India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூரில் மக்களவைத் தேர்தல் தொடர்பான இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தா.கிறிஸ்துராஜ் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் மாவட்டத்தில் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
திருப்பூர் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சுப்பராயன் மனுவில், கையிருப்பு மற்றும் வங்கியிருப்பு ரொக்கமாக 79 ஆயிரத்து 647 ரூபாய்; மனைவி கையிருப்பாக இரண்டு லட்சத்து 78 ஆயிரத்து 584 ரூபாய் இருப்பதாக தெரிவித்துள்ளார். மனைவி பெயரில் மட்டும், அசையும் சொத்தாக 5.17 லட்சம் ரூபாய்; அசையா சொத்தாக, 95.55 லட்சம் ரூபாய்க்கும், 1.50 லட்சம் அளவுக்கு நகைக்கடனும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இண்டி கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-கிற்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டு வேட்பாளராக நவாஸ் கனி எம்பி போட்டியிடுகிறார். இவர் இன்று (மார்ச் 27) மேலப்பாளையத்தில் தமிழ் மாநில ஜமா அத்துல் உலமா சபை தலைவர் ஹாஜி காஜா மொய்னுதீன் பாகவியை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்த நிகழ்ச்சியில் ஐயூஎம்எல் நெல்லை மாவட்ட தலைவர் மீரான் முகைதீன், செயலாளர் பாட்டபத்து முகமது அலி உடன் இருந்தனர்.
நெல்லை அதிமுக மாநகர செயலாளர் தச்சை கணேச ராஜாவின் இல்ல திருமண விழா இன்று காலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நேற்று இரவு (மார்ச் 26) அதிமுக சார்பில் டவுனில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தை தொடர்ந்து மாவட்ட செயலாளர் இல்லத்துக்கு வருகை தந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மணமக்களை வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
புதுவை மக்களவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் தமிழ்வேந்தனை ஆதரித்து மார்ச் 30ஆம் தேதி மாலை புதிய துறைமுக வளாகப் பகுதிகளில் அதிமுக பொதுச் செயலரும், தமிழக முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்யவுள்ளார். இதனையடுத்து ஏப்ரல் 1ம் தேதி முதல், புதுவை மாநிலம் முழுவதும் அதிமுக சார்பில் தேர்தல் பிரச்சாரம் நடைபெறும் என மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் கூறினார்.
மாமல்லபுரம் இ.சி.ஆர் சாலையில் அரசு கட்டிட கலை மற்றும் சிற்ப கலை கல்லூரி இயங்கி வருகிறது. இந்நிலையில், கல்லூரி வளாகத்தில் இருந்த காய்ந்த புற்களால் நேற்று மதியம் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் இந்த விபத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் இருந்த புற்கள், செடி, கொடிகள் அனைத்தும் தீயில் கருகி நாசமாகின.
தஞ்சை, கண்டியூர் – திருக்காட்டுப்பள்ளி சாலையில் திருவாழம்பொழில் பாலம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி கஜேந்திரன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த குத்தாலம் பகுதியை சேர்ந்த ஜெகன் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். அதில் ரூ.63,000 பணம் இருந்தது தெரியவர, உரிய ஆவணமில்லாத அந்த பணத்தை பறிமுதல் செய்து திருவையாறு தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணிபாளையம் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை. இவர் அதிமுக பிரமுகரான இவர் நேற்று மாலை கட்சிக்காரர்களுடன் தேர்தல் தொடர்பாக பேசிவிட்டு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த பொழுது மாங்காயை மரம் பஸ் ஸ்டாப் அருகே தடுப்பு சுவரில் ஸ்கூட்டர் மோதியதில் படுகாயம் அடைந்தார்.பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று இரவு இறந்துவிட்டார்.
குமரி மக்களவை தேர்தலை முன்னிட்டு, பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக போலீசாரின் அணிவகுப்பு ஊர்வலம் நேற்று(மார்ச் 26) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் துணை காவல் கண்காணிப்பாளர் யாங்சென் டோமா பூட்டியா தலைமையில் போலீசார் மற்றும் துணை ராணுவ பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. கோட்டார், பறக்கை ஜங்ஷனில் தொடங்கி இளங்கடை, வெள்ளடிச்சி விளையில் பேரணி நிறைவடைந்தது.
வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 11 ஆம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவி மோகனா நேற்று 26 ம் தேதி இரவு தனியார் தங்கும் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள்
இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இது குறித்து ஆலங்காயம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.