India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மன்னம்பந்தலில் உள்ள ஏவிசி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பாதுகாப்பு அறைகளுக்கு போடப்பட்டுள்ள மூன்றடுக்கு பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் அங்கு பணியில் இருக்கும் துணை ராணுவ படை வீரர்கள் மற்றும் காவலர்களை மாவட்ட எஸ்பி மீனா இன்று நேரில் சந்தித்து தணிக்கை மேற்கொண்டார்.
கடலூரில் கடந்த 1 மாதமாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடலூர் மஞ்சக்குப்பம் தபால் நிலைய பேருந்து நிறுத்தம், செம்மண்டலம் சிக்னல் பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பல பகுதிகளில் கடலூர் மாநகராட்சி சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் கடும் வெயிலில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் பானையில் வைத்திருக்கும் தண்ணீரை பருகி தாகத்தை தீர்த்து செல்கின்றனர்.
வந்தவாசி அடுத்த சளுக்கை அரசினர் உயர்நிலைப் பள்ளியில் எய்டு இந்தியா திட்டம் சார்பில் மாணவர்களுக்கு டெக்னாலஜி சார்பில் எளிய முறையில் கணித செயல்பாடுகள் விளக்கப்பட்டது. மேலும் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் இளங்கோவன், உதவி ஆசிரியர் சாந்த குமார், எய்டு இந்தியா திட்ட மேலாளர் முருகன் ஆகியோர் இருந்தனர்.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய்த்துறை, கால்நடை மற்றும் பராமரிப்பு துறை, உள்ளாட்சி நிர்வாகம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களுடனான பறவைக்காய்ச்சல் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏ.வி.சி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே அங்கு பாதுகாப்பு அறைகளின் பாதுகாப்பு பணிகள் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான மகாபாரதி இன்று ஆய்வு செய்தார். அப்போது மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட சித்தர்காடு அருகே சந்தைப்பேட்டை தெரு மற்றும் பாரதி நகர் இணைப்பு ஆகிய பகுதிகளில் சிறப்பு தூய்மை பணியானது மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து துப்புரவு பணியாளர்களைக் கொண்டு சாலையோரம் மண்டி கிடந்த புதர்கள் மற்றும் குப்பைகள் அனைத்தும் அப்பகுதிகளில் இருந்து இன்று அகற்றப்பட்டது.
ஒட்டன்சத்திரம் தாலுகா, இடையகோட்டை அருகில் உள்ள இ. அய்யம்பாளையத்தில் உள்ள பாலமுருகன் கோயிலில் இன்று சித்ரா பௌர்ணமி பூஜைக்காக 108 -சங்கு பூஜை நடைபெற்றது. அப்போது அங்கு வட்டமடித்து சுற்றிக் கொண்டிருந்த மயில் கோவில் வளாகத்திற்குள் வந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக அமர்ந்து இருந்தது. இதனை கண்ட பக்தர்கள் முருகனின் வாகனம் மயில் என்பதால் பக்தி பரவசம் அடைந்தனர்.
சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக குறைய தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது 1.5% வரை ஏரிகளில் நீர்மட்டம் சரிந்துள்ளது. இதனால் சென்னையில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் என கூறப்பட்ட நிலையில், குடிநீர் வடிகால் அதிகாரிகள், சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்துள்ளனர்.
அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் 79-வது ஆண்டு விழா, கடலுார் சங்க அலுவலகத்தில் நடந்தது. விழாவிற்கு, தாலுகா வங்கி ஊழியர் சங்கத் தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கினார். இந்தியன் வங்கி கடலுார் மண்டல அலுவலகத்தில் பணிபுரியும் வினோத், சங்கக் கொடியை ஏற்றி வைத்தார். மாவட்டத் தலைவர் மீரா பேசினார். வங்கி ஓய்வூதியர் சங்க மூத்த தலைவர் வாழ்த்தி பேசினார்.
தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவி, வாழை நுண்ணுயிர் ஊட்டச்சத்து கலவை குறித்து அப்பகுதி விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தார். அதனைத் தொடர்ந்து நுண்ணுயிர் ஊட்டச்சத்து கலவையின் முக்கியத்துவத்தையும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் பற்றி விளக்கமளித்தார். இதனால் ஏராளமான விவசாயிகள் பயனடைந்தனர்
Sorry, no posts matched your criteria.