Tamilnadu

News March 19, 2024

திருவள்ளூர்: பயங்கரவாதிகள்…. நீதிமன்றம் உத்தரவு

image

பயங்கரவாத அமைப்பிற்கு ஆள் சேர்த்த வழக்கில் அப்துல் ரகுமான், இர்ஷாத், முகமது உசேன், ஜமீல் பாஷா ஆகிய 4 பேரை போலீசார் கைதுசெய்து புழல் சிறையில் அடைத்தனர். பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் 4 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிபதி இளவழகன் அனுமதி அளித்தார். 10 நாட்கள் போலீசார் விசாரணை முடிந்து மார்ச் 28ஆம் தேதி 4 பேரையும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.

News March 19, 2024

சென்னை: பாதுகாப்பு பணியில் 15 ஆயிரம் போலீசார்

image

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெறுவதையொட்டி தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் நேரத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்துபவர்களை பிடிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் இன்று தெரிவித்துள்ளார்.

News March 19, 2024

ராமநாதபுரம்: சிறுமிக்கு பாலியல் தொல்லை

image

இராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவை பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் (37). இவர் 14 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பாக சிறுமி அவரது பெற்றோரிடம் நடந்ததை சொல்லியுள்ளார். இதனையடுத்து சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் இராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து சுதாகரை தேடிவருகின்றனர்.

News March 19, 2024

கிருஷ்ணகிரியில் துப்பாக்கி: கலெக்டர் அதிரடி உத்தரவு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரிமம் பெற்று வைத்துள்ள துப்பாக்கிகளை அருகிலுள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்குமாறு கலெக்டர் சரயு உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. எனவே அனைத்து துப்பாக்கி உரிமைதாரர்களும் துப்பாக்கிகளை போலீசில் ஒப்படைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

News March 19, 2024

புதுச்சேரியில் வேகமாக பரவும் பொன்னுக்கு வீங்கி நோய்

image

புதுவையில் மம்ப்ஸ் எனப்படும் வைரஸ் மூலம் பரவும் பொன்னுக்கு வீங்கி நோய், கழுத்துக்கு மேற்புறமாக காதுகள் மற்றும் தாடைக்கு இடையே உள்ள பகுதிகளில் வீக்கத்தை ஏற்படுத்தும். இந்த வீக்கம் உருவாகி கடுமையான வலி காய்ச்சல் உருவாகும். இருமல், தும்மல் மூலம் மற்றவர்களுக்கு எளிதாக பரவும். இதற்கு பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று புதுவை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

News March 19, 2024

விருதுநகர் அருகே விபத்து; சம்பவ இடத்தில் மரணம்

image

விருதுநகர் அருகே மீசலூர் பகுதியை சேர்ந்தவர் மாரிசாமி (54). இவர் ஆடு வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார்.இந்நிலையில் நேற்று இரவு விருதுநகர் சிவகாசி சாலையை கடக்க முயன்ற பொழுது எதிரே வந்த அரசு பேருந்து மோதியதில் மாரிசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அவரது மனைவி அன்னலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் அரசு பேருந்து ஓட்டுனர் ராஜா மீது காவல்துறையினர் வழக்கு பதிவு.

News March 19, 2024

துப்பாக்கிகளை ஒப்படைக்க கலெக்டர் உத்தரவு

image

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் திருச்சி மாவட்டம் ஊரக பகுதி மற்றும் மாநகர பகுதியில் துப்பாக்கி உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருப்போர் தங்கள் துப்பாக்கிகளை தங்கள் பகுதிக்குட்பட்ட காவல் நிலையத்தில் உடனடியாக ஒப்படைத்து ஒப்புகை சீட்டு பெற்று கொள்ள வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் முடிந்த பிறகு துப்பாக்கிகளை திரும்ப பெற்றுக்கொள்ளலாமென செய்தி குறிப்பில் கலெக்டர் நேற்று தெரிவித்துள்ளார்.

News March 19, 2024

உரிமம் பெறப்பட்ட 516 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

image

மக்களவைத் தோ்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உரிமம் பெறப்பட்ட 516 துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மக்களவைத் தோ்தலையொட்டி உரிமம் பெற்று, துப்பாக்கி வைத்துள்ளோா் அவரவா் எல்லைக்குள்பட்ட காவல் நிலையத்தில் அவற்றை ஒப்படைக்க வேண்டும் என்பது தோ்தல் ஆணையத்தின் நிலையான உத்தரவு என கூறினார்கள்.

News March 19, 2024

சேலம்: பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் ராமதாஸ்!

image

சேலம் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் (19.03.2024) இன்று மதியம் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார். இந்நிலையில், கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் எம்பி ஆகியோர் சேலம் வருகை தந்துள்ளனர். இன்று காலை பாஜக-பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.

News March 19, 2024

சேலம்: பிரதமர் வருகை – விமான சேவை ரத்து

image

பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி, சேலத்தில் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரதமர் வரும் நேரத்தில் சென்னை – சேலம் விமானம் முழுமையாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது. காலை 11 மணிக்கு மேல் பார்வையாளர் உட்பட அனைவருக்கும் சேலம் விமான நிலையத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காலை 11 மணிக்கு மேல் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டிற்குள் விமான நிலையம் வருகிறது.

error: Content is protected !!