Tamilnadu

News April 20, 2024

தூத்துக்குடியில் 66.88% வாக்குகள் பதிவு

image

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 1624 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 9 லட்சத்து 75 ஆயிரத்து 468 வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தம் 66.88% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News April 20, 2024

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடல் தானம்

image

வத்தலகுண்டு நகரை சேர்ந்த முத்து கிருஷ்ணன் இன்று இயற்கை எய்தினார். அவரது சகோதரரின் ஒப்புதலுடன் இன்று திண்டுக்கல் லயன்ஸ் மெஜஸ்டிக் சங்க தலைவர் கே. ஆர்.கேவின் சீரிய முயற்சியால் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மூன்றாவது முறையாக முழு உடலையும், 28-வது முறையாக கண்தானம் வழங்கப்பட்டது.

News April 20, 2024

செங்கல்பட்டு அருகே விபத்து: ஒருவர் பலி

image

செங்கல்பட்டு மாவட்டம் பரனுர் அருகே திருச்சி மார்க்கமாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஜான் சம்பத் (46) என்பவர் உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News April 20, 2024

தூத்துக்குடியில் நாளை இதற்கு தடை

image

தமிழக அரசு உத்தரவின்படி 21.04.2024 ஞாயிற்றுக்கிழமை மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அதிகாலை 12.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் எங்கும் ஆடு, மாடு, கோழி முதலான எந்த வித உயிரினங்களையும் இறைச்சிக்காக அல்லது வேறு எந்த காரணங்களுக்காக வதை செய்யவோ கூடாது, மீறினால் சட்டப்படி நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 20, 2024

கடலூர்: 3-ம் கட்ட நீச்சல் பயிற்சி

image

கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கோடைக்கால 2-ம் கட்ட நீச்சல் வகுப்புகள் கடந்த 16-ம் தேதி துவங்கி வரும் 28ஆம் தேதிவரை நடைபெறுகிறது‌. இந்நிலையில் 3-ஆம் கட்ட நீச்சல் வகுப்பு வரும் 30-ம் தேதி முதல் மே மாதம் 12-ம் தேதிவரை நடைபெற உள்ளதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் செ. மகேஷ்குமார் தெரிவித்துள்ளாா்.

News April 20, 2024

ராணிப்பேட்டை: 2 குழந்தைகளின் தாய் தற்கொலை

image

வாலாஜா தாலுகா அம்மூர் அடுத்த ஈஸ்வரன் கோயில் தெருவை சேர்ந்தவர் சசிகலா (28). இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று மதியம் குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை ராணிப்பேட்டை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எதற்காக சசிகலா இறந்தார் என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

News April 20, 2024

திருச்சியில் பதிவான மொத்த வாக்குப்பதிவுகள்

image

திருச்சி மக்களவைத் தொகுதிக்கான தேர்தலில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் 72.87 சதவீதமும், திருச்சி மேற்கு தொகுதியில் 61.75 சதவீதமும், திருச்சி கிழக்கு தொகுதியில் 62.46 சதவீதமும், திருவெறும்பூர் தொகுதியில் 66.62 சதவீதமும், கந்தர்வகோட்டை (தனி) சட்டமன்ற தொகுதியில் 73.80 சதவீதமும், புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 68.32 என திருச்சி தொகுதியில் 67.52 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

News April 20, 2024

கொடைக்கானல்: காட்டு யானைகள் முகாம்

image

கொடைக்கானல் அருகே உள்ள பள்ளங்கி கோம்பை மலைக்கிராமத்தில் முகாமிட 4க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் மயிலம்மா என்ற மூதாட்டியின் விவசாய தோட்டப்பகுதியில் புகுந்து அங்கு பயிரிட்டு அறுவடைக்கு தயாராக இருந்த பீன்ஸ் போன்றவற்றை சேதப்படுத்தியது. மேலும் வனத்துறையினர் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவும், யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News April 20, 2024

மது அருந்து கூடாரமாக மாறிய போக்குவரத்து அலுவலகம்

image

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ளே உள்ள அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் இயக்கம் /பயண அட்டை வழங்கும் இடம் உள்ள அலுவலகம் இரவு நேரத்தில் குடிகாரர்களின் கூடாரமாக மாறி வருகிறது, காலையில் பேருந்து நிலையம் வரும் பயணிகள் முகம் சுழிப்போடு செல்கின்றனர் தொடரும் இந்த அவலத்தை தடுத்திட நடவடிக்கை எடுக்குமா காவல்துறை ?நகராட்சி நிர்வாகம்? என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

News April 20, 2024

சிறப்பு ரயில் இயக்கம்

image

கோவையிலிருந்து பீஹார் மாநிலம், பாருணிக்கு , வரும் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல்.23) சிறப்பு ரயில் (06059) இயக்கபடவுள்ளது. இந்த ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் வழியாக இயக்கப்படுகிறது. அதன்படி, கோவையிலிருந்து (ஏப்ரல்.23) காலை 11.50 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் (ஏப்ரல்.24) மதியம் 2.30 மணிக்கு பாருணி சென்றடையும்.

error: Content is protected !!