Tamilnadu

News April 9, 2024

ரயில் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை

image

மக்களவைப் பொதுத்தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நெல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுவருகின்றன. கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டதை தொடர்ந்து முக்கிய இடங்களில் வெடிகுண்டு சோதனை நடத்தப்படுகிறது. நேற்று (ஏப்ரல் 8 ) வள்ளியூர் ரயில் நிலையத்தில் மோப்பநாய் உதவியுடன் போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தினர்.

News April 9, 2024

கிருஷ்ணகிரியில் 500 கிராம் தங்கம், ரூ.30 லட்சம் பறிமுதல்

image

ஒசூர் அருகே தமிழக எல்லையான ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று வாகனச் சோதனை செய்தபோது அந்த வழியாக வந்த சொகுசு பஸ்ஸை சோதனையிட்டனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுசென்ற ரூ.30 லட்சம் 50 ஆயிரம் ரொக்கம், 500 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் கோவையைச் சேர்ந்த நகை வியாபாரி ராஜ்குமார் என்பவர் ஹைதராபாத்தில் உள்ள தங்க நகைகளை எடுத்துச் சென்றது தெரியவந்தது.

News April 9, 2024

மதுரை மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை.!

image

நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினம் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களும் விடுமுறை அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சங்கீதா அறிவித்துள்ளார். மேலும் வாக்குப்பதிவு நாளன்று விடுமுறை விடாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News April 9, 2024

வேலூர் எஸ்பி அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்

image

வேலூர் மோட்டூரை சேர்ந்தவர் சுஜாதா (19). இவர் கிரீன் சர்க்கிள் அருகே ஓட்டலில் வேலை செய்துவந்தார். இவரும் அதே ஓட்டலில் வேலை செய்துவந்த சத்துவாச்சாரியை சேர்ந்த இளங்கோவன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே இருவரும் நேற்று (ஏப்ரல் 8) ஆற்காடு சாலையில் உள்ள கோயிலில் திருமணம் செய்துகொண்டு பாதுகாப்பு கேட்டு வேலூர் எஸ்பி அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.

News April 9, 2024

ஓட்டு எண்ணிக்கை மையத்தில் முன்னேற்பாடுகள்

image

நெல்லை பார்லிமென்ட் தேர்தல் ஓட்டுப் பதிவு வரும் 19ஆம் தேதி நடக்கிறது. இதற்கான ஓட்டு எண்ணிக்கை வரும் மே மாதம் 4ம் தேதி பாளையங்கோட்டை அரசு என்ஜினியரிங் கல்லூரியில் நடத்தப்படுகிறது. இந்த ஓட்டு எண்ணிக்கை மையத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. ஓட்டு பதிவு இயந்திரங்களை வைக்க அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News April 9, 2024

திமுக செயலாளர் வீட்டில் ரெய்டு

image

சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் சிற்றரசு வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. ஜாபர் சாதிக், திரைப்பட இயக்குநர் அமீர் அலுவலகத்தில் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வரும் நிலையில், சிற்றரசு வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. போதைப் பொருள் கடத்தில் வழக்கு தொடர்பாக் 25க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

News April 9, 2024

3 ஆம் கட்ட பயிற்சிக்கு தயாராகுங்கள்

image

ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ள திருவண்ணாமலை பாராளுமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான 3 ஆம் கட்ட பயிற்சி வகுப்பு 13 ஆம் தேதி சனிக்கிழமை அன்று ஏற்கனவே நடைபெற்ற பயிற்சி மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளதால் அனைத்து வாக்குப்பதிவு அலுவலர்களும் தவறாமல் பயிற்சியில் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 9, 2024

மாட்டுத் தொழுவமாக மாறிய நூலக கட்டடம்

image

திருவாலங்காடு ஒன்றியம், சின்னமண்டலி ஊராட்சியில் அரசு பள்ளி அருகே, உள்ள கிளை நூலகம் பழுதடைந்து காணப்பட்டது. 2022-23ஆம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ.1,18,000 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் இந்த நூலகம் சீரமைக்கப்பட்டது. தற்போது கட்டடம் சீரமைக்கப்பட்டு 8 மாதங்கள் ஆகியும் இதுவரை பயன்பாட்டிற்கு வராததால் அப்பகுதிவாசிகள் நூலக வளாகத்தை மாட்டுத்தொழுவமாக பயன்படுத்தி வருகின்றனர்.

News April 9, 2024

துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு

image

கடவூர் ஒன்றியம் தரகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் துணை ராணுவ படையினர் கொடி அணிவகுப்பு பேரணி நேற்று நடைபெற்றது. இந்த பேரணியை குளித்தலை நகர துணைக்காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி மணப்பாறை மைலம்பட்டி பிரதான சாலை, கடைவீதி, பேருந்து நிலையம் வழியாக கடவூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தை அடைந்தது.

News April 9, 2024

கொடைக்கானல் மேல்மலை வனப்பகுதியில் காட்டுத்தீ

image

கொடைக்கானல் மேல்மலை வனப்பகுதியில் காட்டடுத்தீ பற்றி எரிந்து வருகிறது. பூப்பாறை, மன்னவனூர் வனச்சரக எல்லையான பாரிக்கோம்பை வனப்பகுதியில் திடீர் காட்டுத்தீ ஏற்பட்டது. வெம்பாடி பகுதிக்கு காட்டுத்தீ பரவாமல் தடுக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். காட்டுத்தீ காரணமாக நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மூலிகைச்செடிகள், மரங்கள் எரிந்து நாசமாகியது.

error: Content is protected !!