Tamilnadu

News March 30, 2024

புதுகை அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்

image

புதுக்கோட்டை நகர் மன்றத்தில் திருச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி மற்றும் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா இன்று தொடங்கி வைத்தார். அருகில் வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா உள்ளிட்ட அலுவலர்கள் பலர் உள்ளனர்.

News March 30, 2024

எம்ஜிஆர் – நம்பியார் சண்டை வேண்டாம்

image

சாமியார் தோட்டம் அருகே உள்ள ராஜலட்சுமி நகரில் இரு வேட்பாளர்களும் நேர் எதிரில் சென்றபோது, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எதிர்க் கட்சியினருக்கு வாழ்த்து தெரிவித்தார். நமக்குள் சண்டை வேண்டாம், ஒதுங்கி போய் விடுவோம் என பேசியதை கேட்டு வேட்பாளர் உட்பட பிரச்சாரத்திற்கு வந்த அனைவரும் குழம்பினர். மேலும், எம்ஜிஆர், நம்பியார் போல சண்டையிட்டு கொள்ள வேண்டாம் என தொண்டர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

News March 30, 2024

நாமக்கல்லில் ஒரே மேடையில் 4 வேட்பாளர்கள்

image

நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் லாரி தொழில் வளர்ச்சிக்கு வெற்றி பெறப்போகும் எம்பியின் பங்கு குறித்த வேட்பாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதிமுக தமிழ்மணி, திமுக மாதேஸ்வரன், நாம் தமிழர் கட்சி கனிமொழி, சுயேட்சை வேட்பாளர் டாக்டர் எழில் கலந்து கொண்டு லாரி தொழில் வளர்ச்சி குறித்து பேசினர்.

News March 30, 2024

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தகவல்

image

மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் ,மாற்றுத்திறனாளிகளுக்கு 12D தபால் வாக்கு படிவம் வழங்கப்பட்டு வாக்குகள் பெறப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதியில் 85 வயதிற்கு மேற்பட்ட 7749 வாக்காளர்களுக்கும் 10478 மாற்றுத்திறனுடைய வாக்காளர்களுக்கும் 12D தபால் வாக்கு படிவம் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.

News March 30, 2024

திண்டுக்கல்: கோடைகால நீச்சல் பயிற்சி

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மாவட்ட விளையாட்டரங்கத்தில் உள்ள நீச்சல் குளத்தில் கோடை காலத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்தும் விதமாக நீச்சல் கற்பித்தல் பயிற்சி முகாம் 5 கட்டங்களாக நடைபெற உள்ளது. மேலும் விபரங்களுக்கு
நேரிலோ அல்லது தொலைபேசி எண் 7401703504, 9677649197 வாயிலாகவோ சம்பந்தப்பட்ட தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தகவல் தெரிவித்துள்ளார்.

News March 30, 2024

விருதுநகரில் மாரத்தான் போட்டி

image

விருதுநகரில் நாளை வாக்காளர் விழிப்புணர்வு குறித்த மாரத்தான் போட்டி மருத்துவக் கல்லூரியில் துவங்கி நடைபெற உள்ளது. கல்லூரி மாணவ மாணவியருக்கு தனித்தனியாக நடைபெற உள்ள இந்த மாரத்தான் காலை 6.30 மணியளவில் துவங்க உள்ளது. இதில் மாணவர்களுக்கு 10 கி.மீ தூரமும் மாணவியருக்கு 8 கி.மீ தூரமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பங்கேற்பாளர்களை ஊக்குவிக்கும் விதமாக ஊக்கத்தொகையும் வழங்க உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 30, 2024

நெல்லையில் 2 இயந்திரம் பயன்படுத்த முடிவு?

image

மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு அதற்கான பணி நெல்லையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருநெல்வேலி மக்களவை தொகுதியில் மொத்தம் 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.15 வேட்பாளர்களுக்கு மேல் களத்தில் உள்ளதால் 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல்.

News March 30, 2024

புதுகையில் ஓபிஎஸ் பணம் விவகாரம்

image

புதுகை மக்களவையின் கீழ் வரும் அறந்தாங்கி பகுதியில் இன்று ஓபிஎஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, ஆரத்தி எடுத்து வரவேற்ற பெண்ணுக்கு ஓபிஎஸ் பணம் கொடுத்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தேர்தல் கண்காணிப்பு அலுவலர் அருண் அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அதேபோல், மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்த நேரத்திற்கு முன்பாக கூட்டம் நடத்தியதாகவும் புகார் அளிக்கப்பட்டது.

News March 30, 2024

“விரலை வெட்டினாலும் இதை செய்ய மாட்டார்கள்”

image

சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட வாடிப்பட்டி, சாணார்பட்டி, கட்டக்குளம், உள்ளிட்ட பகுதிகளில் இன்று தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் விரலை துண்டாக வெட்டினாலும் இரட்டை இலையை தவிர வேறு சின்னத்திற்கு வாக்களிக்க மாட்டார்கள் இந்த தொகுதி மக்கள் என நம்பிக்கை தெரிவித்து பேசினார்.

News March 30, 2024

கிருஷ்ணகிரி: லாரி மோதியதில் தரை மட்டமான வீடு

image

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ளது புன்னகரம் கிராமம். இந்த ஊர் வழியாக டிப்பர் லாரிகளில் கற்களை ஏற்றி செல்கின்றனர். இந்நிலையில், இன்று கற்களை ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி ஒன்று நிலைத்தடுமாறி ஸ்ரீ ராமப்பா என்பவரின் வீட்டின் மீது மோதியதில் வீடு தரை மட்டமாகியுள்ளது. வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து பேரிகை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!