India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆக.22 அன்று காலை 10:00 மணிக்கு வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தோர் வரை பங்கேற்கலாம். ஆர்வமுள்ள்ளவர்கள்<
தவெக மாநாட்டை முன்னிட்டு இன்று போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் சென்னை – மதுரை மார்க்கமாக விருதுநகர் செல்லும் கனரக வாகனங்கள் திண்டுக்கல், திருமங்கலம் வழியாகவும், விருதுநகர் செல்லும் பொதுமக்கள் ராம்நாடு ரிங்ரோடு, திருப்புவனம், நரிக்குடி, திருச்சுழி, காரியாபட்டி, அருப்புக்கோட்டை வழியாக செல்லலாம். மாநாட்டிற்கு செல்லும் வாகனங்களுக்கு அருப்புக்கோட்ட நகருக்குள் செல்ல அனுமதி இல்லை.
திருப்பூர் காலேஜ் ரோடு அணைப்பாளையம் பகுதியில், மங்களம் சாலை மற்றும் சிறுபூலுவப்பட்டியை பகுதியை இணைக்க கூடிய வகையில், ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. மேம்பால பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 2 நாட்களுக்கு வஞ்சிபாளையத்திலிருந்து புஷ்பா ரவுண்டானா வருகின்ற பகுதியில், சோதனை அடிப்படையில் தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர போலீஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் இன்று (ஆகஸ்ட் 21) 9 வார்டுகளில் நடைபெறவுள்ளது. திருவொற்றியூர் (வார்டு-10, பூந்தோட்டம்), தண்டையார்பேட்டை (வார்டு-48, மின்ட்), இராயபுரம் (வார்டு-58, சிடன்ஹாம்ஸ் சாலை), அம்பத்தூர் (வார்டு-80, சூரப்பேட்டை), தேனாம்பேட்டை (வார்டு-117, மெலனி சாலை), கோடம்பாக்கம் (வார்டு-141, சி.ஐ.டி. நகர்) ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க!
வேலூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையம், பைபாஸ் சாலை, தோட்டப்பாளையம், பழைய பேருந்து நிலையம், டவுன் பஜார், சலவன்பேட்டை,ஆபீசர்ஸ் லைன், அப்துல்லாபுரம, பிஷப் டேவிட் நகர், கஸ்பா, ஊசூர், கொணவட்டம்,சேண்பாக்கம், விருதம்பட்டு, செங்காநத்தம் ரோடு, கொசப்பேட்டை, ஓல்டு டவுன், சார்பனாமேடு, பிடிசி சாலை, வல்லண்டராமம், விரிஞ்சிபுரம், இறைவன்காடு, செதுவாலை, கந்தனேரி, அன்பூண்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி, பிக்சட் டெபாசிட் மற்றும் கடன்கள் தொடர்பான OTP விவரங்களைக் கேட்கும் மோசடி அழைப்புகள் அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். அறிமுகமில்லாத எண்களில் இருந்து வரும் இத்தகைய அழைப்புகளுக்கு எந்த தகவலையும் அளிக்க வேண்டாம் என்றும், உடனடியாக அழைப்பை துண்டித்துவிட்டு, அருகில் உள்ள வங்கிக்கு நேரடியாக சென்று உறுதி செய்ய வேண்டும் என்றும் நெல்லை SP சிலம்பரசன் எச்சரித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களுக்கு, விநாயகர் சிலை நிறுவ விரும்பும் அமைப்புகள் ஆகஸ்ட் 27, 2025 அன்று, முன்கூட்டியே வருவாய் கோட்டாட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். ஊர்வலத்தின் போது சட்டம், ஒழுங்கை உறுதி செய்ய காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் உடன் இருப்பார்கள் என மாவட்ட ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று (ஆகஸ்ட் 21) நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அரசு நகர் சாய் மனோன்மணி திருமண மண்டபத்திலும், திருப்பெரும்புதூர் வட்டம் திருமங்கலம் ஊராட்சி குரு மஹாலிலும், உத்திரமேரூர் வட்டம் திருமுக்கூடல் R.R.K திருமண மஹால்,
குன்றத்தூர் நகர்ப்புற பஞ்சாயத்துக்கு மலையம்பாக்கம் வி.எம்.ஆர் திருமண மஹாலிலும் நடைபெற உள்ளது.
நத்தம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நத்தம் பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது நத்தம், செட்டிகுளம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த நத்தத்தை சேர்ந்த செல்வபிரகாஷ்(23), அஜித்மீரான்(28), உட்பட 9 பேர் கைது, 1 கிலோ கஞ்சா, 8 செல்போன்கள், 1 எடை மெஷின் பறிமுதல் செய்து நத்தம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்துள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், ஆம்பூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, துத்திப்பட்டு, ஆகிய இடங்களில் இன்று (ஆகஸ்ட்-21) நடக்க இருக்கிறது. இந்த முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை மனுவாக வழங்கலாம். மகளிர் உதவித்தொகைக்கு இங்கேய விண்ணப்பிக்கலாம். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.