India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராணிப்பேட்டை நகரில் இன்று (ஆகஸ்ட் 22) வட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 8ஆம் வகுப்பு முதல் இளநிலை, பொறியியல் பட்டதாரி வரை கலந்து கொள்ளலாம். <
ஊட்டி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், குரூப் 2, 2A, ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB), பணியாளர் தேர்வு ஆணையம் (SSC), இரயில்வே தேர்வு வாரியம் (RRB), மற்றும் கூட்டுறவுத் துறை தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. மேலும் தகவல்களைத் தெரிந்துகொள்ள, ஊட்டி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அல்லது 0423-2444004 மற்றும் 9499055948 அழைக்கலாம். இதனை ஷேர் பண்ணுங்க!
அறந்தாங்கியை சேர்ந்த சுரேஷ்பாபு (17), பிரகாஷ் (18), சவுந்தர்ராஜ் ஆகிய 3 பேரும் ஆவுடையார்கோவில் அரசு கல்லூரியில் தேர்வு முடித்து விட்டு 3 பேரும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் நானாக்குடி அருகே சென்ற பொழுது எதிர்பாராத விதமாக சரக்கு வேன் மீது மோதியுள்ளனர். இதில் சுரேஷ்பாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 2 நபர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருப்பூர் மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கிழ் இலவச ’ஆடை விற்பனையாளர்’ பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சிக்கு 10th படித்திருந்தாலே போதுமானது. 30 நாட்கள் நடக்கும் இந்தப் பயிற்சிக்கு 181 காலியிடங்கள் உள்ளன. மேலும், பயிற்சி பெறுவோர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதியாக வழங்கபடும். இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <
கரூர்: சின்னகோதுரைப் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி(52). இவர் தனது மனைவி செல்வி(44), மகள் தனுசியா(14) ஆகியோருடன் காரில் கரூரை நோக்கி வந்துகொண்டிருந்தார். அப்போது க.பரமத்தி அருகே பவுத்திரம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் லாரியில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பொன்னுசாமி பலியானார். அவரது மனைவி, மகள் தற்போது மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். இதுகுறித்து க.பரமத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.
திண்டுக்கல்: சாணார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுலைமான் சேட்(52. வியாபாரியான இவரது எண்ணிற்கு சில நாட்களுக்கு முன் குறுந்தகவலில் ’இணையதளம் மூலம் வர்த்தகம் செய்தால் அதிக வருமானம் பெறலாம்!’ எனக் கூறி அவரை குழுவில் இணைத்து, சுமார் ரூ.8 லட்சம் வரை வாங்கி ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுபோன்ற நபர்கள் உங்களை அணுகினால் உடனே 1930 என்ற எண்ணை அழைக்கவும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பொது விநியோகப் பொருட்கள் கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட ஆம்னி வேன், லாரி உள்ளிட்ட வாகனங்களும், வந்தவாசி உட்பட 9 வட்டாட்சியர்கள் பயன்படுத்திய பழைய ஜீப்புகளும் பொது ஏலத்தில் விடப்படுகின்றன. ஏலம் 9.9.2025 அன்று காலை 11 மணிக்கு திருவண்ணாமலை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் என கலெக்டர் க.தர்ப்பகராஜ் அறிவித்துள்ளார்.
கடலூர் அருகே சேடப்பாளையத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (36). சமையல் தொழிலாளியான இவர், சம்பவத்தன்று இரவு தன் வீட்டின் கதவுகளை திறந்து வைத்து விட்டு வெளியே படுத்து உறங்கியுள்ளார். இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் சாமர்த்தியமாக வீட்டில் புகுந்து, அங்கிருந்த 2½ பவுன் தங்கம், வெள்ளி, செல்போன்கள் என ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து முதுநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுரை மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் IT Coordinator, Lab Assistant பணிக்கு காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு இன்று 22ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்ப படிவத்தை <
காஞ்சிபுரம் எஸ்எஸ்கேவி மேல்நிலைப்பள்ளியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நாளை(ஆக.23) நடக்கிறது. இதில், 75க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் 10,000 பேருக்கு வேலை வழங்க உறுதி செய்யப்பட்டுள்ளது. 10th, 12th, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் இதில் கலந்து கொண்டு வேலை வாய்ப்புகளை பெறலாம். வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.