Tamilnadu

News April 7, 2024

நெல்லையில் நாளை கோலம் வரையும் நிகழ்ச்சி

image

பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாளை (ஏப்.8) நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஒரு லட்சம் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் இணைந்து 20000 தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி கோலங்கள் வரையும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திகேயன் இன்று அறிவித்துள்ளார்.

News April 7, 2024

பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்ட ஆட்சியர்

image

மக்களவைத் பொதுதேர்தல் 2024 முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு என்னும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான பிரதீப் குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் அங்கு இருக்கும் அதிகாரிகளுக்கு தக்க ஆலோசனைகளை வழங்கினார்.

News April 7, 2024

அதிகாரிகள் கண்காணிப்பில் பாஜக வேட்பாளர்

image

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பாஜக பிரமுகர் சதீஷ் உள்பட சிலரிடம் நடத்திய சோதனையில் கோடி கணக்கில் பணம் சிக்கியது. அந்த பணம் நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக கொண்டு வரப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்விவகாரம் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தலில் சிக்கலை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் தேர்தல் அதிகாரிகள் நயினார் நாகேந்திரனை கண்காணித்து வருகின்றனர்.

News April 7, 2024

வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு

image

கடலூர் புனித வளனார் பள்ளியில் நாடாளுமன்ற தேர்தலில் பணிபுரியும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு இரண்டாம் கட்டமாக இன்று நடைபெற்றது. இதனை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் அபிநயா பார்வையிட்டார். அருகில் தாசில்தார் பலராமன் உள்ளார். இப்பயிற்சி வகுப்பு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாள்வது, வாக்கு சீட்டை சரி பார்ப்பது போன்ற ஏராளமான பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. 

News April 7, 2024

பூண்டி மாதா பேராலயத்தில் புதுமை இரவு வழிபாடு

image

திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் நேற்று இரவு செங்கை மறை மாவட்டம் போரூர் நுகும்பல் அருள்தந்தை. அலெக்ஸாண்டர் வழிகாட்டலில் சிறப்பு வழிபாடு நடந்தது. மாலை 5.30 மணிக்கு அருள்பொழிவு திருப்பலி நடைபெற்றது. 7.00 மணிக்கு எரியும் மெழுகுத்திரியுடன் சிறப்பு செபமாலை தேர்பவனி நடைபெற்றது. பின்னர் குணமளிக்கும் நற்செய்தி செப வழிபாடும், ஆசீர் வழங்குதலும் நடைபெற்றன.

News April 7, 2024

கோவை: மாணவருக்கு கத்தி குத்து

image

தர்மபுரியை சேர்ந்த ராமச்சந்திரன், கிருஷ்ணகிரியை சேர்ந்த அருண்குமார். இருவரும் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் அறை எடுத்து தங்கி அங்குள்ள கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டை சுத்தம் செய்வது தொடர்பாக இருவருக்கும் நேற்று(ஏப். 6) வாக்குவாதம் ஏற்பட்டு அருண்குமார் கத்தியால் ராமச்சந்திரனை குத்தியுள்ளார். இப்புகாரின் பேரில் போலீசார் அருண்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

News April 7, 2024

2-ஆம் கட்ட பயிற்சி ஏற்பாடுகள் குறித்து ஆய்வு

image

கடலூர் பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு கடலூர் புனித வளனார் மேல்நிலைப்பள்ளியில் 2-ம் கட்ட பயிற்சி பெறும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் அஞ்சல் வாக்கு செலுத்துவதற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலர் (ம) மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் தம்புராஜ் இன்று (07.04.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News April 7, 2024

அஞ்சல் வாக்குகளை சேவை மையத்தில் செலுத்தலாம்

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சிவகங்கை தொகுதியில் தேர்தல் பணிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள அனைத்து நிலை அரசு அலுவலர்களும், அஞ்சல் வாக்குகளை சேவை மையத்தில் செலுத்தலாம். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அனைத்து அலுவலர்களும் வாக்களிக்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்  இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 7, 2024

சென்னையில் போக்குவரத்து மாற்றம்

image

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடைபெறும் தினங்களில் மேற்கொள்ளப்படவுள்ள போக்குவரத்து மாற்றங்களை வெளியிட்டுள்ளது. நாளை முதல் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை பெல்ஸ் சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. வாலாஜா சாலையில் இருந்து பெல்சாலை செல்ல வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளன.

News April 7, 2024

வாக்குசாவடி அலுவலர்களுக்கு பயிற்சி

image

விருதுநகர், சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று (07.04.2024) வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்பாடு தொடர்பாக 2ம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது. பயிற்சி வகுப்பை பார்வையிட்ட மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன், வாக்குசாவடி அலுவலர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்து விளங்கினார்.

error: Content is protected !!