India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மதுரை சாலையில் உள்ள கேவிஎஸ் மேனேஜிங் போர்ட் பொருட்காட்சி மைதானத்தில் கே வி எஸ் 76 ஆவது பொருட்காட்சி துவக்க விழா நேற்று நடைபெற்றது. அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமை வகித்து பொருட்காட்சியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் மாதவன், பள்ளி செயலாளர் கார்த்திகேயன், செயலாளர் முரளிதரன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நீலகிரியில் வருகிற மக்களவைத் தேர்தலில் பொதுமக்கள் வாக்கு செலுத்த ஏதுவாக வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஊட்டியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளை இன்று (மார்ச் 30) நீலகிரி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான மு.அருணா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுசெய்தார். அவருடன் துறை அலுவலர்கள் சென்றனர்.
திருச்சி ராம்ஜி நகர் கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (18) இவர் பக்கத்து வீட்டில் வசிக்கும் இளம்பெண் வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்துகொண்டு நேற்று தண்ணீர கேட்பது போல் சென்று பலாத்காரம் செய்ய முயன்றார். இளம் பெண் சத்தம் கேட்டு பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் வாலிபர் தப்பி ஓடினார்.புகாரின் பேரில் கன்டோன்மென்ட் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.
கடலூர் மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கான ஒருங்கிணைந்த பள்ளி சார்பில் சிறப்பு எழுத்தறிவு திட்ட தேர்வு நடந்தது. இங்கு 40 சிறைவாசிகள் கற்போராக பயின்று வருகின்றனர். கடந்த 6 மாதங்களாக அவர்களுக்கு சிறப்பு ஆசிரியர் மூலம் எழுத்தறிவு பயிற்சி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 40 சிறைவாசிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய அனைத்து சிறைவாசிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
ராமநாதபுரம் பட்டணம் காத்தான் பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பாக மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ராமநாதபுரம் சட்டமன்றத்திற்குட்பட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜக, அமமுக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ஊத்தங்கரை ஒன்றியத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வாளிப்பட்டி, பெரிய தள்ளாடி உள்ளிட்ட பல்வேறு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பேனா, அளவுகோல், பென்சில், பாகைமானி போன்ற தேர்வு உபகரணங்களை ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கணேசன் வழங்கி நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வாழ்த்தினார்.
வாசுதேவநல்லூர் பழைய தீயணைப்பு நிலையம் அருகே கணேசன் என்பவர் கட்டிடம் மற்றும் கலைஞர் காலனியில் முருகேசன் என்பவரின் வீடு ஆகிய இடங்களில் ஐடி நிறுவனம் என்ற பெயரில் ஆன்லைன் லாட்டரி சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நேற்று வாசுதேவநல்லூர் போலீசார் சங்கனாபேரியைச் சேர்ந்த பசுபதி (28),சத்யா (23),ராணி ஸ்ரீ ஜான்சி (23),சுந்தரத்தாய் (25),கணேசன் (23) உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர்
நீலகிரி எம்பி தொகுதி பொது பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘நீலகிரி தொகுதிக்கு தேர்தல் செலவின பார்வையாளராக மஞ்சித் சிங் பரார் (94899 – 30725), காவல் பார்வையாளராக மனோஜ் குமார் (63796 – 52828) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் விதிமீறல் புகார்களை கைப்பேசியிலோ (அ) நேரிலோ தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
சீர்காழி அருகே திருமுல்லைவாசலை சேர்ந்த கவின்,ஜஸ்வந்த்,காளிதாஸ் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் இன்று காலை ராதாநல்லூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர்.அப்போது சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி கவின்,ஜஸ்வந்த் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த காளிதாஸை பொதுமக்கள் மீட்டு சீர்காழி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகனை ஆதரித்து திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூரில் நடிகை விந்தியா அதிமுக வேட்பாளர் சந்திரமோகனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
Sorry, no posts matched your criteria.