Tamilnadu

News April 20, 2024

நாமக்கல்: பண்ணைகளில் தீவிர பாதுகாப்பு

image

கேரள மாநிலம் ஆலப்புழாவில் குட்டநாடு பகுதியில் உள்ள, வாத்து பண்ணைகளில், ஏராளமான வாத்துகள் தொடர்ச்சியாக உயிரிழந்தன. இறந்த வாத்துகளின் மாதிரிகளை சேகரித்து சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சோதனை முடிவில் இறந்த வாத்துகளுக்கு பறவைக் காய்ச்சல் (எச்5என்1) நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  பண்ணையாளர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரபடுத்தியுள்ளன.

News April 20, 2024

நாளை முதல் 5 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி

image

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சாப்டூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இக்கோவிலில் நாளை (ஏப். 21) முதல் 24ஆம் தேதி வரை 4 நாட்கள் சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு தரிசனம் செய்ய பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

News April 20, 2024

ஆறுதல் கூறிய முன்னாள் அமைச்சர்கள்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் திமுகவினரால் தாக்கப்பட்ட அதிமுகவினர் ஒன்பதுக்கும்  மேற்பட்டோர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், நத்தம் விசுவநாதன் நேரில் பார்த்து ஆறுதல் கூறினர். மேலும் அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.

News April 20, 2024

தி.மலையில்106.88 டிகிரி பாரன்ஹீட்

image

தி.மலை மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அஞ்சுகின்றனர். இன்றைய அதிகபட்ச வெப்பநிலை 106.88 டிகிரி பாரன்ஹீட் 41.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

News April 20, 2024

பெருமாள் கோயிலில் டிடிவி சாமி தரிசனம்

image

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேனி அருகே வயல்பட்டியில் உள்ள பெருமாள் கோயிலில் சிறப்பு தரிசனம் செய்தார். மேலும் நேற்று தேர்தல் நடந்து முடிந்த நிலையில் பெருமாள் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்தார். இந்த நிகழ்வில் அமமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News April 20, 2024

ஈரோடு: வாக்கு எண்ணும் மையத்தில் சீல்வைப்பு

image

ஈரோடு மக்களவை தேர்தலில், பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான சித்தோடு – ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டு, இன்று பாதுகாப்பு இருப்பறையில் வைத்து, சீல் வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் தேர்தல் பொது பார்வையாளர் ராஜீவ் ரஞ்சன் மீனா, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கராவுடன் அனைத்து வேட்பாளர்கள் பங்கேற்றனர்.

News April 20, 2024

பாதுகாப்பு அறையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு

image

மயிலாடுதுறையில் வாக்கு என்னும் மையத்தில் உள்ள பாதுகாப்பு அறைகளில் 300 கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார். மேலும் 57 மத்திய பாதுகாப்பு படை வீரர்களும் , 90 தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர்களும் , 200 காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 20, 2024

வேலூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் நன்றி மடல்

image

நாடாளுமன்றத் தேர்தல் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்றது. அதிமுக சார்பில் வேலூர் நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் பசுபதி அவர்கள் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்காக ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி கூறி வாழ்த்து மடல் அனுப்பியுள்ளார். அதில் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அனைத்து அதிமுக உறுப்பினர்கள், பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

News April 20, 2024

தமிழக, கேரள எல்லையில் தீவிர சோதனை

image

தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் இன்று தெரிவித்துள்ள தகவலில், கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருவதாக கூறப்படும் நிலையில், தமிழக – கேரளா எல்லையான புளியரை பகுதியில் கால்நடைத் துறையினர் முறையான சோதனை சாவடிகள் அமைத்து கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வரும் அனைத்து வாகனங்களும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

News April 20, 2024

நாமக்கல்: வாக்கு இயந்திரங்களுக்கு சீல்வைப்பு

image

நாமக்கல் மக்களவை தொகுதியில் வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குகள் எண்ணும் மையமான விவேகானந்தா மகளிர் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டன. மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலர் ச. உமா, தேர்தல் பொது பார்வையாளர் ஹர்குன்ஜித் கவுர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது

error: Content is protected !!