Tamilnadu

News March 30, 2024

சலூன் கடைக்காரர் குத்திக் கொலை

image

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் சலூன் கடை நடத்தி வருபவர் ஆண்டியப்பன். இவருக்கு மகேஷ் என்பவரின் மனைவியுடன் தொடர்பு இருந்ததால் மகேஷ் கடந்த 2018 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக மகேஷின் அண்ணன் குமாரசாமி நேற்று இரவு ஆண்டியப்பனை கத்தியால் குத்தியுள்ளார் .இதில் காயமடைந்த ஆண்டியப்பன் இன்று காலை மருத்துவமனையில் உயிரிழந்தாா். 

News March 30, 2024

சிதம்பரம்: பிஜேபி தடா பெரியசாமி அதிமுகவில் இணைந்தார்

image

இன்று சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார் தடா பெரியசாமி.விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்த தடா பெரியசாமி, தற்போது சிதம்பரம் தொகுதிக்கு சீட் கேட்டு கொடுக்காததால் அதிமுகவில் இணைந்தார் என கூறப்படுகிறது.பாஜகவில் பட்டியல் அணி மாநிலத் தலைவராக இருந்தார் தடா பெரியசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

News March 30, 2024

அதிமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

image

பெரம்பலூர் எம்.பி தொகுதிக்குப்பட்ட கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அவருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள் பரஞ்ஜோதி, சிவபதி ஆகியோர் வாக்கு சேகரித்தனர். வழியெங்கும் அவருக்கு அதிமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

News March 30, 2024

தேர்தலை புறக்கணிப்பதாக வைத்த பேனரால் பரபரப்பு

image

ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டத்தில் கரட்டுப்பாளையம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் காராப்பாடியை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு அரசு வழிகாட்டி மதிப்பீடு இல்லாததால் பல முறை மனுக்கள் கொடுத்தும் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக பேனர் வைத்துள்ளனர்.

News March 30, 2024

மதுரையில் வாட்டி வதைக்கும் வெயில்

image

மதுரை: தமிழ்நாட்டில் 9 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவாகி உள்ளது. இந்நிலையில் கரூர் பரமத்தி, தருமபுரி, சேலம் ஆகிய இடங்களில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் வாட்டி வதைத்தது. மேலும், திருச்சி, வேலூர், திருத்தணி, மதுரை நகர், மதுரை விமான நிலைய பகுதிகளில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. இதனால், பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

News March 30, 2024

ஏரியில் மிதந்த முதியவரின் சடலம் மீட்பு

image

 புலியூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (75). இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் வெளியே சென்று விட்டு வருவதாக கூறி விட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று காலை அப்பகுதி ஏரியில் கிருஷ்ணனின் உடல் மிதப்பதை கண்ட அப்பகுதியினர் அவரின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 30, 2024

பாமக வேட்பாளர் சொத்து விவரங்கள்….

image

அரக்கோணம் தொகுதி பாமக வேட்பாளா் வழக்குரைஞா் கே.பாலு தனது சொத்து விவரத்தை தெரிவித்துள்ளாா். இதில் தனது பெயரில் ரூ. 1 கோடி 63 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துகள் வங்கிகளில் இருப்புத் தொகை ரூ.1.58 லட்சம், தனது மனைவி பெயரில் ரூ. 2 கோடி 12 லட்சம் 49 ஆயிரம் மதிப்பிலான அசையா சொத்துகளும் மேலும் தனது பெயரில் ரூ. 42 லட்சம் கடன் உள்ளதாகவும் வேட்புமனு உறுதி மொழி பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 30, 2024

வாக்களிப்பதை குறித்து விழிப்புணர்வு

image

100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் விதமாக திருமணம் பத்திரிகை அடிப்பது போல் பத்திரிகை அடித்து பொதுமக்களை வாக்களிக்க வருமாறு அழைப்பிதழ் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் மதுரையில் பத்திரிகையில் இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் மக்களவை தேர்தல் திருவிழாவில் தாங்கள் தங்கள் சுற்றமும் வருகை தந்து தவறாமல் வாக்குகளை பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News March 30, 2024

நாகையில் இன்று அண்ணாமலை பிரச்சாரம் 

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில், நாகையில் இன்று பாஜக நாகை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் எஸ்.ஜி.எம்.ரமேஷ்-க்கு ஆதரவாக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்கிறார். நாகை அவுரித்திடலில் பகல் 12 மணிக்கு மாநில தலைவர் வருகை தர உள்ளதாக கட்சி தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News March 30, 2024

தர்மபுரி உழவர் சந்தையில் விழிப்புணர்வு

image

மார்ச் 30 இன்று நாடாளுமன்றத் தேர்தல் 2024ஐ முன்னிட்டு 100 சதவீத வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி கிராமிய கலை குழுவினருடன் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி தர்மபுரி உழவர் சந்தையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வாக்காளர் கையேடுகளை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினார் எனது வாக்கு விற்பனைக்கு இல்லை தெரிவித்தனர்.

error: Content is protected !!