India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகை மாவட்டத்தில் நூறு சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரம் இன்று நாகை பேருந்து வளாகத்தில் நடைப்பெற்றது.
இதில் “என் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரத்தில், கலெக்டர் ஜானிடாம் வர்கிஸ் மற்றும் போலீஸ் சூப்ரண்ட் ஹர்சிங் ஆகியோர் ஈடுபட்டனர்.
மதுரை பொதிகை நகர் பகுதியில் கடந்த வாரம் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமியை வளர்த்து வந்த அவரது பெரியப்பா ராணுவ வீரர் செந்தில்குமார் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொலை செய்ததும், அவரது மனைவி சந்திரா கொலையை மறைக்க துணையாக இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அ.தி.மு.க.வின் 33 வேட்பாளர்களும் இன்று மதியம் 12 மணிக்கு அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலகத்துக்கு சென்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.அ.தி.மு.க. வேட்பாளர்களான தென்சென்னையில் ஜெயவர்தன், வடசென்னையில் ராயபுரம் மனோ, காஞ்சிபுரம் தனி தொகுதியில் பெரும்பாக்கம் ராஜசேகர், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பிரேம்குமார் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சிவகங்கை லோக்சபா தொகுதியில் காங். சார்பில் போட்டியிட கார்த்திக் சிதம்பரம் தனது வேட்புமனுவை கலெக்டரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ஆஷா அஜித்திடம் வழங்கினார். அருகில் அமைச்சர்கள் ரகுபதி, பெரியகருப்பன், மெய்யநாதன் ஆகியோர் உள்ளனர்.
நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இண்டியா கூட்டணி மற்றும் திமுக கூட்டணி கட்சி கொங்குநாடு மக்கள் கட்சி வேட்பாளர் எஸ்.வி.மாதேஸ்வரன் இன்று 25.03.2024 நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இ.ஆ.ப. அவர்களிடம் வேட்புமனு தாக்கல் வழங்கினார். இதில் நாமக்கல் மாநிலங்களவை உறுப்பினர் இராஜேஸ்குமார், வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான பிரதீப் குமாரிடம் கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் திமுக மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மதிவாணன், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக. செயலாளர் கே.கே.செல்லப் பாண்டியன், இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர்.
ஆரணி மக்களவை தொகுதி அதிமுக தேர்தல் அலுவலகத்தை இன்று ஆரணியில் அதிமுக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் ஆரணி தொகுதி அதிமுக வேட்பாளர் ஜி வி கஜேந்திரன், முன்னாள் அமைச்சர்கள் சேவூர் இராமச்சந்திரன், முக்கூர் சுப்பிரமணியன், மாவட்ட செயலாளர்கள் தூசி மோகன், ஜெயசுதா, பன்னீர்செல்வம், பாரிபாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் செந்தில்நாதன், தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியர் தங்கவேலிடம் வேட்பு மனுவை வழங்கினார்கள். இதில் வேட்பு மனுவை சரிபார்த்து பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், பின்னர் உறுதிமொழி ஏற்பு நகலை பூர்த்தி செய்து தருமாறு வேட்பாளர் செந்தில்நாதனிடம் வழங்கினார்கள். உடன் கூட்டணி கட்சி (ம) கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் ஆட்சியர் ஜானிடாம் வர்கிஷ் முன்னிலையில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக கூட்டணியின் ஜீ.சுர்சித் சங்கர் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதிமுக அவைத்தலைவர் ஜீவானந்தம்,
அதிமுக நகர செயலாளர் தங்க கதிரவன், தேமுதிக மாவட்ட செயலாளர் பிரபாகரன், எஸ்டிபிஐ, திருவாரூர் மாவட்ட பொதுச் செயலாளர் அஜிஸ் உடன் உள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 27-ஆம் தேதியுடன் நிறைவுப் பெற உள்ள நிலையில் சேலம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விக்னேஷ் இன்று தனது வேட்பு மனுவை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர் பிருந்தா தேவியிடம் தாக்கல் செய்தார்.
Sorry, no posts matched your criteria.