India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வடமதுரை அருகே பிலாத்து கிராமம் முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் சாதிக் அலி, இவரது மனைவி சாபுரா பீவி இருவரும் நேற்று முன்தினம் டூவீலரில் சென்றனர்.திண்டுக்கல் – திருச்சி நான்கு வழிச்சாலையில் கல்லாத்துப்பட்டி பாலம் அருகே சென்ற போது டூவீலர் நிலைதடுமாறியதில் இருவரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.இதில் சாபுரா பீவி படுகாயங்களுடன் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 13.45 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா் என ஆட்சியா் ஐ.எஸ்.மொ்சி ரம்யா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த ஜன.22-ஆம் தேதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு தோ்தல் அறிவிப்பு வரும் வரையிலும் வாக்காளா் சோ்க்கை மற்றும் நீக்கும் பணிகள் நடைபெற்றன.இதன்படி,புதிதாக 10,806 வாக்காளா்கள் சோ்க்கப்பட்டனா்.
திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கருப்பையாவை வெற்றி பெற வைப்பது தொடர்பான, தேர்தல் பணிகள் மேற்கொள்வது மற்றும் ஆலோசனைகள் மேற்கொள்வதற்காக தேர்தல் பணிமனை நேற்று திறக்கப்பட்டது. இதனை முன்னாள் அமைச்சர் மனோகரன், முன்னாள் எம்பி குமார், முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, முன்னாள் எம்பி ரத்தினவேல் ஆகியோர் கூட்டாக இணைந்து குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தனர்.
நாங்குநேரி பரப்பாடி அருகே நேற்று (ஏப்ரல் 3) புதிதாக கட்டப்பட்டுள்ள ஆயத்த ஆடைகள் கடை திறப்பு விழா நடைபெற்றது. இதன் சிறப்பு விருந்தினராக சபாநாயகர் அப்பாவு கலந்துகொண்டார். தொடர்ந்து செய்தியாளரிடம் சபாநாயகர் கூறும்போது, நெல்லை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட என் மகனுக்கு சீட்டு கேட்டு தலைமைக்கு நான் அழுத்தம் கொடுத்ததாக வந்த தகவல் உண்மைக்குப் புறம்பானது என கூறினார்.
தாராபுரத்தில் இருந்து தேங்காய் நார் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. திருப்பூர் தாராபுரம் சாலை தூத்தாரி பாளையத்திற்கு வந்தபோது அங்கு இருந்த மின் கம்பியில் உரசியதால் திடீரென தீப்பிடித்தது. இதனால் லாரியில் இருந்த தேங்காய் நார் முழுவதும் தீ பரவியது. அங்கிருந்தோர் விரைந்து செயல்பட்டு தேங்காய் நார்களை இறக்கியதால் லாரி சேதமின்றி தப்பியது.
ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு பள்ளி மாணவர்களை பயன்படுத்தியதாக சமூக வலைதளத்தில் வெளிவந்த செய்தியின் அடிப்படையில் அதன் உண்மைத் தன்மையினை கீழக்கரையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். விசாரணையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென மாவட்டத் தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
வேலூர் சத்தியமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஷல்லிகுமார் (48), தொழிலாளி. இவர் கடந்த 27ஆம் தேதி தனது பைக்கில் சேண்பாக்கம் மேம்பாலத்தில் சென்றபோது அந்த வழியாக வந்த கார் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஷல்லிகுமாரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (ஏப்ரல் 3) இறந்தார். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சி திடலில் விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் நேற்று (ஏப்.3) பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மத்திய அரசில் 30 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. சிறு தொழில் செய்ய முடியவில்லை. எல்லாம் கார்ப்பரேட் மயமாகிவிட்டன. அவர்கள் செய்த தேச துரோகங்களில் தேர்தல் நிதி பத்திர மோசடியும் ஒன்று என பேசினார்.
கறம்பக்குடி அருகேயுள்ள வாணக்கன்காடு சோ்ந்த கோ.மூக்கன் இவரது மனைவி ஜீவிதா இவா்களுக்கு ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனா். தம்பதியினரிடையே அடிக்கடி குடும்பத் தகராறு காரணமாக நேற்று இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில்,மூக்கன் கட்டையால் தாக்கியதில் ஜீவிதா பலத்த காயமடைந்தாா். மயங்கிய நிலையில் அருகில் இருந்தவா்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஜீவிதா உயிரிழந்தார்.
தமிழக அளவிலான சிறப்பு செலவு கணக்கு பார்வையாளர் தொடர்பு எண் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலகிருஷ்ணன் என்பவர் தமிழக அளவிலான சிறப்பு செலவு கணக்கு பார்வையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரை 9345298218 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான முனைவர் ஜெயசீலன் இன்று செய்தி வெளியீட்டின் மூலம் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.