Tamilnadu

News March 29, 2024

வேலூர்: 2 லட்சம் பணம் பறிமுதல்

image

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காடு சோதனை சாவடியில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த சென்னையை சேர்ந்த ஜெகதீஷ் குமார் சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 2 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து காட்பாடி தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

News March 29, 2024

கிருஷ்ணசாமிக்கு ஆதரவாக எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்

image

சங்கரன்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தென்காசி தொகுதி அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு ஆதரவாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார் அப்போது அவர் டாக்டர் கிருஷ்ணசாமி சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர் உங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய நாடாளுமன்றத்தில் பேசக்கூடியவர் அவரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றார்.

News March 29, 2024

கலவை அருகே எஸ்பி ஆய்வு

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பதட்டமான வாக்குச்சாவடிகளான குப்பிடிசாத்தம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, சொறையூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, மாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, வாழைப்பந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பாலி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆகிய மையங்களில் மாவட்ட எஸ்பி கிரண் சுருதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

News March 29, 2024

பெரம்பலூர்: வியாபார சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்

image

மக்களவை தேர்தலை ஒட்டி திராவிட முன்னேற்றக் கழக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு இன்று(மார்ச் 29) வணிகர் சங்க பேரமைப்பு மற்றும் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வியாபாரி சங்கப் பிரதிநிதிகளிடம் தமிழக முதல்வரின் சாதனைகளை எடுத்துரைத்து வியாபாரிகளும் பொதுமக்களும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

News March 29, 2024

கும்பகோணத்தில் பெரிய வியாழன் சிறப்பு திருப்பலி

image

கும்பகோணத்தில் நேற்று(மார்ச் 28) அனைத்து தேவாலயங்களிலும் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து, புனித வெள்ளியையொட்டி இன்று (மார்ச் 29) காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை சிறப்பு ஆராதனை நடக்கிறது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு சிலுவை பாதை நிகழ்ச்சி நடக்கிறது.

News March 29, 2024

நெல்லை: மாயமான 8ம் வகுப்பு மாணவன் மீட்பு

image

திருநெல்வேலி அண்ணாநகரை சேர்ந்த 14 வயதுடைய பள்ளி மாணவர் கமலேஷ் மகேந்திரா நேற்று மாயமானார். இது குறித்த புகாரில், ஜெயேந்திரா பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் இந்த மாணவனை போலீசார் திவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், டவுண் அருகே சுற்றிக்கொண்டிருந்த கமலேஷை வட்டார வளர்ச்சி அலுவலர் பொன்ராஜ் என்பவர் மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

News March 29, 2024

பஸ் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு எச்சரிக்கை

image

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந் தேதி நடைபெற இருப்பதால் அனைத்து பஸ்களிலும் ஆளில்லாமல் பார்சல்கள் ஏற்ற ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் அனுமதிக்கக்கூடாது. அவ்வாறு ஆளில்லாமல் பார்சல்கள் ஏற்றப்படுவது ஆய்வின் போது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட ஓட்டுநர், நடத்துனர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் மண்டல போக்குவரத்து கழக அதிகாரி தெரிவித்துள்ளார்.

News March 29, 2024

சென்னை: அரசு பெட்ரோல் பங்கில் கலப்பட பெட்ரோல்?

image

புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு கூட்டுறவு பண்டகால சாலைக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் தனசேகர் என்பவர் பெட்ரோல் போட்டுள்ளார். இந்நிலையில், சிறிது தூரம் சென்ற பிறகு பைக் நின்று உள்ளது. மெக்கானிக் இடம் காண்பித்தபோது, பெட்ரோலில் கலப்படம் உள்ளதாக தெரிவித்தார். மீண்டும் பெட்ரோல் வாங்கி நுகர்ந்து பார்த்தபோது அதில் மண்ணெண்ணெய் கலப்படம் செய்தது தெரியவரவே போலீசில் புகார் அளித்துள்ளனர்.

News March 29, 2024

கர்ப்பிணி மனைவியை தாக்கிய கணவர் கைது

image

நாகர்கோவில் மேலராமன்புதூரை சோ்ந்த அசோக்(28), அயனிங் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ராஜேஷ்வரி கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் அசோக்கிற்கு மது பழக்கம் இருந்துள்ளது. இதை மனைவி கண்டிக்கவே, நேற்று இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கர்ப்பிண என பாராமல் அசோக் ராஜேஸ்வரிதை தாக்கியுள்ளார். பலத்த காயமடைந்த ராஜேஸ்வரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் அசோக்கை கைது செய்தனர்.

News March 29, 2024

காஞ்சி: ஆம்லெட் போட்டு கொடுத்து வாக்கு சேகரித்த எம்.எல்.ஏ

image

காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட செவிலிமேடு அருகே, காஞ்சிபுரம் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் செல்வத்திற்கு வாக்களிக்கும்படி காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் நேற்று(மார்ச் 28) பிரச்சாரம் செய்தார். அப்போது, பொதுமக்களை கவரும் வகையில் சாலை ஓரம் இருந்த தள்ளுவண்டி கடையில் வாடிக்கையாளர்களுக்கு முட்டை மற்றும் தோசை ஊற்றி கொடுத்து வாக்கு கேட்டார்.

error: Content is protected !!