India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் இன்று(ஏப்.20) காலை தொடங்கி மேல வீதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது, மின் கம்பங்களில் தேரின் அலங்கார துணிகள் சிக்கி தாமதமாகி தேர் செல்வதில் தாமதமானது. இதையடுத்து தேரில் செய்யப்பட்டு இருந்த அலங்கார துணிகள் மற்றும் சவுக்கு கட்டைகள் அறுத்து அகற்றப்பட்டன. இதையடுத்து தேர் புறப்பட்டு சென்றது. இதனால் தேர் மேல வீதியை கடந்து செல்வதற்கே வெகு நேரம் ஆனது.
ஆயங்குடி தெற்குகிராமத்தை
சேர்ந்தவர் சங்கர். எஸ்.பி. பட்டினத்தை சேர்ந்தவர் முரளி. நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று ஒரே மோட்டார் சைக்கிளில் எஸ்.பி.பட்டினத்தில் இருந்து அறந்தாங்கி சென்றபோது புறங்காடு என்ற இடத்தில் சாலையின் குறுக்கே இருந்த வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியது. இதில் நிலைதடுமாறிய 2 பேரும் சாலையில் விழுந்து படுகாயம் அடைந்த நிலையில் இருவரும் பலியாகினர்.
கரூர், பால்வார்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணுசாமி, மனைவி கஸ்தூரி(65). இவர் ஆட்டையாம்பரப்பு பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த, ஆண்டாங்கோவில் செட்டிபாளையம் காலனியைச் சேர்ந்த முத்துக்குமார் (26) எனபவர் கஸ்தூரி அணிந்திருந்த ஒரு பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்றார். இதுகுறித்த புகாரில் நேற்று தான்தோன்றி மலை போலீஸார் முத்துக்குமாரை கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மக்களவை பொதுத்தேர்தல் நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை அமைதியான முறையில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் பாதுகாப்பு பணியில் நெல்லை மாநகர காவல் துறையினர் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது வாக்களிக்க வருகை தந்த மூதாட்டி ஒருவருக்கு மாநகர காவல் துறையினர் நீர், மோர் வழங்கி உபசரித்தனர். இந்த புகைப்படமானது இன்று (ஏப்.20) நெல்லையில் வைரலாகி வருகிறது.
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் இன்று 20.04.2024- வெளியிட்ட செய்திகுறிப்பில் நாளை 21.04.2024-மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு மாநகராட்சி பகுதியில் இறைச்சிக்கடை திறந்து விற்பனை செய்யக்கூடாது எனவும், ஆடு, மாடு, பன்றி போன்ற எந்த இறைச்சி கடையும் இயங்கினால் இறைச்சியை பறிமுதல் செய்து அபதாரம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். அதே போல் டாஸ்மாக் கடையும் இயங்காது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் தென் மாவட்டங்களான விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி தொகுதியில் இரவு 8 மணி வரை 70 சதவீத வாக்கு பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் நள்ளிரவில் அதனை மாற்றி 59.66% சதவீத ஓட்டுகள் மட்டுமே பதிவானதாக அறிவித்துள்ளது. மேலும் சில இடங்களில் ஓட்டு இயந்திரம் பழுதடைந்ததாக புகார் எழுந்தது. அவை உடனுக்குடன் சரி செய்யப்பட்டது. சலசலப்புகள், வாக்குவாதங்கள் தவிர்த்து அசம்பாவிதம் ஏதுமின்றி தேர்தல் நடந்து முடிந்தது.
கடலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 72.28 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. இது கடந்த 2019-ம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பதிவாகி இருந்த வாக்குகளை விட 1.36 சதவீத வாக்குகள் குறைவாகும். அதாவது கடந்த 2019-ம் ஆண்டில் நடந்த தேர்தலில் 73.64 சதவீதம் மட்டுமே வாக்குகள் பதிவானது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் நெய்தாளபுரம் கிராமத்தில் இன்று காலை காட்டு யானை தாக்கியதில் காளம்மா (70) என்ற மூதாட்டி உயிரிழந்தார். உடலை கைப்பற்றி தாளவாடி வனத்துறை மற்றும் ஆசனூர் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றன. மலைப்பகுதியில் பட்டப்பகலில் காட்டு யானை தாக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் ஆர்வமாக கலந்து கொண்டு வாக்குகளை செலுத்தினர். இதில் புதுச்சேரி முழுவதும் 78.80% வாக்குகள் பதிவான நிலையில் அதிகபட்சமாக பாகூர் தொகுதியில் 88.76% வாக்குகளும், குறைந்தபட்சமாக மாகி தொகுதியில் 65.11% வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.