Tamilnadu

News April 20, 2024

சேலம் அருகே ஒரே ஒரு வாக்கு மட்டுமே பதிவு!

image

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள செங்கலத்துப்பாடி மலை கிராம மக்கள் மயான வசதிக் கேட்டு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, இம்மக்கள் நேற்று தேர்தலைப் புறக்கணித்ததால் அங்குள்ள வாக்குச்சாவடியில் ஒரே ஒரு வாக்கு மட்டுமே பதிவானது. 336 வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News April 20, 2024

காஞ்சிபுரம் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் 139 தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நுழைவுநிலை (LKG) வகுப்பில் 25% ஒதுக்கீட்டின் கீழ் 1889 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் மே 20 ஆம் தேதி வரை rte.tnschools.gov.in இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

News April 20, 2024

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை

image

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் (மாலை 7 மணி வரை) இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடும் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் மக்கள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

News April 20, 2024

ஏலகிரி மலையில் மழைக்கு வாய்ப்பு

image

திருப்பத்தூர் மாவட்டங்களின் ஆந்திர எல்லையோர பகுதிகள் மற்றும் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலைப் பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ‌இதனால் கோடைகால வெயில் அதிகரித்து வரும் நிலையில் இன்று மாலை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News April 20, 2024

சேலம் இடங்கணசாலை: 826 வாக்குகள் மட்டுமே!

image

சேலம் மாவட்டம், இடங்கணசாலை பேரூராட்சி இ.காட்டூர் அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் 826 பேர் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்து உள்ளனர்.
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தலை புறக்கணிப்பதாக அப்பகுதி மக்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறைந்த வாக்குகள் பதிவாகியுள்ளது.

News April 20, 2024

தூத்துக்குடியில் 24 மணி நேர கண்காணிப்பு

image

தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தூத்துக்குடி வ.உ.சி பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திர அறையானது கண்காணிக்கப்பட்டு வருகிறது.

News April 20, 2024

மூன்றாவது முறையாக மோடி பிரதமராக தொடர்வார்!

image

திண்டிவனம் மரகதாம்பிகை அரசு பள்ளி வாக்கு சாவடி மையத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராளுமன்ற தேர்தலில் தனது ஜனநாயக கடமையான வாக்குபதிவினை இருமகள்கள் சம்யுக்தா, சஞ்சித்ரா, சங்கமித்ரா ஆகியோருடன் இணைந்து வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமை ஆற்றினார்.அதனை தொடர்ந்து பேட்டியளித்த அன்புமணி ராமதாஸ், மூன்றாவது முறையாக மிகப்பெரிய வெற்றி பெற்று பிரதமராக மோடி தொடர்வார் என தெரிவித்தார்.

News April 20, 2024

எஸ்டிபிஐ தலைவர் நன்றி அறிவிப்பு

image

எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் இன்று (ஏப்ரல் 20) விடுத்துள்ள அறிக்கை: மக்களவை தேர்தலில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் எனது தேர்தல் பரப்புரையில் துணை நின்ற அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

News April 20, 2024

பாலம் கட்டும் பணி துவக்கம்

image

நாகை மாவட்டம் வலிவலம் ஊராட்சிக்கு உட்பட்ட காருக்குடி பகுதியில் வெள்ளை ஆற்றின் குறுக்கே கனக வாகனங்கள் செல்லும் வகையில் பல ஆண்டுகளாக கோரிக்கை மனு அளிக்கப்பட்ட வந்தது. குறிப்பாக நான்கு தலைமுறைக்கு மேலாக இங்குள்ள ஒத்தையடி பாதை அளவிலான பாலத்தை மட்டுமே மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில் தற்பொழுது, புதிய பாலம் எம்எல்ஏ பொது நிதியிலிருந்து பாலம் கட்டுமான பணி துவங்கியுள்ளது.

News April 20, 2024

மயிலாடுதுறை:சென்ற தேர்தலை விட 3.87% வாக்கு குறைவு

image

மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் 2019ல் வாக்குப்பதிவு
73.93% பதிவாகியுள்ளது.2024ல் வாக்குப்பதிவு 70.06% தான் பதிவாகியுள்ளது.சென்ற தேர்தலை விட தற்பொழுது நடந்து முடிந்த தேர்தலில் 3.87% வாக்கு குறைந்துள்ளது.

மயிலாடுதுறை – 69.05%

சீர்காழி – 71.70 %

பூம்புகார் – 71.74 %

திருவிடைமருதூர் – 70.23 %

கும்பகோணம் – 67.98%

பாபநாசம் – 69.60%

error: Content is protected !!