India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், கடலூர் உழவர் சந்தை அருகே இன்று ஆட்டோ டிரைவரிடம் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் ஆட்டோக்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்றும், தாறுமாறாக நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். அப்போது ஆட்டோ டிரைவர்கள் உடன் இருந்தனர்.
ஒட்டன்சத்திரம், பாச்சலூர் மலைகிராமம் அருகே சில தினங்களுக்கு முன் காட்டெருமை ஒருவரை முட்டி சம்பவம் இடத்தில் உயிரிழந்தாா். இந்நிலையில் சில நாட்களாக செம்பிரான்குலம் செல்லும் வழியில் வந்த யானை, அங்கிருந்த டிராக்டரை சாலையோரத்தில் தூக்கி வீசியது. இதனால், அவ்வழியாக வாகனத்தில் செல்வோர் அச்சத்தில் உள்ளனர். யானைகள் காட்டெருமைகள் இந்த பகுதியில் அதிகம் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர்
கோவையில் வரும் மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன், பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை, திமுக சார்பில் முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இவர்களில் அதிமுக, பாஜக வேட்பாளர்களுக்கு இடையே ஒரு ஒற்றுமை உள்ளது. இதில் சிங்கை ராமச்சந்திரன் அகமதாபாத் IIM மற்றும் அண்ணாமலை லக்னோ IIM ல் பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீ பெரிய நாயகி சமேத நாகேஸ்வரன் திருக்கோவில் பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முன்னதாக சுவாமி அம்பாள் திருத்தேரில் எழுந்தருள சிறப்பு ஆராதனை நடைபெற்று திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். நாளை தீர்த்தவாரி நடைபெற உள்ளது.
தேனி எம்பி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட வேண்டும் என தானும், தனது மகன்களும் கேட்டுக்கொண்டதாக இன்று தெரிவித்துள்ள ஓ.பன்னீர்செல்வம், தங்கள் விருப்பத்தை ஏற்றுக்கொண்ட டிடிவி தினகரன் தேனி தொகுதியில் போட்டியிடுகிறார் என அறிவித்துள்ளார். இதன்மூலம் தேனியில் பலத்த போட்டிக்கு வாய்ப்புள்ளது. காரணம் திமுக சார்பில் தங்கத்தமிழ்ச்செல்வன் களத்தில் உள்ளார். இதுபோக அதிமுகவின் இரட்டை இலையும் களமாடுகிறது.
ரமக்குடியில் இன்று போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பாகவும் அச்சமின்றி வாக்களிப்பதற்காக பரமக்குடி டிஎஸ்பி சபரிநாதன் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார், துணை ராணுவ படையினர்கள் கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் இருந்து பஜார் வரை கொடி அணிவகுப்பு நடத்தினர்.
மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சி நிர்வாகிகளும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கான அதிமுக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் சி.வி.சண்முகம், செஞ்சி ராமச்சந்திரன், இ.பாலமுருகன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
+2 பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது. மதுரை மாவட்டத்தில் நடப்பாண்டு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்த 7 லட்சத்து 72 ஆயிரத்து 200 பள்ளி மாணவர்கள், 21 ஆயிரத்து 875 தனித்தேர்வர்கள் என மொத்தம் 7 லட்சத்து 94 ஆயிரத்து 75 மாணவ-மாணவிகளில், சுமார் 13ஆயிரம் பேர் தேர்வு எழுத வரவில்லை என்று அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டைவிட ‘ஆப்சென்ட்’ எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது
நாகூர் சில்லடி கடற்கரை பகுதியில் தூய்மை பணி இன்று நடைப்பெற்றது. இதில் கலெக்டர் ஜானிடாம் வர்கிஸ் தலைமை தாங்கி கடற்கரை தூய்மை பணியை தொடங்கி வைத்தார். இதில் மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் தமிழ் ஒளி, மாவட்ட வருவாய் அலுவலர் பேபி, நகராட்சி ஆணையர் நாராயணன் மற்றும் 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று வாக்காளர் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சி நிர்வாகிகளும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கான அதிமுக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் பி.வேணுகோபால், அப்துல் ரஹீம், ரமணா, மாதவரம் மூர்த்தி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.