India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் வருகின்ற நாடளுமன்ற தேர்தல் ஏப்.19 இல் நடைபெற உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் வாக்குபதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் ஏப்.17 முதல் ஏப்.19 ஆம் தேதி வரை மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜீன்.4 ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட அரசு தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 3வது நாளாக சிறுத்தையை பிடிக்க மதுரை மாவட்டத்தில் இருந்து 3 ராட்சத கூண்டுகள், வலைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. சிறுத்தை நடமாடிய பகுதிகளில் சென்சார் பொருந்திய கேமாராக்களுடன் பணிகள் தீவிரமடைந்துள்ளன. மேலும் ஆனைமலை புலிகள் காப்பக வன, வேட்டை தடுப்பு காவலர்கள் சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
சிதம்பரம் மக்களவைத் தேர்தல் முடிவு வரை கேன்களில் பெட்ரோல் வாங்க கூடாது என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்கு பதிவு நடைபெற உள்ளது.குறுகிய நாட்டிலே உள்ள நிலையில் மேலும் கட்சித் தலைவர்களின் தேர்தல் பொதுக்கூட்டம் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் பாதுகாப்பு நலன் கருதி பெட்ரோல் பங்குகளில் கேன்களில் வழங்கக்கூடாது மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
முகூர்த்த நாளான இன்று முதல் 3 நாட்களுக்கு சென்னையில் இருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு இன்று 265 பேருந்துகளும், நாளை 350 பேருந்துகளும் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் உப கோயிலான நந்திகேஸ்வரர் திருக்கோவிலில் மராமத்து பணிகள் நடைபெற்று குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு 1ம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. பின்னர் நேற்று காலை ராஜகோபுரம், செவ்வந்தி, விநாயகர், ஆஞ்சநேயர், நந்திகேஸ்வரர் சந்ததிகளுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நாமக்கல் பாராளுமன்ற தொகுதி திமுக மாவட்ட தலைமை தேர்தல் பணிமனை அலுவலகத்தில் பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் தேர்தல் பணி சம்பந்தமாக நேற்று ஆலோசனை மேற்கொண்டார். இதில் மக்களிடையே எவ்வாறு வாக்கு சேகரிக்க வேண்டும், கட்சி சாதனைகள் பற்றி எடுத்துக்கூறினார். மேலும் உடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நேற்று (ஏப்ரல் 4) நடத்திய சோதனையில் கள்ளச்சாராயம் 60 லிட்டர், 77 மது பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து 9 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் எச்சரித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட வஉசி வீதி, சீனிவாச வீதி, பி.வி.கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் வசந்த ராஜனுக்கு நகர தலைவர் கண்ணாயிரம் தலைமையில் தாமரை சின்னத்தில் வாக்குகள் சேகரிக்கப்பட்டது. உடுமலை நகர பாஜக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நார்த்தமாலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு வரும் ஏப்ரல் 8ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்தும், அதை ஈடுசெய்ய ஏப்ரல் 13ஆம் தேதி வேலைநாளாக இருக்கும் என உத்தரவிட்டுள்ளது.
சேலம், அம்மாப்பேட்டை பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று(ஏப்.4) மாலை வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், கட்சியை எப்படி நடத்த வேண்டும் என பாஜகவுக்கு ஸ்டாலின் பாடம் எடுக்க வேண்டிய தேவையில்லை என கூறினார்.
Sorry, no posts matched your criteria.