Tamilnadu

News July 4, 2024

தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலை பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களுக்கு பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தேர்வுசெய்து, தொகுப்பூதிய அடிப்படையில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சட்டம் 2016 பிரிவு 19 இன்படி தற்காலிகமாக 59 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 8 கடைசி நாள். எனவே, விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 4, 2024

விவசாயிகளுக்கு வேளாண் துறை வேண்டுகோள்

image

எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை பேரிடர்கள் மற்றும் பூச்சி நோய் தாக்குதலால் ஏற்படும் மகசூல் இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டு, ஜூலை 31ஆம் தேதிக்குள் பயிர்களை காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட வேளாண் துறை சார்பில் விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 4, 2024

சென்னை மழையின் அளவு: வெதர்மேன் விளக்கம்

image

சென்னையில் நேற்றிரவு பெய்த மழை குறித்து, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் நேற்றிரவு 1 மணி நேரத்தில் 60 மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. ஜூலை மாதத்தின் சராசரி மழைப் பொழிவு 100 மி.மீ ஆகும். 1 மாதத்தின் சராசரி மழையில் 60%, 1 மணி நேரத்தில் பெய்துள்ளது. எழும்பூர், கிண்டி, நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களில் அதிகளவில் மழை பெய்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News July 4, 2024

நெல்லை: தொடக்கம் முதலே மோதல் போக்கு!(1/3)

image

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், நெல்லை மாநகராட்சி 16வது வார்டில் வெற்றிபெற்ற திமுகவை சேர்ந்த பி.எம்.சரவணன் மேயராக தேர்வானார். தொடக்கம் முதலே மேயர்-கவுன்சிலர்கள் இடையே மோதல்போக்கு காணப்பட்ட நிலையில் மாதம்தோறும் நடைபெறும் கூட்டங்களில் சலசலப்பு ஏற்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பே மேயர் ‘ராஜினாமா’ என்ற பேச்சு உலாவிய நிலையில் நேற்று பதவி விலகல் குறித்த அறிவிப்பு வெளியானது.

News July 4, 2024

கோவை மேயர் மீது தொடர் குற்றச்சாட்டுகள்(1/3)

image

கோவையின் முதல் பெண் மேயரான கல்பனா நேற்று(ஜூலை 3) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 2022 ஆம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், கோவை மாநகராட்சி 19வது வார்டில் வெற்ற பெற்ற இவர் மேயராக தேர்வானார். கல்பனா மேயரானது முதலே அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. மாநகராட்சியில் உள்ள 5 மண்டல தலைவர், கவுன்சிலர்கள் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வந்த நிலையில் நேற்று திடீரென ராஜினாமா செய்தார்.

News July 4, 2024

குடும்ப சூழ்நிலையால் ராஜினாமா – கமிஷ்னர்(2/3)

image

மேயர் சரவணன்-கவுன்சிலர்கள் இடையே மோதல் போக்கு தீவிரமடைந்த நிலையில் கடந்த மாதம் 28 ஆம் தேதி நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்திலும் பெரும்பாலான கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை. இந்நிலையில், சென்னைக்கு வருமாறு நேற்று முன்தினம் கட்சித் தலைமை அழைப்பு விடுத்தது. இதை தொடர்ந்து, குடும்ப சூழ்நிலையால் மேயர் ராஜினாமா செய்ததாக மாநகராட்சி ஆணையர் சுபம் ஞானதேவ் ராவுக்கு கிடைத்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News July 4, 2024

சொந்த காரணங்களுக்காக ராஜினாமா – கமிஷ்னர்(2/3)

image

வார்டு வளர்ச்சி பணிகளில் பாரபட்சம் காட்டுவதாக, கல்பனா மீது கவுன்சிலர்கள் அதிருப்தி தெரிவித்து வந்தனர். இந்த பிரச்னை மாநகராட்சி கூட்டங்களிலும் எதிரொலித்து வந்தது. தொடர்ந்து, மக்களவைத் தேர்தலில் கல்பனாவின் சொந்த வார்டில் திமுகவை விட பாஜக அதிக வாக்குகள் பெற்றது. இவை கட்சி தலைமை வரை சென்ற நிலையில், சொந்த காரணங்களுக்காக மேயர் கல்பனா ராஜினாமா செய்வதாக மாநகராட்சி ஆணையர் பிரபாகரன் நேற்று அறிவித்தார்.

News July 4, 2024

முன்னாள் அமைச்சர் மீதான வழக்கிற்கு இன்று தீர்ப்பு

image

கரூா் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான நிலத்தை மிரட்டி எழுதி வாங்கியதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட 3 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில் தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை அருகிலிருந்து கவனிக்க முன்பிணை கோரி கரூர் கோர்ட்டில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அந்த மனுவின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்குவதாக கோர்ட் அறிவித்துள்ளது.

News July 4, 2024

ஜூலை 8 ஆம் தேதி மாநகராட்சி கூட்டம்(3/3)

image

நெல்லை மாநகராட்சியில் 55 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 44 திமுக கவுன்சிலர்கள், 4 காங்கிரஸ் கவுன்சிலர்கள், மார்க்.கம்யூனிஸ்ட் -1, இ.முஸ்லீம் லீக் -1, மதிமுக -1 மற்றும் அதிமுகவில் 4 கவுன்சிலர்கள் உள்ளனர். திமுக கூட்டணியில் மட்டும் 51 கவுன்சிலர்கள் உள்ள நிலையில், மேயர் ராஜினாமா குறித்த கூட்டம் ஜூலை 8 ஆம் தேதி துணை மேயர் ராஜூ தலைமையில் நடைபெற உள்ளது. இது நெல்லை அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

News July 4, 2024

கோவை: அடுத்த மேயர் யார்?(3/3)

image

கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளது. இதில் திமுக -73 கவுன்சிலர்கள், காங்கிரஸ் -9 கவுன்சிலர்கள், அதிமுக -3, இந்.கம்யூனிஸ்ட் -4, மார்க்.கம்யூனிஸ்ட் -4, மதிமுக -3, கொ.ம.தே.க – 2, மமக -1 மற்றும் எஸ்டிபிஐ -1. திமுக கூட்டணியில் மட்டும் 96 கவுன்சிலர்கள் உள்ள நிலையில் மேயர் ராஜினாமா செய்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி, அடுத்த மேயர் யார் என்ற எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ளது.

error: Content is protected !!