India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முஸ்லிம்களின் ரம்ஜான் பண்டிகை விடுமுறை தினம் ஏப்ரல்-11 என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் பிறை காணும் தினத்தை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் இந்த நாள் மாறுவது வழக்கம். இந்த வகையில் கேரள மாநிலம் பொன்னானியில் ஷவ்வால் பிறை இன்று வானில் தென்பட்டது. இதை முன்னிட்டு கேரளா மற்றும் குமரி மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகை நாளை (ஏப்ரல்-10) கொண்டாடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் திமுக கூட்டணியில் போட்டியிடவுள்ளனர்.பானை சின்னத்தில் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிதம்பரம் புற வழி சாலையில் உள்ள விசிக தலைவர் திருமாவளவன் வீட்டில் இன்று இரவு ஐடி ரெய்டு 45 நிமிடங்கள் நடந்ததில் எதுவும் கிடைக்கவில்லை என வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தி.மலை வட்டாட்சியர் அலுவலகத்தில் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் இன்று (09.04.2024) ஆய்வு செய்தார். உடன் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர், அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
85 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்கும் விதமாக அவர்கள் வசிக்கும் வீடுகளுக்கே நேரடியாக சென்று அலுவலர்கள் தபால் வாக்கினை சேகரித்தனர். பின்னர், சீலிடப்பட்ட வாக்கு பெட்டியில் செலுத்தும் பணியினை இன்று ஆம்பூர் கஸ்பா புதுத்தெரு பகுதியில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமியை முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் உள்ளிட்டோர் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்து வாக்கு சேகரித்தனர். எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகம்மது முபாரக்கிற்கு , தங்களுடைய முழு ஆதரவையும் இரட்டை இலை சின்னத்துக்கு தருமாறு கேட்டுக்கொண்டனர்.
திருவண்ணாமலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மக்கள் குடை பிடித்துக் கொண்டும், ஹெல்மெட் அணிந்து செல்கின்றனர்.
இன்றைய அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி பாரன்ஹீட்; 38.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, பல வாக்குறுதிகளை திமுக கோவைக்கு வழங்கி வந்துள்ளது. அதில், கோவையில் இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை வைத்து திமுக ஒரு புது தேர்தல் வாக்குறுதியை வழங்கி இருக்கிறது. அதன்படி, கோவை மெட்ரோ ரயில் சேவை விரைவில் செயல்படுத்தப்பட்டு அந்தத் திட்டம் திருப்பூர் வரை நீடிக்க வழி வேலை செய்யப்படும் என இன்று (ஏப்ரல்.09) கூறப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் அண்ணாமலை (கோவை), மத்திய இணையமைச்சர் எல்.முருகன் (நீலகிரி), வசந்தராஜன் (பொள்ளாச்சி), ஏ.பி.முருகானந்தம் (திருப்பூர்) ஆகியோரை ஆதரித்து மேட்டுப்பாளையத்தில் நாளை (மார்ச்.10) நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். இதற்கு 4 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில், கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறப்படும் வகையில் உள்ளது என தேர்தல் ஆணையத்திடம் அதிமுக நிர்வாகி இன்பதுரை இன்று புகாரளித்துள்ளார். அந்த புகாரில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் ராஜா, உதயநிதி மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் என்று கூறியுள்ளார்.
தோகைமலை அருகே உள்ள கொண்டம நாயக்கன்பட்டியில் மாடு மாலை தாண்டும் விழாவிற்கு பல மாவட்டங்களில் இருந்து 14 மந்தையர்கள் கலந்து கொண்டனர். எல்லை கோட்டை நோக்கி சுமார் 200 க்கும் மேற்பட்ட சலை எருது மாடுகள் ஓடி வந்தது. இதில், திருச்சி மாவட்டம் கொண்டமநாயக்கன்பட்டி கோலக்கம்பிலி நாயக்கர் மந்தை சின்னக்காரி குழு மாடு முதலாவதாக ஓடி வந்து முதல் இடத்தை பிடித்தது. இதற்கு தங்க காசு பரிசாக வழங்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.