India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இண்டியா கூட்டணியின்
கடலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் விஷ்ணுபிரசாதிற்கு ஆதரவாக திமுக சார்பில் கடலூரில் இன்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில், தமிழக வாழ்வுரிமை கட்சியின்
மாநில நிர்வாககுழு உறுப்பினர் மற்றும்
மாநகர அமைப்பு குழு தலைவர் தி. கண்ணன் தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இளைஞர் பிரிவினர் திரளாக கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிரிக்கெட் வீரர்களுடன் கிரிக்கெட் விளையாடி அவர்களுக்கு வாக்காளர் கையேட்டினை வழங்கி மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
ஆரணி அடுத்த கீழ்நகர் கிராமத்தில் ஸ்ரீ திரௌபதியம்மன் கோயிலில் அக்னி வசந்த விழாவில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தென்காசி மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். இவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவரது பெயர் வேட்பாளர் பட்டியலில் முதலிடத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த தொகுதியில் கிருஷ்ணசாமி பெயரில் மேலும் 2 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களுக்கு தலா தொலைக்காட்சி பெட்டி மற்றும் கணினி ஆகிய சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
செஞ்சி அடுத்த பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து விவசாயி 55. இவர்,நேற்று பெற்றாள் கிராமத்தில் இருந்து கடலாடிக்குளத்திற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நல்லாண்பிள்ளை பெற்றாள் பகுதியில் இருந்த கரும்பு ஏற்றி வந்த டிராக்டர், முத்துவை முந்தி சென்றபோது, முத்து தடுமாறி டிரைலரின் பின் சக்கரத்தில் சிக்கினார்.இதில் தலை நசுங்கி அதே இடத்தில் இறந்தார்.இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிரச்சார நிகழ்ச்சி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மக்களவைத் தொகுதியில் அவர், 13 ஆம் தேதி மாலை 4 மணிக்கு திருவேங்கடம் பகுதியில் பேசுகிறார். 5 மணிக்கு சங்கரன் கோவில், 6 மணிக்கு புளியங்குடி, 7 மணிக்கு கடையநல்லூரில் உரையாற்றுகிறார்.
நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மருத்துவர் அவர்கள், தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் ஹர்ஜித் கவுர் அவர்கள் செலவின பார்வையாளர் அர்ஜுன் பேனர்ஜி ஆகியோர் முன்னிலையில் பாராளுமன்றத் தேர்தல் 2024 முன்னிட்டு வேட்பாளர்கள் தங்களது செலவின பதிவேடுகளை பராமரிப்பது தொடர்பான கூட்டம் நடைபெற்றது.
கடலூர் முதுநகரில் எந்தவொரு தெரு பகுதிகளுக்கு சென்றாலும் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்கள் வீடுகளில் இருக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதுதொடர்பாக பலமுறை புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை முறையாக அள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொட்டியம் மதுரை காளியம்மன் பங்குனி திருவிழா 02.04.2024 முதல் 9.04.2024 வரை நடைபெற இருப்பதால் திருவிழாவிற்கு சுமார் 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வர இருப்பதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தங்களது உடைமைகள் மற்றும் பொருள்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறும் கூட்ட நெரிசலில் ஏதும் அசம்பாவிதங்கள் நடைபெறா வண்ணம் விழிப்புணர்வுடன் இருக்க தொட்டியம் காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்களவை 2024 பொதுத் தேர்தலையொட்டி 100 % வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த இந்திய இராணுவத்தில் பணியாற்றும் 390 வாக்காளர்களுக்கு மின்னணு தபால் வாக்குச்சீட்டுகள் (ETPBS) அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் ச.உமா, அவர்கள் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.