India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்னூர் பாரதி நகரை சேர்ந்த சுரேந்தர் தனது நண்பருடன் குப்பநத்ததில் உள்ள பாரில் நேற்று மது அருந்தி கொண்டிருந்தார்.அங்கு வந்த குப்பனத்தை சேர்ந்த ரவுடி தினேஷ்குமார் சுரேந்தரிடம் மது கேட்டுள்ளார்.அவர் கொடுக்க மறுக்கவே தகாத வார்த்தையால் திட்டியதுடன் கத்தியால் குத்தியதில் படுகாயம் அடைந்த சுரேந்தரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் தில்லை நகர் போலீசார் தினேஷை கைது செய்தனர்.
தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.பள்ளியில் மாணவர் மனசு பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும் எனவும்,ஓட்டுனருக்கு போக்ஸோ சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும்.ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portal-ல் பதிவேற்றம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
கொடைக்கானலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் நட்சத்திர பேச்சாளரும் நடிகையுமான ரோகிணி கலந்து கொண்டார். அதில் பேசிய அவர் பிஜேபி ஆளுகின்ற குஜராத் மாநிலத்தில் பெண்களுக்கான கல்வி 27% மட்டுமே இருப்பதாகவும், பழங்குடியின பெண்ணை குடியரசு தலைவராக தேர்ந்தெடுத்த பிறகு அவர்களுக்கு முறையான மரியாதை மோடி கொடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
தேனி மக்களவை பொதுத்தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1225 வாக்குச்சாவடி மையங்களுக்கு 1469 தலைமை அலுவலர்களும், நிலை-1 வாக்குப்பதிவு அலுவலர்கள் 1469, நிலை-2 வாக்குப்பதிவு அலுவலர்கள் 1469, நிலை-3 வாக்குப்பதிவு அலுவலர்கள் 1469, நிலை-4 வாக்குப்பதிவு அலுவலர்கள் 198 நபர்கள் என மொத்தம் 6074 நபர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபட உள்ளனர்.
விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கு மைதானத்தில் இன்று மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி என் வாக்கு விற்பனைக்கு அல்ல என்ற இலச்சினை வரைபட வடிவில் சுமார் 300-க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழு உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த உறுதிமொழி நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் கலந்து கொண்டார்.
அரக்கோணம் அடுத்த திருவலங்காட்டை சேர்ந்தவர் சவுமியா(27), தனியார் கம்பெனி தொழிலாளி. இவர் வேலை நேரம் முடிந்து நேற்று(ஏப்.3) திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணம் வரும் மின்சார ரயிலில் பயணம் செய்தார். அப்போது, மணவூர் அருகே இளைஞர் ஒருவர் சவுமியா அணிந்திருந்த ஒரு சவரன் செயினை பறித்துக் கொண்டு ரயிலில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடியுள்ளார். இது குறித்து ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
முத்துப்பேட்டை வட்டம் பின்னத்தூர் ஊராட்சியில் பின்னத்தூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செங்குட்டுவன் கோவிலூர் ஊராட்சி செயலாளர் முருகானந்தம் ஆகியோர் தலைமையில் 85 நபர்களுடன் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலகி அதிமுக திருவாரூர் மாவட்ட கழக செயலாளர் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் தலைமையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
மக்களவைத் தேர்தல் ஏப்.19ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் மற்றும் அரசு தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரனும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், நேற்று(ஏப்.3) பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பறக்கும் படையினர் அவரது காரை நிறுத்தி சோதனை செய்தனர். எம்எல்ஏ, அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார் என தகவல்.
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024ஐ முன்னிட்டு, தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழு, காணொலி கண்காணிப்புக்குழு ஆகிய குழுக்களில் சுழற்சி முறையில் பணியாற்றி வரும் அலுவலர்கள், மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் நேற்று ஆய்வு கூட்டம் மேற்கொண்டார்.
பாராளுமன்ற தேர்தலில் முன்னிட்டு புதுச்சேரி தொகுதியில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு ஆதரவாக காரைக்காலில் காங்கிரஸ் கட்சி மற்றும் கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று புதுச்சேரி காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
Sorry, no posts matched your criteria.