Tamilnadu

News April 4, 2024

திண்டுக்கல்: பெண் அடித்து கொலை

image

திண்டுக்கல்லை அடுத்த எரியோடு அருகே பாதை பிரச்னை காரணமாக ஏற்பட்ட தகராறில்  சின்னம்மாள், மகாலட்சுமி ஆகிய 2 பேரை எதிர்வீட்டை சேர்ந்த பாப்பாத்தி,  அவரது மகன் சங்கர் ஆகிய இருவரும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த சின்னம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த மகாலட்சுமி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீசார், பாப்பாத்தி, சங்கரை கைது செய்தனர். 

News April 4, 2024

திருப்பத்தூர்: ஊரை விட்டு ஒதுக்கி வைத்த கொடூரம்

image

வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏவிடம் அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பெண்ணின் குடும்பத்தாரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததால் விரக்தி அடைந்த குடும்பத்தினர் வாணியம்பாடி காவல் நிலையத்தில் நிர்வாகிகள் மீது புகார் அளித்துள்ளனர்.

News April 4, 2024

சென்னையில் டிரோன்கள் பறக்க தடை

image

வருகிற 9-ந் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் சென்னை விமான நிலையம் வருகிறார். பின்னர் காரில் நந்தனம் வழியாக பனகல் பூங்கா வருகிறார். அங்கிருந்து பாண்டிபஜார் வழியாக தேனாம்பேட்டை சிக்னல் வரை 2 கிலோ மீட்டர் தூரம் ரோடு ஷோ நடத்துகிறார். சென்னையில் பிரதமர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. சென்னை மாநகர் முழுவதுமே டிரோன்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. 

News April 4, 2024

ஈரோடு: தேர்தல் அதிகாரிகள் விபத்தில் காயம்

image

ஈரோடு மாவட்டம் பவானி அருகே SST 3’A’ Team இன்று மாலை மேட்டூர் டானி சன்னியாசிப்பட்டி ரைஸ் மில் மேடு அருகில் பறக்கும் படை அதிகாரிகள் ஜீப்பில் சென்றனர். அப்போது, எதிரே வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில், படுகாயமடைந்த உதவி இயக்குனர் பழனிசாமி உட்பட ஆறு பேர் பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 4, 2024

அரியலூர்: சிறுமி கர்ப்பம்: கைது

image

அரியலூர், ஜெயங்கொண்டம் அருகே கொக்கரணை கிராமத்தை சேர்ந்த ராஜு. இவர்,  17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி காதலித்து திருமணம் செய்து செய்துள்ளார். தற்போது சிறுமி 3 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கர்ப்பத்தை கலைத்து விட்டு தலைமறைவானார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த ராஜுவை போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்தனர். 

News April 4, 2024

சென்னை: ஏப்.7ல் தொடங்குகிறது தபால் ஒட்டு

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு முதியோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தபால் வழியாக ஓட்டளிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள 39,01,167 வாக்காளர்களில் 11,369 பேர் மாற்றுத்திறனாளிகள். 85 வயதுக்கு மேற்பட்டோர் 63,751 பேர் என மொத்தம் 75,120 பேர் உள்ளனர். 4,176 பேர்தான் இதுவரை தபால் ஓட்டு அளிக்க விருப்பம் தெரிவித்து உள்ளனர்.இந்நிலையில் ஏப்.7ம் தேதி தபால் ஒட்டு பணி தொடங்குகிறது.

News April 4, 2024

பெரம்பலூர்: 340 மது பாட்டில்கள் பறிமுதல்

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் தணிக்கை குழுவினர் இன்று(ஏப்.3) காலை பெரம்பலூர் வட்டம், அம்மாபாளையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் அரசு மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து தணிக்கை குழுவினர் உடனடியாக ரூ.51,000 மதிப்பிலான 340 மதுபாட்டில்களை கைப்பற்றினர்.

News April 4, 2024

கள்ளழகர் கோவில் உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

image

மதுரை கள்ளழகர் திருக்கோவிலில் இன்று (04.04.2024) திருக்கோவிலின் துணை ஆணையர் செயல் அலுவலர் கலைவாணன், மதுரை உதவி ஆணையர் து.வளர்மதி, தலைமையில் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை பணி நடைபெற்றது. இதில், பக்தர்கள் காணிக்கையாக ரூ.26,22,682 ரொக்கமும், 27 கிராம் தங்கம் மற்றும் 190 கிராம் வெள்ளி ஆகியவை பக்தர்களின் காணிக்கையாக கிடைக்கப்பெற்றன.

News April 4, 2024

தூத்துக்குடி: அடுத்த 3 மணி நேரத்தில் மழை

image

தூத்துக்குடியில் வழக்கத்தை விட அதிக வெப்பம் பதிவாகும் சூழல் உள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருச்செந்தூர், தூத்துக்குடி, விளாத்திக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

News April 4, 2024

கோவைக்கு வருகை தரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

image

கோவையில் வருகின்ற ஏப்ரல் 12ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மற்றும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூட்டாக பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர். இதற்காக கோவையும் பலத்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியா கூட்டணி திமுக வேட்பாளரை ஆதரித்து இருவரும் வாக்கு சேகரிக்க கோவை வருகை தர உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!