India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் மணிலா, எள், நெல் உள்ளிட்ட விவசாய பொருட்களை விற்பனைக்காக நேற்று (ஏப்ரல் 22) கொண்டுவந்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று ஒரேநாளில் 91 லட்சம் ரூபாய்க்கு விவசாய விளைபொருட்கள் விலைபோனதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாகை அடுத்த வாய்மேடு உடைய அய்யனார் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நேற்று நடைபெற்றது. இக்கோயிலில் கும்பாபிஷேக விழா கடந்த 20ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை உடன் துவங்கியது. தொடர்ந்து நான்கு கால யாக சாலை பூஜை நிறைவு பெற்று மகாபூர்ணாஹூதி நடைபெற்றது. தொடர்ந்து கடம் புறப்பட்டு, கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நேற்று முன் தினம் இரவு 8வது பிளாட்பார்ம் அருகே அடையாளம் தெரியாத யாசகர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக அந்த தனியார் பேருந்து அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேருந்து ஓட்டுனர் பிரபு மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம் குருவையர் தெருவில் உள்ள ஶ்ரீலஶ்ரீ அவதூத சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் மிக விமர்சையாக நேற்று முன்தினம் நடைபெற்றது கோயில் விமான கலசத்திற்கு கும்பநீரை தீட்சிதர்கள் ஊர்வலமாக எடுத்து வந்து நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஶ்ரீலஶ்ரீஅவதூத சுவாமிகள் ஆலய நிர்வாகிகள் செய்தனர்
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள ஆண்டி விளை ஸ்ரீ நாக முத்து மாரியம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி கொடை விழா துவங்கி நடைபெற்று வருகிறது. நேற்று உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது, இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு வழிபாடு நடத்தினர். பூஜைகளில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
வண்டலூர் சிங்கார தோட்டம் பகுதியில் அமைந்துள்ள ஞான விநாயகர், முகாம்பிகை ஆஞ்சநேயர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிறகான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்தனர்.
சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2,700க்கும் மேற்பட்ட உயிரினங்கள் உள்ளன. தமிழ்நாட்டின் சிறந்த சுற்றுலாத்தலமான இந்த பூங்காவுக்கு 2 மாதங்களுக்கு முன்பு கிரிபோன் கழுகுகள் மற்றும் ஒரு ஜோடி எகிப்திய கழுகுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. ராட்சத கூண்டுகளில் பராமரிக்கப்பட்டு வந்த கழுகுகள் திடீரென மாயமானதாக கூறப்படுகிறது. எங்கு தேடியும் கழுகுகள் கிடைக்காததால் பூங்கா நிர்வாகிகள் திணறி வருகின்றனர்.
திருவண்ணாமலை அருள்மிகு ஸ்ரீ அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மன் திருக்கோவிலில் சித்திரை மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து அண்ணாமலையார் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று காலை முதல் அதிக அளவில் கிரிவலம் செல்வதற்காக கோவிலுக்கு வந்துள்ளனர். இதனால் அண்ணாமலையார் கோவிலில் அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது.
காஞ்சிபுரம் சுந்தராம்பிகை ஸ்ரீ கச்சபேஸ்வரர் கோயிலில் சித்திரை உற்சவம் நடைபெறுவதை ஒட்டி இன்று(ஏப்.23) குதிரை வாகனத்தில் ஸ்ரீ கச்சபேஸ்வரர் வீதி உலா வரும் நிலையில், நேற்று(ஏப்.22) ரமணா கலைக்கூட கலைஞர்கள் கலை நுட்பத்துடன் வரைந்த ஓவியத்தை மக்கள் கண்டுகளித்தனர். காஞ்சியில் நடைபெறும் அனைத்து கோயில்களின் உற்சவ வாகனங்களை தத்ரூபமாக வரைந்து பொதுமக்கள் மத்தியில் காட்சிப்பட்டது.
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று(ஏப்.22) காலை 10 மணி முதல் 5 மணி வரை உதிரம் நண்பர்கள் குழு, மாணவர்கள் சக்தி இயக்கம், திருச்சி சேவை கரங்கள் அறக்கட்டளை, தமிழ்நாடு சமூக ஆர்வலர்கள் இணைந்து நடத்தும் கல்லூரி சாலை 2024 நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 12ம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகள் உயர்கல்வி படிப்பதற்கு வழிகாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
Sorry, no posts matched your criteria.