Tamilnadu

News March 19, 2024

திருச்சி அருகே பயங்கர விபத்து; இருவர் மரணம் 

image

திருவெறும்பூரை அடுத்த வாழவந்தான் கோட்டையை சேர்ந்த சந்திரன் . இவரும், இவரது நண்பர் தங்கராஜ் 2பேரும் ஸ்கூட்டரில் ராவுத்தான் மேடு பிரிவு சாலையில் நேற்று சென்று கொண்டிருந்தபோது, தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சந்திரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தங்கராஜ் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்தார்.

News March 19, 2024

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பாடுகள் தீவிரம்

image

மக்களவை தேர்தலையொட்டி, நாளை வேட்பு மனு தாக்கலுக்கான பணிகள் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாளை வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர்களுடன் வரும் கட்சி நிர்வாகிகளுக்கு அலுவலகத்திற்கு செல்ல அனுமதி கிடையாது; வாகனங்களை 100 மீட்டர் தூரத்தில் நிறுத்த வேண்டும்; இதனால் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 100 மீ. தூரத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு கோடு போடும் பணி நேற்று நடந்தது.

News March 19, 2024

மயிலாடுதுறையில் பாமக போட்டி

image

பாமக நிறுவனர் ராமதாஸ்,தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் விழுப்புரம், தைலாபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில்,10 தொகுதிகள் பாமகவிற்கு ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. மயிலாடுதுறை மக்களவை தொகுதியில் பாமக போட்டியிடுகிறது.மயிலாடுதுறை மக்களவை தொகுதியில் பாமக சார்பில் ம.க. ஸ்டாலின் போட்டியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

News March 19, 2024

கரூரில் பேனர் வைத்த அரசுப் பள்ளி ஆசிரியர்!

image

கரூர் குப்பாண்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக செந்தில் குமார் என்பவர் பணியாற்றி வருகிறார்.இவர் வீட்டின் முன் மற்றும் பின்பக்கத்தில் “எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல” என குறிப்பிட்டு அவர்களின் பெயர்களையும், பதவியை குறிப்பிட்டு சிறிய அளவில் டிஜிட்டல் பேனர் அச்சிட்டு ஒட்டி வைத்துள்ளனர். இது அப்பகுதியில் வசிப்பவர்களிடம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

News March 19, 2024

விருதுநகர் மாவட்டத்தில் ஜூன் 8 வரை குறைத்தீர் கூட்டம் ரத்து

image

நாடாளுமன்ற தேர்தல் 2024 அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் ஜூன் 8ம் தேதி வரை விருதுநகர் மாவட்ட தலைநகர், கோட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் விவசாயிகள், குறை தீர்க்கும் நாள் கூட்டம், ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் உள்ளிட்ட அனைத்து கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

News March 19, 2024

புதுக்கோட்டை அருகே விபத்து; சம்பவ இடத்தில் மரணம் 

image

மணப்பாறை சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார்.தனியார் நிறுவன ஊழியரான இவர் நேற்று மோட்டார் சைக்கிளில
அன்னவாசல் அருகே  சொக்கநாதன்பட்டி என்னும் இடத்தில் சென்றபோது  அருகே சென்ற போது எதிரே வந்த 108 ஆம்புலன்ஸ் வசந்தகுமார் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.இதில் வசந்தகுமார் உயிரிழந்தார். போலீசார் 108 ஆம்புலன்ஸ் டிரைவர் உலகநாதன் என்பவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

News March 19, 2024

16வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- இருவர் மீது வழக்கு

image

சிவகங்கை சேர்ந்த 16வயது சிறுமியிடம் 2 ஆண்டுக்கு முன் வாடிப்பட்டியை சேர்ந்த வினோத் 20, காதலிப்பதாக கூறி உடலுறவு கொண்டுள்ளார். இதையடுத்து வினோத்-ன் உறவினரான கௌதம் 31, சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை தனிமையில் இருந்துள்ளனர். சிறுமி கர்ப்பமானதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் அளித்த புகாரில் சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த இருவர் மீது இன்று போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை.

News March 19, 2024

திருவாரூரில் 21ல் மதுக்கடைகள் மூடல்

image

உலக புகழ் பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவில் ஆழித்தேர் திருவிழா மார்ச் 21 ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு திருவாரூர் நகர் பகுதியில் செயல்படும் மது கடைகள், மதுக்கூடங்கள், தனியார் மதுக்கூடங்கள் ஆகியவற்றிற்கு ஒரு நாள் விடுமுறை தினமாக அறிவித்து அவற்றை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி செயல்படும் மதுபான கடைகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார்

News March 19, 2024

கோயம்பேடு: பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்கு

image

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமது பிறந்தநாளை ஒட்டி, கோயம்பேட்டில் எம்பிராய்டரி இலவச பயிற்சிக்கு டோக்கன் வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும், அனுமதி பெறாமல் சாமியானா பந்தல், பேனர் வைத்து உணவு வழங்கியதாகவும் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

News March 19, 2024

விடிய விடியஆண்களுக்கு விருந்து

image

நத்தம் அருகே உலுப்பக்குடியில் வேட்டைக்காரன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பல நூறு ஆண்டுகளாகவே ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. நேற்று நள்ளிரவில் பொங்கல் வைத்து வழிபாடு செய்த பின்னர் நேர்த்திக்கடனாக  50 ஆடுகள் பலியிடப்பட்டு ஒரே இடத்தில் சமைக்கப்பட்டு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு விடிய விடிய பிரசாதமாக வழங்கப்பட்டது.இதில் ஏராளமான ஆண்கள் பங்கேற்றனர்.

error: Content is protected !!