Tamilnadu

News March 31, 2024

கடலூர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த துணை மேயர்

image

கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் விசிக, திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஷ்ணு பிரசாத், கடலூர் மாநகராட்சி துணை மேயர் மற்றும் விசிக கடலூர் நாடாளுமன்ற தொகுதியின் மேலிட பொறுப்பாளர் தாமரைச்செல்வனை அவரது இல்லத்தில் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இதையடுத்து தாமரைச்செல்வன், வேட்பாளர் விஷ்ணு பிரசாரத்திற்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

News March 31, 2024

கருணாநிதி நினைவிட ஒளி ஒளிகாட்சி நிறுத்த கோரிக்கை

image

அ.தி.மு.க. செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளருமான பாபு முருகவேல் தலைமை தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் பற்றி புகார் கொடுத்துள்ளார் மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள போது பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் உள்ள அந்த ஒலி-ஒளி காட்சி அமைப்பை நிறுத்த வேண்டும் என புகார் தெரிவித்துள்ளார் .

News March 31, 2024

5 கிலோ கஞ்சாவுடன் வட மாநில வாலிபர்கள் கைது

image

திருப்பூர் அவிநாசி ரோடு திலகர் நகர் பகுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்வதாக மாநகர மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் ஒரு வீட்டில் சோதனை செய்தனர். அங்கு அஞ்சு கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து வட மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

News March 31, 2024

நெல்லையில் வைரலாகும் வேட்பாளர் புகைப்படம்

image

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேற்று முன்தினம் (மார்ச் 29) டவுன் சந்திப்பிள்ளையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு முதற்கட்ட பிரச்சாரத்தை துவங்கினார். அப்பொழுது சுவாமி தரிசனம் செய்த பொழுது விபூதி தட்டில் பணம் வைத்த புகைப்படம் “ஓட்டிற்கு பணம் கொடுத்தாரா நயினார்”என்ற தலைப்பில் தற்போது நெல்லையில் வைரலாகி வருகின்றது.

News March 31, 2024

நெல்லைக்கு 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள்

image

வாக்குப்பதிவு இயந்திரங்களில் அதிகபட்சம் 16 பட்டன்கள் மட்டுமே உள்ளன. திருநெல்வேலியில் மக்களவைத் தொகுதியில் 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். எனவே, அனைத்து வாக்குச் சாவடிகளிலும் தலா இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் நிலை உருவாகி உள்ளது. தேவையான கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையத்தினர் செய்து வருகின்றனர்.

News March 31, 2024

திண்டுக்கல் தொகுதியில் 3 வேட்பாளா்கள் வாபஸ்

image

திண்டுக்கல் மக்களவை தொகுதியில் போட்டியிட 26 பேர் மனு தாக்கல் செய்தனர். இதன் பரிசீலனையில் 18 பேர் மனுக்கள் ஏற்கப்பட்டன. இதை தொடர்ந்து நேற்று மாலை 3:00 மணி வரை 3 பேர் மனுவை வாபஸ் பெற்றனர். இதன் மூலம் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் எண்ணிக்கை 15 ஆகக் குறைந்தது. நோட்டா சின்னத்தையும் சோ்த்துக் கொண்டால் மொத்தம் 16 வேட்பாளா்கள்  போட்டியிடுகின்றனர்.

News March 31, 2024

ஒத்தினிப்பட்டி கிழவன் குளம் கண்மாயில் மீன் பிடி திருவிழா!

image

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஒத்தினிப்பட்டி கிழவன் குளம் கண்மாயில் மீன் பிடி திருவிழா இன்று (மார்.31) நடைபெற்றது. இதில் 2000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வலை, ஊத்தா போன்ற மீன்பிடி சாதனங்களுடன் இவ்விழாவில் கலந்து கொண்டனர். இதில் கட்லா, விரால், ஜிலேபி, கெழுத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை  அரை கிலோ முதல் 7 கிலோ வரை எடை கொண்ட மீன்களை அள்ளிச்சென்றனர் .

News March 31, 2024

காஞ்சிபுரம் தொகுதி: 11 போ் போட்டி

image

காஞ்சிபுரம் மக்களவை (தனி) தொகுதியில் சுயேச்சை வேட்பாளா்கள் 6 போ் மற்றும் அரசியல் கட்சியினா் 5 போ் உள்பட 11 போ் போட்டியிடுகின்றனா். க.செல்வம்-திமுக(உதயசூரியன்), பெரும்பாக்கம் இ.ராஜசேகா்-அதிமுக (இரட்டை இலை), வெ.ஜோதி வெங்கடேசன்-பாமக (மாம்பழம்), வி.சந்தோஷ்குமாா்-நாம் தமிழா் (மைக்), எஸ்.இளையராஜா-பகுஜன் சமாஜ் (யானை) மேற்கண்ட இவர்கள் அவர்களுடைய சின்னத்தில் போட்டியிடுகின்றனர்

News March 31, 2024

சேலத்தில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம்

image

சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேலம் வடக்கு, சேலம் தெற்கு, சேலம் மேற்கு, ஓமலூர் எடப்பாடி மற்றும் வீரபாண்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 2018 பேர் அதிகமாக உள்ளனர். 8,23,336 ஆண் வாக்காளர்களும், 8,25,354 பெண் வாக்காளர்களும், 221 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 16 லட்சத்து 48 ஆயிரத்து 911 வாக்காளர்கள் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் உள்ளனர்.

News March 31, 2024

அரக்கோணம் 108 பால்குட ஊர்வலம் பக்தர்கள்

image

அரக்கோணம் அடுத்த கைனூர் கண்டிகை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கொள்ளாபுரி அம்மன் கோயிலில் 48 வது நாள் மண்டல பூஜை முன்னிட்டு 108 பால்குட ஊர்வலம் இன்று நடந்தது. ஊர் நாட்டாண்மைதாரர் நாதமுனி, நிர்வாகிகள் ஆறுமுகம் ,மூர்த்தி, வழக்கறிஞர் தினேஷ் ,மணி, குப்புசாமி ,கோதண்டன் ,அன்பு, குப்பன் ,முரளி முனிரத்தினம் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர் .

error: Content is protected !!