகிறவர்கள் 30ம் தேதிக்குள் வாபஸ் பெறலாம். அன்றைய தினம் மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
தஞ்சாவூரில் மக்களவை தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.6.16 லட்சம் மேல்முறையீட்டு குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டது என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளாா். சமா்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் விசாரணையின்படி, தேர்தல் செலவின மேல்முறையீட்டு குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அத்தொகைகள் உடனடியாகத் விடுவிக்கப்பட்டுள்ளது.
புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகை என தொடர் விடுமுறை வருவதால் தென் மாவட்டங்களுக்கு செல்ல வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இன்று 505 பேருந்துகளும் நாளை 300 பேருந்துகளும் சனிக்கிழமை 345 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை பாராளுமன்ற திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், கோவை யாஸ்மின் நகர், ராமர் கோவில் வீதியில் இன்று (மார்ச்.28) பிரச்சாரத்தில் ஈடுபட்டு உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். உடன் கோவை மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக், மேயர் கல்பனா ஆனந்த் குமார் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் மற்றும் திமுக கழக தொண்டர்கள் இருந்தனர்.
திருப்பூர் மாநகர காவல் துறையின் KVR நகர் சரகத்தின் சார்பில் சரக காவல் உதவி ஆணையர் நாகராஜ் தலைமையில் கொடி அணி வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கேவிஆர் நகர் காவல் நிலையம் முன்பு துவங்கிய கொடி அணி வகுப்பு செல்லம் நகர், பழ குடோன், கருவம்பாளையம், மங்கலம் உள்ளிட்ட பதற்றமான வாக்குச்சாவடி உள்ள பகுதிகளில் காவல்துறை மற்றும் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் சார்பாக கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடக்கு ஒன்றியம் ஆண்டியூர் முருகன் கோயிலில், அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷ் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே முனுசாமி, உள்ளிட்ட பலர் வழிபாடுசெய்து பிரச்சாரத்தை துவக்கினர். பின்னர் மாரம்பட்டி கிராமத்தில் வயலில் களை எடுக்கும் பெண்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
திருநெல்வேலி பாதிரியார் ஒருவர் பாராளுமன்ற தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். திருநெல்வேலியைச் சேர்ந்த பாதிரியார் காட்புரே நோபல் நெல்லை மற்றும் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதனை அடுத்து இன்று (மார்ச் 28) தனது ஆதரவாளர்களுடன் சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் எஸ்.டி.ஆர் விஜயசீலன் நேற்று மனு தாக்கல் செய்தார். அதில் பிரமாண பத்திரத்தில் தனக்கு அசையும்,அசையா சொத்துக்கள் வங்கி கணக்கு என மொத்தம் ரூ.71 கோடியே 10 லட்சம் இருப்பதாகவும். மனைவி பெயரில் ரூ.13 கோடியை 80 லட்சம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் 873 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நாளன்று கோடை வெயிலை கருத்தில் கொண்டும், வாக்காளர்களின் நலன் கருதியும் இந்த வாக்குச்சாவடி மையங்கள் அருகே முதலுதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூா் மக்களவை தொகுதியில் நேற்று தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சாா்பில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில்குமாா் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக கையில் நெற்கதிா்கள், கரும்புகளை ஏந்தி வந்தார். வேட்பாளா் செந்தில்குமாருடன், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலா் பி.ஆா்.பாண்டியன், தலைவா் எல். பழனியப்பன் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.