India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சின்னசேலம் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் நேற்று ஈடுபட்டனர். அப்போது, கல்லாநத்தம் அருகே, சேலம் மாவட்டம், பெரியேரியைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் சிவக்குமார் மற்றும் பாண்டியன்குப்பம் பகுதியில் செந்தாமரை மனைவி லட்சுமி ஆகிய இருவரும் சாராயம் விற்றது தெரிந்தது. இதனையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 50 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
தெற்கு பொய்கைநல்லூரில் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்றது. தேர்தல் பணிக்குழு செயலாளர் பால்ராஜ், தெற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், ஒன்றிய அவை தலைவர் காசிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் வீடுவீடாக சென்று அதிமுக வேட்பாளரை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் 21 வேட்புமனுக்கள் நேற்று ஏற்றுக் கொள்ளப்பட்டன. 7 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்தத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளா் காா்த்தி ப.சிதம்பரம், அதிமுக வேட்பாளா் அ. சேவியா் தாஸ், பாஜக வேட்பாளா் தி. தேவநாதன், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வி.எழிலரசி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் ரஞ்சித்குமாா் பாலுசாமி மற்றும் 28 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.
நீலகிரியில் வரும் சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இன்று (மார்ச்.29) முதல் சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது. இதற்காக நேற்று 4 புதிய ரயில் பெட்டிகள் குன்னூர் கொண்டு வரப்பட்டன. இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில் 4 பெட்டிகள் ஊட்டி- கேத்தி இடையே இயக்கப்படும் என கூறினார்.
கோவை கலெக்டர் கிராந்தி குமார் பாடி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் பொதுமக்கள், அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் மக்களவை பொதுத்தேர்தல் தொடர்பான புகார் ஏதும் இருந்தால் 94896-87740, 94862-68740, 94896-81740 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தியுள்ளார்.
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தண்டரை ஊராட்சி அடிவிசாமிபுரத்தை சேர்ந்த மலை மீது மதனகிரி முனீஸ்வரா சாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் புனரமைப்பு செய்யப்பட்டு கும்பாபிஷேகம் கடந்த 25ஆம் தேதி தொடங்கியது. இதில் கணபதி பூஜை, வாஸ்து ஹோமம் கலசஸ்தாபனம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடத்தபட்டு நேற்று பல இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நதிநீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட தலமலை வனப்பகுதியில் ஏராளமான யானைகள் அவ்வப்போது சாலையின் நடுவே குறுக்கிட்டு பயணிகளை அச்சுறுத்தி வருவது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. நேற்று ஒற்றை யானை திடீரென
சாலையில் நடுவே நின்று பேருந்தை வழிமறித்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். சிறிது நேரம் பேருந்து முன் நின்ற காட்டு யானை மீண்டும் வனப்பகுதிக்குள் தானாகவே சென்றது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தனிப்படை போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொன்னாங்கண்ணப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியன்
என்பவர் மளிகை கடையில்
புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார்
சிவசுப்பிரமணியனை கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள தெற்கு வீரவநல்லூரை சேர்ந்தவர் ஜெபக்குமார். இவரது மனைவி முருக ஜோதி(29). குடும்ப பிரச்னை காரணமாக முருக ஜோதி விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று(மார்ச் 28) வீட்டில் தூக்கிட்டு தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வீரவநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நாளை (மார்ச் 30) தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதற்காக முதல்வர் இன்று சேலம் வருகிறார். முதல்வர் வருகையொட்டி இன்று மற்றும் நாளை இரு நாட்களுக்கு சேலத்தில் டிரோன்கள் பறக்க தடை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.