India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரி மக்களவைத் பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல்-19ஆம் தேதி அன்று நடைபெறுவதையொட்டி அனைத்து பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் கன்னியாகுமரி சட்டமன்றத்திற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள தோவாளை வட்டாட்சியர் அலுவலகத்தினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
ரமலான் பண்டிகையை முன்னிட்டு புதுவை முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “ரமலான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துகள். ரமலான் என்பது நோன்பு மட்டும் கடைப்பிடிப்பதை நோக்கமாகக் கொள்ளாமல், பசித்தவா்களுக்கு உணவளித்தல், ஏழைகளுக்கு உதவுதல், மன்னித்தல் போன்ற நற்பண்புகளை தொடா்ந்து கடைப்பிடிப்பதை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
அம்மாபேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட, ஊமாரெட்டியூர், குருவரெட்டியூர், சென்னம்பட்டி ஆகிய பகுதிகளில், திருப்பூர் மக்களவைத் தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியின் சார்பாக போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்புராயன் நேற்று மாலை பிரச்சாரம் செய்தார். இதில் அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம், அம்மாபேட்டை திமுக ஒன்றிய செயலாளர் சரவணன் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.
தஞ்சை தொகுதி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பாளர்களின் சின்னங்கள் பொருத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு மேற்கொள்ளப்பட்டு சரிபார்க்கும் பணி நடைபெறுவதை நேற்று தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருப்பெரும்புதூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருவதை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சரவண கண்ணன்,அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட வெண்மணி ஆர்ச் பகுதியில் நேற்று பறக்கும் படை அதிகாரி சுந்தர் ராஜன் மற்றும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது திருத்துறைப்பூண்டி தாலுகா மடப்புரம் பகுதியைச் சேர்ந்த பழனிவேலு என்பவர் உரிய ஆவணங்களின்றி தனது ஸ்கூட்டரில் எடுத்துச் சென்ற ரூ.59,610-ஐ பறிமுதல் செய்து கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
மண்ணச்சநல்லூர் வட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று உண்டியல் எண்ணும் பணி கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் நடைபெற்றது. அதில், ரொக்க பணமாக ரூ.92 லட்சத்து 93 ஆயிரத்து 585, தங்கம் 1 கிலோ 296 கிராமும், வெள்ளி 2 கிலோ 579 கிராமும், அயல்நாட்டு ரூபாய் நோட்டுகள் 114 மற்றும் அயல் நாட்டு நாணயங்கள் 1288 காணிக்கையாக கிடைக்கப் பெறப்பட்டன.
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே தேர்தல் பிரச்சாரத்தில் தேவர் படத்திற்கு எம்எல்ஏ மரியாதை செலுத்தினார். நெல்லை பாராளுமன்ற தேர்தலில் காங். வேட்பாளர் ஆதரித்து ரூபி மனோகரன் எம்எல்ஏ களக்காடு பகுதியில் நேற்று (ஏப். 10) இரவு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது வடுகச்சிமதில் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் படத்திற்கு அவர் மரியாதை செலுத்தினார். அதில் அப்பகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி ராஜா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவர் வழக்கம் போல் இரவு தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு சென்றார். மீண்டும் மறுநாள் காலை பார்த்த போது இரு சக்கர வாகனம் திருடு போனது தெரியவந்தது. இது குறித்த புகாரில் கிருபா கணேசன் என்பவரை நேற்று கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.
தேவிபட்டினம் முனியசாமி என்பவரிடம் அவரின் தொழிலை மேம்படுத்த ரூ.15 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் ஆவண செலவாக ரூ.14 லட்சம் வாங்கினாராம். கடன் வாங்கி தராமல் தான் வாங்கிய பணத்திற்காக போலி செக் கொடுத்து ஏமாற்றியதாக ராமநாதபுரம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். வழக்கு விசாரணைக்கு நேற்று பவர்ஸ்டார் ஆஜராகவில்லை. இதனால் நீதிபதி வழக்கினை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Sorry, no posts matched your criteria.