India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று, (ஏப்ரல் 21, 2024) மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அன்றைய தினம் தமிழக அரசால் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதும், இறைச்சிகளை விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே இன்று கோவை மாநகரில் இறைச்சி கடைகளை மூட கோவை மாநகராட்சி ஆணையர் சிவ குரு பிரபாகரன் என்று தெரிவித்துள்ளார். இதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், ஆன்லைன் மூலம் தேர்வு நடத்துவதில் அரசு விதிமுறைகளை மீறியது, தேர்வு எழுதிய மாணவர்களின் 350க்கும் மேற்பட்ட விடைத்தாள்கள் காணாமல் போனது, போன்ற பல்வேறு காரணங்களுக்காக, தேர்வுக் கட்டுப்பாட்டாளர் டாக்டர். டி. தர்மராஜை பதவி நீக்கக் கோரி, தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு, ‘MKU பணியாளர்கள் சங்கம்’ சார்பில் புகார் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் நாளை (ஏப் 21) ஞாயிற்றுக்கிழமை மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளும் அத்துடன் மாவட்டத்தில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளும், வதைக்கூடங்களும் நாளை ஒரு நாள் முழுநேரம் இயங்காது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். விதி மீறி செயல்படும் கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
சீர்காழியில் உள்ள ஜாமிஆ பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் ஈகை திருநாளை முன்னிட்டு சீர்காழி அரசு மருத்துவமனை ரத்த வங்கியின் தேவைக்காக ரத்த தான முகாம் நாளை(ஏப்.21) ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. காலை 9: 00 மணி முதல் 12: 30 மணி வரை நடைபெற உள்ள ரத்ததான முகாமில் ஆர்வமுள்ள பொதுமக்கள் முன்பதிவு செய்து பங்கேற்று ரத்த தானம் வழங்கலாம் என அழைப்பு விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதில் தமிழகம் முழுவதும் 69. 46 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. கடந்த தேர்தலை விட இது மூன்று சதவீதம் குறைவு. அந்த வகையில் திருச்சியில் இன்று மாலை இறுதி கட்ட தகவலின் படி 67.45 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நேற்றைய இரவு அறிவிப்பை விட இந்த அறிவிப்பில் ஒரு சதவீதம் குறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளில் இறைச்சி விற்பனை நாளை ஏப்ரல் 21ஆம் தேதி தடை செய்யப்பட்டுள்ளதாக மயிலாடுதுறை நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தடையை மீறி விற்பனை செய்தால் உரிய அபராதம் விதிக்கப்பட்டு மிருகவதை தடுப்புச் சட்டம் 1960 -இன்படியும் , அரசு உத்தரவின் படியும் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இன்று கூறப்பட்டுள்ளது.
அண்ணல் அம்பேத்கரின் 134வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வேலூர் மாநகராட்சி காந்தி நகரில் அம்பேத்கர் சமூக சேவை அமைப்பு சார்பில் மருத்துவ முகாம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று நடந்தது.
இந்த நிகழ்வில் 120 ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கவுன்சிலர் ரீகன், அப்பு பால் பாலாஜி, கதிரவன்,சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் உள்ளிட்டோர் இருந்தனர்.
தி.மலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றனர். சித்ரா பௌர்ணமி கிரிவலத்திற்கு ஏப்ரல் 22, 23 தேதிகளில் மாதவரத்தில் இருந்து தலா 30 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து 910 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற எம்பி தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் விராலிமலை தொகுதியில் 80.49 சதவீத வாக்குப்பதிவும், ஆலங்குடியில் 73.62 சதவீதமும், திருமயத்தில் 65.85 சதவீதமும், அறந்தாங்கியில் 68.80 சதவீதமும், புதுக்கோட்டையில் 67.83 சதவீதமும், கந்தர்வகோட்டையில் 73.76 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. இதில் 13,45,361 வாக்காளர்களில் 9,62,496 பேர் வாக்களித்தனர்.
நாமக்கல் மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் மையமான விவேகானந்தா மகளிர் கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்புடன் தனி அறையில் சட்டமன்றத் தொகுதி வாரியாக முத்திரையிடப்பட்டு கல்லூரியில் 310 சிசிடிவி எல்இடி தொலைக்காட்சி மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வட்டாட்சியர் துணை ராணுவத்தினர், போலீசார் என 249 பேர் பாதுகாப்பு பணியில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் உமா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.