Tamilnadu

News March 19, 2024

சேலத்தில் பாமக போட்டி?

image

பாஜக – பாமக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் சந்தித்து பேசிய நிலையில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதையடுத்து சேலம் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

News March 19, 2024

பாஜக – பாமக கூட்டணி கையெழுத்தானது

image

பா.ஜ.க – பா.ம.க கூட்டணி ஒப்பந்தம் குறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இல்லத்தில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் பாமகவுக்கு 10 தொகுதிகளை பாஜக ஒதுக்கியுள்ளது. இந்த 10 தொகுதிகளில் ஆரணி தொகுதி பா.ம.க விற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே. மூர்த்தி போட்டியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

News March 19, 2024

விழுப்புரம்: பாஜக – பாமக இடையே கையெழுத்து

image

பாஜக-பாமக இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் இன்று (மார்ச் 19) காலை கையெழுத்தானது. பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் அன்புமணி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் விழுப்புரம், தைலாபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி விழுப்புரத்தில் பாமக போட்டியிடும் எனக் கூறப்படுகிறது.

News March 19, 2024

ராணிப்பேட்டை: பாமகவுக்கு எந்தெந்த தொகுதிகள்?

image

பாஜக – பாமக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் விழுப்புரம், தைலாபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதையடுத்து பாமகவிற்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

News March 19, 2024

பேரூராட்சி திமுக கவுன்சிலருக்கு கொலை மிரட்டல்.

image

தொண்டாமுத்தூர் பேரூராட்சி 10வது வார்டு திமுக கவுன்சிலராக இருந்து வருபவர் ஸ்கைலாப் . இவர் நேற்று காலையில் பேரூராட்சி அலுவலகம் அருகில் நடந்து வரும் பணிகளை பார்வையிட்டுள்ளார். அங்கு வந்த ரியல் எஸ்டேட் அதிபர் பாபு சுற்றுச்சுவர் கட்டக்கூடாது என கேட்டு கவுன்சிலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் தொண்டாமுத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

News March 19, 2024

திருவாரூர் முதல்வர் பிரச்சாரம் இடம் தேர்வு

image

திருவாரூர் ‘வருகிற 23.03.24 தமிழக முதல்வர் கலந்து கொள்ளும் நாகை நாடாளுமன்ற வேட்பாளர் மற்றும் தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் பரப்புரை நடைபெறும் இடத்தினை திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி .கே. கலைவாணன் எம்எம்ஏ, . தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரன் எம்எல்ஏ, நாகை மாவட்ட செயலாளர் கௌதமன் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.

News March 19, 2024

நாகை வேட்பாளர் வரலாறு

image

நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக வை. செல்வராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார். மன்னார்குடி ஒன்றியம் சவளக்காரன் ஊராட்சி கீழநாலாநல்லூர் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த இவர், மன்னார்குடி அரசுக்கலைக் கல்லூரியில் பி.ஏ, பூண்டி புஷ்பம் கல்லூரியில் (எம்.ஏ,எம்.பில்) முதுகலை கல்வி ஆராய்ச்சி பட்டம் பெற்றுள்ளார்.தற்போது நாகப்பட்டினம் மாவட்ட செயலாளராக உள்ளார்.

News March 19, 2024

திருச்சி:கல்லூரியில் பல்சுவை போட்டிகள்.

image

திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரி மேலாண்மை துறை சார்பில் லக்க்ஷயா எனும் தேசிய அளவிலான பல்சுவை போட்டிகள் கல்லூரிவளாகத்தில் நேற்று நடைபெற்றது. மேலாண்மை துறை தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார், தமிழகம் முழுவதிலிருந்தும் 25 கல்லூரிகளை சேர்ந்த 325 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர் .பிஷப் ஹீபர் கல்லூரி சாம்பியன் வென்றது .வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மென் பொறியாளர் பாலாஜி சங்கர் பரிசுகளை வழங்கினார்,

News March 19, 2024

நாமக்கல்: ரூ.1லட்சம் லிமிட் பரிவர்த்தனை காண்காணிப்பு

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 18ஆம் தேதி மாவட்ட தேர்தல் அலுவலர் மரு. ச.உமா தலைமையில் பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு வங்கியாளர்களுடன் தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய தேர்தல் அலுவலர் வங்கிக் கணக்கிலிருந்து 1 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தால்  விவரங்களை தெரிவிக்குமாறு வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News March 19, 2024

சேலத்தில் ட்ரோன்கள் பறக்க தடை!

image

சேலம் மாவட்டத்தில் இன்று ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சேலம் கெஜஜல்நாயக்கன் பட்டியில் இன்று நடைபெறும் பாஜக பரப்புரை கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி உறையாற்ற உள்ளார். இதையடுத்து, பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக, ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதித்து சேலம் எஸ்பி அருண் கபிலன் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!