Tamilnadu

News August 21, 2025

திருவாரூர்:கூட்டுறவுத்துறை தேர்விற்கு இலவச பயிற்சி

image

தமிழ்நாடு கூட்டுறவுத்துறையில் 2,513 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பித்துள்ள திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பயன்பெறும் வகையில், திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், இலவச பயிற்சி வகுப்புகள் செப்.1-ம் தேதிமுதல் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார். SHARE IT

News August 21, 2025

குமரியில் நாளை வேலை வாய்ப்பு முகாம்!

image

குமரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நாகர்கோவிலில் ஒவ்வொரு மாதமும் 3வது வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இம்மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது நாளை (22.08.2025) வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் குமரியைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்று வேலைவாய்ப்பை பெற SHARE பண்ணுங்க.

News August 21, 2025

தூத்துக்குடி அரசு பஸ் பயணிகள் கவனத்திற்கு

image

தூத்துக்குடி மக்களே நீங்கள் அரசு பஸ்ஸில் பயணம் செய்யும்போது, தவறுதலாக உங்களின் உடமைகளை பஸ்ஸிலேயே மறந்துவிட்டால் நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் குறிப்பிட்டிருக்கும் பேருந்து எண் மற்றும் விவரங்களை 18005991500 என்ற Toll-Free எண் (அ) 94875 99080 அழைத்து தெரிவிக்கலாம். அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் உங்களை தொடர்பு கொண்டு, உங்கள் பொருளை எங்கு வந்து பெற வேண்டும் என்பதை தெளிவாக கூறுவர். *ஷேர் பண்ணுங்க

News August 21, 2025

BREAKING: நள்ளிரவில் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

image

மேலப்பாளையம் மேல கருங்குளத்தைச் சேர்ந்த கட்டட தொழிலாளி அருள்தாஸ், தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் நேற்று இரவு மண்ணெண்ணெய் கேனுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் இருந்த மண்ணென்ணையை பறிமுதல் செய்தனர். எங்கள் ஊரில் சாதி ரீதியாக எங்கள் குடும்பத்தை அச்சுறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் மறுக்கின்றனர் என அருள்தாஸ் போலீசாரிடம் கூறினார்.

News August 21, 2025

கோவையில் தொழுநோய் உஷார் மக்களே!

image

கோயம்புத்தூரில் புதிதாக 12 பேருக்கு தொழுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொழுநோய் மைக்கோ பாக்டீரியம் லெப்ரே என்ற பாக்டீரியா மூலம் பரவுகிறது. இந்த நோய் தோல் மற்றும் நரம்புகளை பாதிக்கிறது. இதனை ஆரம்ப நிலையில் கண்டறிந்து உரிய சிகிச்சை அளித்தால் நோய் பரவுதல் மற்றும் உடல் ஊனம் ஏற்படுவதை தடுக்க முடியும்.இதனை மற்றவர்களுக்கும் SHARE செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.

News August 21, 2025

பெரம்பலூர்: வேலை வாய்ப்பு முகாம் அறிவிப்பு!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் துறை நிறுவனங்களும், தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலை வாய்ப்பு முகாம் நாளை (ஆக.,22) பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெற உள்ளது. எனவே வேலை அளிப்பவர் மற்றும் வேலை நாடுநர்கள் தவறாது தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!

News August 21, 2025

ஒரு க்ளிக்-ல் சிவகங்கை ஒட்டுமொத்த விபரங்கள்!

image

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கலைக்கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், இன்ஜினியரிங் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் அவற்றின் தொடர்பு எண்களோடு தொகுத்து சிவகங்கை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. உங்கள் பகுதியில் உள்ள கல்லூரி பற்றி தெரிந்து கொள்ள <>இங்கு க்ளிக் <<>>செய்து தெரிஞ்சிக்கோங்க… உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News August 21, 2025

காஞ்சிபுரத்தில் 1000-ம் பேருக்கு வேலை ரெடி!

image

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் & மாவட்ட நிர்வாகம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இம்முகாமில் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 1000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளது. வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

News August 21, 2025

சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

image

சென்னை மாநகராட்சி பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, பொதுமக்களுக்கு அச்சமூட்டும் வகையான நாய்களை வீட்டில் வளர்க்ககூடாது. நோய் தடுப்பூசி செலுத்திய நாய்களை மட்டுமே வெளியிடங்களுக்கு அழைத்து செல்ல வேண்டும். கழுத்துப்பட்டை, முகமூடி அணியாமல் நாய்களை வெளியே கொண்டு வரக்கூடாது என தெரிவித்துள்ளது. தெருநாய் குறித்த புகார்களை https://chennaicorporation.gov.in/gcc/ என்ற இணையதளத்தில் தெரிவிக்கலாம்.

News August 21, 2025

மாவட்ட அளவிலான இளையோா் தடகளப் போட்டி

image

தருமபுரியில் மாவட்ட அளவிலான இளையோா் தடகளப் போட்டிகள் வரும் 24ஆம் தேதி தொடங்குகிறது. போட்டிகளில் பங்கேற்க 24ஆம் தேதி காலை 7 மணிக்கு போட்டி தொடங்கும் முன்பாக விளையாட்டு அரங்கில் வீரா்கள், வீராங்கனைகள் தங்களது பெயரைப் பதிவுசெய்து கொள்ள வேண்டும். இப்போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறும் வீரா்கள், வீராங்கனைகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9442207047, 9443266228 தொடா்பு கொள்ளலாம்.

error: Content is protected !!