India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேனி மாவட்டம் கம்பத்தில் ஸ்ரீ கௌமாரியம்மன் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று மாலை 6 மணி அளவில் கோலாகலமாக தொடங்கியது. ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் கம்பம் கௌமாரியம்மன் கோவில் திருவிழா ஒரு வார காலம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நேற்று நடைபெற்ற நிகழ்வில் கம்பம் பகுதியை சுற்றியுள்ள கிராமத்தில் உள்ள பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மக்களவை பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, அனைத்து நிலை பணியாளர்கள் வாக்களிக்கும் பொருட்டு வாக்குப் பதிவு நாளான ஏப்.19 அன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் அன்று வாக்களிப்பதற்கு ஏதுவாக, நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்காதபட்சத்தில், அது தொடர்பான புகார்களை 0451-2461429 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்துக்குள் நேற்று(ஏப்.17) போலீசாரின் ரோந்து பணி மற்றும் மக்களவைத் தேர்தலுக்கு தேர்தல் வாக்கு பெட்டிகளை கொண்டு செல்லும் வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டது. வாக்குப்பெட்டி வாகனங்களுடன் பாதுகாப்பும் அளிக்கும் வகையில் செல்ல ஏதுவாக, காவல்துறை வாகனங்களும் தயாரான நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.
உடுமலை, பள்ளபாளையம் கிராமத்தில் செங்காட்டு மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 9-ம் தேதி கணபதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது அதை தொடர்ந்து 10ஆம் தேதி வாஸ்து சாந்தி கிராம சாந்தி நடைபெற்றது 11ஆம் தேதி கம்பம் போடுதல் மற்றும் உருமால் கட்டு சீறும் ,
12 ஆம் தேதி சக்தி கும்பம் அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது . இந்த நிலையில் செங்காட்டம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்
தமிழகத்தில் ஏப்.19ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையடுத்து வாக்காளர்களுக்கு கொடுக்க பணம், பரிசு பொருள் கொண்டு செல்வதை தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் வரும் வாகனங்களில் தீவிர சோதனை நடத்தி வருகினர்.
மயிலாடுதுறையில் 100% வாக்கு பதிவு நடைபெற வேண்டி காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனநாயக கடமை நிறைவேற்றுவதற்கு வெளி மாவட்டத்தில் இருந்து இம்மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் 265 காவலர்களுக்கு தபால் ஓட்டும் , 425 காவலர்களுக்கு தேர்தல் பணி சான்றை பயன்படுத்தி அவர்கள் பணிபுரியும் இடத்திலேயே வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் வேட்பாளர் ஜான்சிராணி உள்ளிட்ட 14 பேர் களம் காணுகின்றனர். தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில், இறுதி கட்டப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்ட வேட்பாளர்கள் தங்களது பிரச்சாரத்தை நிறைவு செய்தனர்.
கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று இரவு கடலூர் காவல் ஆய்வாளர் இராஜாராம், சிதம்பரம் காவல் ஆய்வாளர் சுஜாதா, விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் குணபாலன், நெய்வேலி காவல் ஆய்வாளர் வீரசேகரன் மற்றும் பண்ருட்டியில் காவல் ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக மங்கலத்தில் உள்ள ஸ்ரீ ஆயிரத்தெண் விநாயகர் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 5 ஆம் நாளான நேற்று இரவு சுவாமி விநாயகர் மூஷிக வாகனத்திலும் சுவாமி காள தீஸ்வரர், அம்மன் கல்யாணசுந்தரி ஆகியோர் ரிஷப வாகனத்திலும் தனித்தனியே எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
காரைக்காலில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி 17 ஆம் தேதி மாலை 6 மணி முதல் 20 ஆம் தேதி காலை 6 மணி வரை சட்டவிரோதமான கூட்டம், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்துவதும் கருத்துக்கணிப்பு முடிவுகள் காட்டுவதும் தடை செய்யப்படுகிறது. இந்த உத்தரவை மீறினால் இந்திய தண்டனை சட்டம் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் உத்தரவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.