Tamilnadu

News August 21, 2025

இலவச பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

image

திருக்குறள் பயிற்சி வகுப்புகளில் பொதுமக்கள், இளைஞர்கள், பள்ளி-கல்லூரி மாணாக்கர்கள் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சி பெற்று பயன்பெறலாம். மேலும், பயிற்சி நடைபெறுமிடம், நாள், நேரம் குறித்த முழு விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயற்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது 04575-241487 என்ற எண்ணிலோ விபரங்கள் பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 21, 2025

திருச்சி: திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (ஆக.21) ஸ்ரீரங்கம் ஆண்டவன் கல்லூரி, பாலக்கரை மரக்கடை வாட்டர் டேங்க், துறையூர் செங்குந்தர் ஆரம்ப பள்ளி, கண்ணுடையான்பட்டி சமுதாய கூடம், லால்குடி அய்யனார் கோவில், வையம்வட்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு மனு வழங்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News August 21, 2025

திருச்சி: உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

திருச்சி மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் எஸ்.சி, எஸ்.டி, எம்.பி.சி, டி.என்.சி, பி.சி, பி.சி.எம் ஆகிய வகுப்புகளை சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து www.drbtry.in என்ற தளத்தில் வரும் 29-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News August 21, 2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

image

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், 2021ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 5,901 நோயாளிகளுக்கு சுமார் ரூ.6.27 கோடி மதிப்பிலான, மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது என பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அருண்ராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

News August 21, 2025

கடலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (20/08/2025) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 21, 2025

புதுச்சேரி – விழுப்புரம் ரயில் 7 நாள் முழுமையாக ரத்து

image

தென்னகர ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் கூறியதாவது:
பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விழுப்புரத்திலிருந்து காலை 5.25 மணிக்கு புதுவைக்கு இயக்கப்படும் மெமு ரயில் (வ.எண் 66063) புதுவையிலிருந்து
விழுப்புரத்துக்கு இயக்கப்படும். 24, 25, 26, 28, 29, 30, 31 ஆகிய தேதிகளில் மெமு ரயில் (வ.எண் 66064) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

News August 21, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (ஆகஸ்ட்.20) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

News August 21, 2025

நாமக்கல்: 4 சக்கர இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டம் நாமக்கல் மாவட்டத்திற்கு இரவு நேரங்களில் நான்கு சக்கர ரோந்து அதிகாரிகள் தினமும் நியமிக்கப்படுகிறார்கள் அதனை தொடர்ந்து இன்று நாமக்கல் – தங்கராஜ் (9498110895), வேலூர் – சுகுமாரன் ( 8754002021), ராசிபுரம் – கோவிந்தசாமி ( 9498209252), பள்ளிபாளையம் – பெருமாள் ( 9498169222), திம்மன்நாயக்கன்பட்டி – ஞானசேகரன் ( 9498169073), குமாரபாளையம் – செல்வராசு (9994497140) ஆகியோர் இன்று உள்ளனர்.

News August 21, 2025

தஞ்சாவூர் இரவு ரோந்து செலும் போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஆக.18) இரவு காவல்துறையின் தீவிர ரோந்து பணிக்காக காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு தங்களது உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொலைபேசி மூலமாக அல்லது நேரடியாக 100 என்ற எண்களை டயல் செய்து தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் அலுவலர்கள் கைபேசி எண்களும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளன.

News August 21, 2025

மாவட்ட ஆட்சியர் தலைமையில் முன்னேற்பாடு கூட்டம்

image

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தலைமையில் இன்று (ஆக.20) நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், வேதாரண்யம் சார் ஆட்சியர் அமீத் குப்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!