India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
எடப்பாடி அருகே சித்தூர் பகுதியை சேர்ந்தவர் அஜித்(25). 3 ஆம்புலன்ஸ் வைத்துள்ள இவர், நேற்று மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க நடந்து செல்ல முடியாத முதியோர், ஊனமுற்றவர்களுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்படும் என அறிவித்து, 30க்கும் மேற்பட்டோரை இலவசமாக ஆம்புலன்சில், அழைத்துச் சென்று வாக்களிக்க வைத்து மீண்டும் வீட்டில் வந்து இறக்கிவிட்டுள்ளார். இச்சேவைக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் தினமும் தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தியும், மதுரையில், கடந்த 3 தேர்தல்களில் பதிவானதைவிட இந்த முறை குறைவாகவே (61.95%) வாக்கு பதிவாகியுள்ளது. 2009 இல் 77.43 %, 2014 இல் 67.74 %, 2019 இல் 66.02 % இருந்த ஓட்டுப்பதிவு இம்முறை 63.92% ஆக குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கை மாநில சராசரி (72%) யை விட குறைவாகும்.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு நேற்றைய தினம் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் வாக்குப்பதிவு நிறைவடைந்து வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலை கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்ட அறைக்கு மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அரசியல் கட்சியினர் முன்னிலையில் சீல் வைத்தார்.
விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் (Strong Room) பாதுகாப்பாக வைக்கப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி,நேற்று (ஏப். 19) இரவு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தேர்தலை முன்னிட்டு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்புவதற்கு ஏதுவாக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி இன்று(ஏப்ரல் 20) மாலை 4:30க்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும் ரயில் மறுநாள் காலை 3:50க்கு எழும்பூரை வந்தடையும். அதேபோல், நாளை (ஏப். 20) அதிகாலை 5:30க்கு திருச்சியில் இருந்து கிளம்பும் ரயில் பிற்பகல் 1:20க்கு எழும்பூரை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நகர்புறங்களில் வசிக்கும் மக்கள் வாக்களிப்பதில் சுணக்கம் காட்டியதாக மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் இன்று விளக்கம் அளித்துள்ளார். நகர்புறங்களில் வசிக்கும் மக்களில் 10ல் 4 பேர் வாக்களிக்க தவறிவிட்டனர். தேர்தல் ஆணையம் முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்திய போதிலும் நகர்ப்புறங்களில் வாக்கு சதவீதம் சரிந்துள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமான, ஆதவ் பப்ளிக் பள்ளியில் சட்டமன்ற தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில், அந்தந்த சட்டமன்ற தொகுதிகளில் இருந்து வரப்பெற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. தொடர்ந்து இன்று தேர்தல் நடத்தும் அலுவலர் கற்பகம் ஆய்வு செய்து, அந்த அறை சீல் வைக்கப்பட்டது.
தி.மலை தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டன. இதை தொடர்ந்து, இன்று(ஏப்.20) அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி
பிரதிநிதிகள் முன்னிலையில், பொது
மேற்பார்வையாளர் மற்றும் கலெக்டர் தலைமையில் ஒழுங்குமுறை விற்பனை கூட வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள
பாதுகாப்பு இரும்பு வைப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது.
ராஜபாளையம் பகுதியைச் சோ்ந்த 14 வயது மாணவி இதே பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவருக்கு சிங்கராஜாக்கோட்டை தெருவைச் சோ்ந்த வைரஜோதி மகன் சூா்யா வயது (22) பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ராஜபாளையம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் ஏப்ரல் 19 ம் தேதி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பொன்னேரிக்கரை அறிஞர் அண்ணா பொறியியல் கல்லூரி பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன. தொடர்ந்து, ஆட்சியர் கலைச்செல்வி மோகன், தேர்தல் பார்வையாளர்(பொது) பூபேந்திர எஸ்.சொளத்திரி, காவல் பார்வையாளர் பரத் ரெட்டி பொம்மா ரெட்டி மேற்பார்வையில், அனைத்து வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த அறை இன்று(ஏப்.20) சீல் வைக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.