India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் ஏப்.19ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையடுத்து வாக்காளர்களுக்கு கொடுக்க பணம், பரிசு பொருள் கொண்டு செல்வதை தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் வரும் வாகனங்களில் தீவிர சோதனை நடத்தி வருகினர்.
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நாகப்பன்(37) என்பவரை தாம்பரம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று(ஏப்.16) குற்றவாளி நாகப்பனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்புளித்தது.
மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும் , புதிய நிதி கட்சியின் நிறுவன தலைவருமான ஏ.சி. சண்முகம் இன்று (ஏப்ரல் 17) இறுதி கட்ட பிரச்சாரத்தின் போது உரிய அனுமதியின்றி பைக் பேரணி நடத்தியதால் வேட்பாளர் உள்பட 400 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஏப்.19ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களான மோயர்பாயிண்ட், பைன் பாரஸ்ட், குணாகுகை, பில்லர் ராக் ஆகிய பகுதிகள் பிற்பகல் 12.00 மணிக்கு திறக்கப்பட்டு மாலை 5 மணிக்கு மூடப்படும்; மேலும் பேரிஜம் ஏரிக்கு செல்ல அனுமதி இல்லை என கொடைக்கானல் வனத்துறை அறிவித்துள்ளது.
திருச்சி தேர்தல் பார்வையாளர் தினேஷ்குமார் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதீப் குமார் ஆகியோரின் தலைமையில், இன்று அனைத்து வேட்பாளர்கள் முன்னிலையில், வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களுக்கான இறுதி குலுக்கல் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் பதற்றமானவை என 188 வாக்குச்சாவடிகள் தற்பொழுது கண்டறியப்பட்டுள்ளன இந்நிலையில் 188 பதட்டமான வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவினை நேரடியாக கண்காணிக்கும் வகையில் 148 தேர்தல் நுண் பார்வையாளர்களும் கூடுதலாக 26 தேர்தல் நுண் பார்வையாளர்களும் என மொத்தம் 174 தேர்தல் நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஜெயசீலன் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
அருப்புக்கோட்டை அருகே செட்டிகுறிச்சி சௌடாம்பிகா பொறியியல் கல்லூரியில் இன்று 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி இளம் தலைமுறை வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கலந்து கொண்டு பாராளுமன்ற தேர்தலில் யாரிடமும் பணம் & பரிசு பெறாமல் 100% அனைவரும் வாக்களிக்க வேண்டும் என பேசி விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்த நிலையில் தென்காசி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர், எஸ்பி சுரேஷ்குமார் ஆகியோர் உத்தரவு படி மாவட்டம் முழுவதும் தங்கும் விடுதிகளில் வெளியூர் மற்றும் வெளி மாவட்டத்தை சேர்ந்த நபர்கள் யாரேனும் தங்கி உள்ளனரா என்று காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பல்வேறு காவலர்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு தேர்தல் பாதுகாப்பு பணியிடம் இன்று ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா தகுந்த அறிவுரைகளை வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி யாரேனும் செயல்படுகிறார்களா என்பதை கண்காணிக்க வாகன சோதனை மற்றும் தங்கும் விடுதிகள் , திருமண மண்டபம் ஆகிய இடங்களில் காவல்துறையினர் இன்று தீவிர சோதனை மேற்கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.