Tamilnadu

News April 20, 2024

நாதக நிர்வாகியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

image

நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூரை சேர்ந்தவர் மாதவன். நாம் தமிழர் கட்சி நிர்வாகியான இவர், நேற்று இரவு அதே பகுதியில் நடந்து சென்றபோது, அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ராகுல் உள்ளிட்ட 3 போ், மாதவனை வழிமறித்து, தேர்தல் முன்விரோதம் காரணமாக 3 பேரும் மாதவன் மீது தாக்குதல் நடத்தினர். புகாரின்பேரில் நெல்லிக்குப்பம் போலீசார், ராகுல் உள்பட 3 போ் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 20, 2024

நாமக்கல்: வரலாறு காணாத அளவில் வெயில்

image

நாமக்கல் மாவட்டத்தில் வரலாறு காணாத அளவில் இன்று வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இன்று மாலை 3 மணி நிலவரப்படி 117° வெயில் வாட்டி எடுக்கிறது. வயது முதிர்ந்தவர்கள் மதிய நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். வெயில் தாக்கத்தில் உடலில் நீரிழப்பு அதிகம் இருப்பதால் அதிகமாக தண்ணீர் அருந்த வேண்டும். குறிப்பாக நீர் மோர், பதநீர், நுங்கு, இளநீர் ஆகியவற்றை உட்கொள்ளலாம்.

News April 20, 2024

தாளவாடியில் போக்குவரத்து துண்டிப்பு

image

தாளவாடி சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்று மதியம் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது அப்போது, காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் பனக்கள்ளி கிராமத்தில் சாலை ஓரத்தில் இருந்த மரம் முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அவ்வழியாக வாகனங்கள் எதுவும் சொல்ல முடியாமல் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

News April 20, 2024

கரூர்: வாக்குப்பதிவு இயந்திர அறைக்கு சீல்

image

கரூர் மாவட்டம் தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கவேல், தேர்தல் பொது பார்வையாளர் அசோக் ரெக்காவர் முன்னிலையில் தளவாய் பாளையம் குமாரசாமி பொறியியல் கல்லூரி வாக்கு என்னும் மையத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் கரூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீலிடப்பட்டது. மாவட்ட எஸ்பி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

News April 20, 2024

நாகை: வாக்குப்பதிவு இயந்திர அறைக்கு  சீல்

image

நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில் செல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. மாவட்டத் தேர்தல் பார்வையாளர் பாரதி லக்பதி நாயக், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களான நாகை ஜானிடாம் வர்கீஸ், திருவாரூர் சாரு ஶ்ரீ மற்றும் வாக்காளர்கள் முன்னிலையில் இன்று பூட்டி சீல் வைக்கப்பட்டது.

News April 20, 2024

சிவகங்கை: நாளை மதுபான கடைகள் விடுமுறை

image

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை (ஏப்.21) சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மதுபானக் கடை மற்றும் அதனுடன் இணைந்த மதுபானம் அருந்தும் கூடம் FL2, FL3 / FL3A / FL3AA மற்றும் FL11 உரிமம் பெற்ற மனமகிழ் மன்றம் மற்றும் ஹோட்டல்கள் முழுவதுமாக மூடப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News April 20, 2024

புதுச்சேரி: மதுக்கடைகளுக்கு நாளை விடுமுறை

image

நாளை (ஏப்.21 ) மகாவீர் ஜெயந்தி தினம் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, வருடா வருடம் புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளுக்கும் விடுமுறை அளிப்பது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் நாளை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இயங்கி வரும் அனைத்து மதுக்கடைகளை மூட கலால்துறை உத்தரவிட்டுள்ளது.

News April 20, 2024

மக்களுக்கு ஓர் அறிவிப்பு

image

சீர்காழியில் உள்ள ஸ்ரீ சட்டை நாதர் சுவாமி கோவில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நாளை (ஏப்ரல்.21) ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. ஆகையால் தேர் சுற்றி வரும் நான்கு வீதிகளில் பாதுகாப்பிற்காக மின் நிறுத்தம் செய்து தேர் சுற்றி வருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் கோவிலை சுற்றி உள்ள நான்கு வீதிகளில் நாளை மின் நிறுத்தம் ஏற்படும் என மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது

News April 20, 2024

போதையில் பாட்டியை கொலை செய்து பேரன் 

image

திருவட்டார் சாரூரை சேர்ந்தவர் தாசம்மாள் வயது( 80). இவரது மகன் புஷ்பராஜ் இறந்ததால் பேரன் அஜித் (23) தாசம்மாளுடன் வசித்து வந்தான். பெயின்ட் கடை ஊழியர் அஜித் நேற்று தாசம்மாள் பெயரில் உள்ள 15 சென்ட்  சொத்தை தன் பெயருக்கு எழுதி கேட்டு போதையில் தாசம்மாளை பிடித்து தள்ளியதில் அவர் தலையில் அடிபட்டு இறந்து போனார். இதில் பயந்த அஜித் வேட்டியில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். 

News April 20, 2024

தென்காசி மாவட்டத்தில் மழை

image

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென்காசி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் (மாலை 7 மணி வரை) இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடும் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் மக்கள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

error: Content is protected !!