Tamilnadu

News April 20, 2024

நெல்லை மாவட்டத்தில் மழை

image

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் (மாலை 7 மணி வரை) இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடும் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் மக்கள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

News April 20, 2024

திண்டுக்கல்: பேரூராட்சி தலைவர் விரட்டியடிப்பு

image

திண்டுக்கல் மாவட்டம், அகரம் பேரூராட்சிக்குட்பட்ட கருங்கல்பட்டியில் இன்று தேர்தல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுகவை சேர்ந்த குழந்தை, ராஜமாணிக்கம், சவரிமுத்து ஞானமணி, ஆகிய மூன்று பேரை அகரம் பேரூராட்சி தலைவர் நந்தகுமார் கும்பலுடன் வீட்டுக்குள் புகுந்து தாக்கியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு வந்த மக்கள் பேரூராட்சி தலைவரை ஓட ஓட விரட்டியடித்தனர். 

News April 20, 2024

சென்னையில் கல்லூரிகளுக்கு சீல்

image

தமிழ்நாட்டில் நேற்று மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. இதையடுத்து, வடசென்னை தொகுதி வாக்குப்பெட்டிகள் ராணி மேரி கல்லூரியிலும், மத்திய சென்னை தொகுதி வாக்குப்பெட்டிகள் லயோலா கல்லூரியிலும், தென்சென்னை தொகுதி வாக்குப்பெட்டிகள் அண்ணா பல்கலைக்கழகத்திலும் வைக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்கள், முகவர்கள், தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

News April 20, 2024

தி.மலை அருகே தீ விபத்து

image

சேத்துப்பட்டு அடுத்த பருத்திப் கிராமத்தில் இன்று அதிகபடியான வைக்கோலை ஏற்றிச்சென்ற டிராக்டரில் மின் கம்பியில் வைக்கோல் உரசி திடீரென தீ பற்றியது. உடனடியாக கிராம பஞ்சாயத்து தலைவர் ப.ரவி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அனைத்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. 

News April 20, 2024

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழை

image

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் (மாலை 7 மணி வரை) இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடும் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் மக்கள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

News April 20, 2024

திருவள்ளூர்: இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

image

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூரில் விஜய் நடித்த ‘கில்லி’ திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் கடந்த நிலையில், (ஏப்ரல் 20) இன்று மறு வெளியீடு செய்யப்பட்டு திருவள்ளூர் ராக்கி திரையரங்கில் வெளியாகியுள்ள நிலையில் திரைப்படத்தை காண வந்த ரசிகர்களுககாக தமிழக வெற்றி கழகம் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் குட்டி. மற்றும் கட்சி நிர்வாகிகள் இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

News April 20, 2024

பெரம்பலூர்: டாஸ்மாக் விடுமுறை அறிவிப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு வாணிப கழகத்தின்(டாஸ்மாக்) அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமதலங்கள் ஆகிய அனைத்திற்கும் மகாவீரர் ஜெயந்தி (21.04.2024) (ஞாயிற்று கிழமை) மற்றும் மே தினம் (01.05.2024) (புதன் கிழமை) ஆகியவற்றை முன்னிட்டு மேற்படி இரண்டு நாட்களுக்கு உலர்தினமாக (DRY DAY) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News April 20, 2024

தூத்துக்குடி: 2 பேருக்கு அரிவாள் வெட்டு

image

பொட்டல்காடு அருகே உள்ள டீ கடை முன்பு சட்ட விரோதமாக, கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பிரேம்குமார்(19) என்பவரிடம் ஏற்பட்ட தகராறில் 4 பேர் கொண்ட கும்பல், அவரை அரிவாளால் வெட்டினர். இதை தடுக்க சென்ற டீக்கடையை சேர்ந்த வேல்ராஜ்(45) என்பவரையும் அரிவாளால் வெட்டி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இது குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை தேடி வருகின்றனர். 

News April 20, 2024

ஓட்டு பதிவிற்கு குறைவு ஆனால் இங்கோ அதிகம்…

image

பார்லிமென்ட் தேர்தல் ஓட்டுப் பதிவுக்காக கடந்த மூன்று நாட்கள் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மூன்று நாட்களுக்குப் பிறகு இன்று (ஏப். 20) அனைத்து பகுதிகளிலும் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டன. நெல்லை, பாளை கடைகளில் குடிமகன்களின் கூட்டம் அலைமோதியது. ஓட்டு பதிவுக்கு குறைவாக வந்த வாக்காளர்கள் டாஸ்மாக் மதுபான கடைக்கு அதிக அளவில் வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.

News April 20, 2024

கோவை: ஆட்சியர் முன்னிலையில் சீல்

image

கோவை தடாகம் சாலையில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் கோவை பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு இயந்திரங்கள் Strong ரூமில் வைக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்றது.
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் முன்னிலையில் இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கக்கூடிய பணி நடைபெற்றது. இந்நிலையில், இன்று மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள Strong ரூமில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் சீல் வைத்தார்.

error: Content is protected !!