Tamilnadu

News April 20, 2024

தமிழக-கேரள எல்லையில் பலத்த சோதனை

image

கேரளாவில் பறவைக்காய்ச்சல் பரவியுள்ளதால், தமிழக எல்லைப்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இன்று தமிழக-கேரள மாநில எல்லைப்பகுதிகளான ஆனைகட்டி, வாளையாறு , வேலந்தாவளம் , மேல்பாவி , முள்ளி,மீனாட்சிபுரம், கோபாலபுரம் நடுப்புணி , ஜமீன்காளியாபுரம் , வடக்காடு உள்பட 12 சோதனைச் சாவடிகளில் சிறப்பு கால்நடை பராமரிப்பு துறையின் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News April 20, 2024

காட்டை விட்டு வெளியேறும் விலங்குகள்

image

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக திம்பம், ஹசனூர் வன பகுதிக்குள் செல்கிறது. கடந்த சில நாட்களாக வனவிலங்குகள் போதிய உணவும், தண்ணீரும் இன்றி காட்டை விட்டு சாலையோரங்களில் தென்படும் காட்சி அதிகரித்துள்ளது. இந்த சூழலில் விலங்குகளை அச்சுறுத்தும் வகையில் புகைப்படம் எடுப்பது மற்றும் விலங்குகளுக்கு உணவளிப்பதற்க்கு வனத்துறை தடை விதித்துள்ளது.

News April 20, 2024

புதுவையில் 3 அடுக்கு பாதுகாப்பு

image

லாஸ்பேட்டை மகளிர் தொழில்நுட்ப கல்லூரி, மற்றும் மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லுரியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஸ்ட்ராங் ரூமுக்கு முன்பாக துணை ராணுவத்தினர் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இன்று தேர்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கன் ஸ்ட்ராங் ரூம் மற்றும் 3 அடுக்கு பாதுகாப்பை ஆய்வு செய்தார். இதனையடுத்து, கட்சி முகவர்களுடன் அவர் கூட்டம் நடத்தினார்.

News April 20, 2024

பதிவான வாக்கு இயந்திரங்கள்: பார்வையாளர் ஆய்வு

image

திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரசு பொறியியல் கல்லூரி பாதுகாப்பு அரங்கில் வைக்கப்பட்டன. இவற்றை திருநெல்வேலி மக்களவைத் தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் சோனாலி இன்று (ஏப்ரல் 20) நேரில் ஆய்வு செய்தார். மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உடன் இருந்தார்.

News April 20, 2024

வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயிலில் ஏகாதசி விழா

image

வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ சீனிவாசன் பெருமாள் கோயிலில் ஏகாதசியை முன்னிட்டு நேற்றிரவு (ஏப்ரல் 19) ஸ்ரீ சக்தி அம்மா தலைமையில் 1008 பாரம்பரிய நெய் தீபம் ஏற்றி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீ சீனிவாச பெருமாளை தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

News April 20, 2024

ஜபல்புர் , மதுரை இடையே சிறப்பு ரயில்

image

கோடை கால விடுமுறை கூட்ட நெரிசலைச் சமாளிக்க, மதுரை, ஜபல்பூர் வாராந்திர சிறப்பு ரயில் (02121) மதுரையில் இருந்து ஏப்ரல் 20, 27, மே 04, 11, 18, 25, ஜுன் 01, 08, 15, 22, 29, ஜுலை 06, 13, 20, 27 ஆகிய சனிக்கிழமைகளில் இரவு 11.35 மணிக்கு புறப்பட்டு, திங்கட்கிழமை காலை 07.40 மணிக்கு ஜபல்பூர் சென்று சேரும். இந்த ரயிலுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

News April 20, 2024

விழுப்புரம்: வாகனம் நிறுத்திவைப்பு

image

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், தேவனூர் ஊராட்சியில், நேற்று நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி விசிக மற்றும் பாமக நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை ஒட்டி கலவரம் ஏதும் ஏற்படாத வண்ணம், அதனை தடுக்கும் விதமாக வரும் வாகனம் அரகண்டநல்லூர் காவல் நிலையம் அருகே இன்று (ஏப்ரல் 20) நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

News April 20, 2024

வாக்கு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்தில் அடைப்பு

image

திருநெல்வேலி மாவட்டத்தில் மக்களவை பொதுத்தேர்தல் நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மிக அமைதியான முறையில் விறுவிறுப்பாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்கு இயந்திரங்கள் இன்று (ஏப்.20) வாக்கு எண்ணும் மையமான திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் கட்சி முகவர்கள் முன்னிலையில் வைத்து சீல் வைக்கப்பட்டது.

News April 20, 2024

திருவள்ளூர்: மின் உற்பத்தி பாதிப்பு

image

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையத்தின் இரு நிலைகளில் முதல் நிலையின் 3 அலகுகளில் தலா 210 விதம் 630 மெகாவாட் மின் உற்பத்தியும் இரண்டாவது நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 விதம் 1200 என மொத்தம் நாளொன்றுக்கு 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் அனல் மின் நிலைய 2வது நிலையின் 2வது அலகில் கொதிகலன் கசிவு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

News April 20, 2024

பொதுமக்களுக்கு இடையூறு: நடிகர் விஜய் மீது புகார்

image

நடிகர் விஜய் நேற்று (ஏப். 19) சென்னை நீலாங்கரை வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார். அப்போது அங்கு கூட்டம் அலைமோதியது. இந்நிலையில், தேர்தல் விதிகளை மீறி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுமார் 200 பேர்களுடன் வாக்குச்சாவடிக்குள் சென்று விஜய் வாக்களித்ததாகவும் , அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், செல்வம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

error: Content is protected !!