India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக மதுரையிலிருந்து ஏப்ரல் 17, 18ம் ஆகிய தேதிகளில் அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது. தேர்தலை முன்னிட்டு சராசரியாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 2000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக (09-04-24) அறிவிக்கப்பட்டுள்ளது.
கூத்தாநல்லூர் அருகே உள்ள பொதக்குடி நோன்பு பெருநாள் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரமலான் சிறப்பு தொழுகை (பிறை தெரிந்தவுடன்) பொதக்குடி நூரியா தெருவில் நூருல்லா நினைவு விளையாட்டு மைதானத்தில் காலை 7.15 மணிக்கும், சவுக்கத்தலி தெருவில் அமைந்துள்ள ஜன்னத்துல் பிர்தௌஸ் பள்ளிவாசலில் காலை 7 மணிக்கும், அப்துல்லா தெருவில் அமைந்துள்ள பாத்திமா பள்ளிவாசலில் காலை 6.45 மணிக்கும் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலையொட்டி தேர்தல் விதிமுறைகள் அமுலுக்கு வந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள கட்சி தலைவர்களின் சிலைகள் மற்றும் கட்சி கொடிகள் துணிகளை வைத்து மூடி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாணியம்பாடி நகர பகுதியில் அதிமுக சின்னம் இரட்டை இலை திறந்த நிலையில் இருப்பதால் அவற்றை மூட தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
திண்டுக்கல் முத்தனம்பட்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான பூங்கொடி, இன்றுநேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மக்களவை தொகுதியில் நாதக சார்பில் கார்மேகம் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த சீமான், பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசினார். அப்போது, “தமிழ் மக்களிடையே அநீதி, லஞ்சம், ஊழல், இயற்கை சுரண்டல் ஆகியவற்றை சகித்துக் கொண்டதால் இங்கே அடிமை இனம் உருவாகி வருகிறது” என்றார்
புதுச்சேரி மீன்வளத்துறை சார்பு செயலர் புனிதமேரி வெளியிட்ட உத்தரவில், இந்திய அரசின் மீன்வள அமைச்சகத்தின் துணை ஆணையர் உத்தரவுப்படி மீன்வளத்தை பாதுகாத்திட கடந்த ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தியது போல், வரும் ஏப்ரல். 15 ஆம் தேதி முதல் ஜூன்.14 ஆம் தேதி வரை 61 நாட்கள் புதுச்சேரி, காரைக்கால், ஏனாமில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
போடிநாயக்கனூர் பகுதிக்கு வருகை தந்த திமுக பேச்சாளர் திருச்சி சிவா திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது வருகின்ற 19ஆம் தேதி ஏழைகளுக்கும், பணக்காரருக்கும் நடைபெறும் தேர்தல் இது; இந்திய நாட்டின் தலையெழுத்தை மாற்றக்கூடிய உங்கள் வாக்கை திமுகவிற்கு வாக்களியுங்கள் என்று கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
புதுக்கோட்டை நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற கீழ நான்காம் விதி வடபுறம் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலின் திருவிழா கடந்த நேற்று நடைபெற்றது. இந்நிலையில் திருவிழாவின் நிறைவாக மஞ்சள் நீராட்டு விழா மற்றும் முளைப்பாரி எடுக்கும் நிகழ்வு இன்று அதி விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் வழிபட்டு சென்றனர்.
எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனர் முன்னாள் அமைச்சர் ஆர்எம் வீரப்பன் மறைவையொட்டி நாமக்கல்லில் எம்ஜிஆர் கழகத்தின் மாஜி மாவட்ட செயலாளர் வெள்ளையன் தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பாஜக சார்பில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் மனோகரன் எம்ஜிஆர் கழக நிர்வாகி பழனி பாஜக மாவட்ட விருந்தோம்பல் பிரிவு தலைவர் சின்னசாமி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைதேர்தலை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் தோவாளை ஊராட்சி அலுவலகம் அருகே மலர்களால் தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி போடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.