Tamilnadu

News April 24, 2024

தி.மலை: சிறுவன் பலியான சோகம்

image

தி.மலை புலால் பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேல். இவரது ஐந்து வயது மகன் கருப்பன் வீட்டின் அருகே உள்ள கிணற்றிற்கு தனது தாயாருடன் சென்றார். கிணற்றின் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து மூச்சு திணறி உயிரிழந்தான். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

News April 24, 2024

அரக்கோணம் அருகே நிலத்தகராறில் வெட்டு!

image

அரக்கோணம் அடுத்த கிழவனம் கிராமத்தை சேர்ந்தவர் பரந்தாமன்(45). ஆட்டோ ஓட்டுநரான இவரது உறவினர்கள் பாஸ்கரன், கவாஸ்கர், ராஜ்குமார். இந்த இரு குடும்பத்துக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று(ஏப்.22) இரவு பரந்தாமனை பாஸ்கரன் தரப்பினர் கத்தியால் வெட்டியுள்ளனர். படுகாயமடைந்த பரந்தாமன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News April 24, 2024

திண்டுக்கல்:  1500ஐ தொட்ட மல்லிகை 

image

திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் உள்ள திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இன்று (ஏப்ரல்.23) சித்ரா பௌர்ணமி முன்னிட்டும், கோவில் திருவிழாக்கள், கும்பாபிஷேகம் போன்ற நிகழ்ச்சிகளால் பூக்கள் வரத்து குறைவானதால் ஒரு கிலோ மல்லிகை பூ ரூபாய் 1500 வரை விற்பனையாகிறது. மேலும் மாலைக்கு கட்டும் பூவான சம்பங்கி, செவ்வந்தி போன்ற பூக்கள் ரூபாய் 250 வரை விற்பனை ஆகிறது.

News April 24, 2024

ஒரே நேரத்தில் கல்யாணமும் துக்கமும்: 15 பேர் வழக்கு

image

அம்பாசமுத்திரம் அருகே ஒரே நேரத்தில் நடந்த திருமணம் மற்றும் துக்கம் நிகழ்வுகளால் ஏற்பட்ட மோதலில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலஏர்மாள்புரத்தில் துக்கம் அனுசரிக்கப்பட்ட தெருவில் திருமணம் நடந்ததால் இரு வீட்டாருக்குமிடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர் காயமடைந்தனர். இது குறித்து நேற்று (ஏப்.22) இரவு அம்பாசமுத்திரம் போலீசார் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 24, 2024

புதுவையில் தேர்தல் துறைக்கு கலால் துறை கோரிக்கை

image

புதுவையில் தேர்தல் ஓட்டுப்பதிவு கடந்த 19 ஆம் தேதி நடந்து முடிந்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும்படைகள், சோதனைச்சாவடி கண்காணிப்பு குழுக்கள் கலைக்கப்பட்டன. ஆனால், மதுபான கடை விற்பனை நேரம் குறைப்பு ரத்து செய்யப்படவில்லை. இதனால் மதுபான கடைகளின் விற்பனை நேரத்தை பழையபடி அறிவிக்கவும், தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்ட நேர கட்டுப்பாட்டை வாபஸ் பெறவும் தேர்தல் துறைக்கு கலால் துறை கோப்பு அனுப்பி உள்ளது.

News April 24, 2024

கோவையில் 104 டிகிரி வெயில் பதிவானது

image

கோடை தொடங்குவதற்கு முன்பாகவே கோவையில் கடந்த பிப்ரவரியில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. காலை 9 மணிக்கே வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல தயங்குகின்றனர். மாலை 5 மணிக்கு பிறகே வெயிலின் தாக்கம் குறைகிறது. இந்நிலையில், கோவையில் நேற்று அதிகபட்சமாக 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 24, 2024

அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியல்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள வி. மாமந்தூர் கிராமத்தில் முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு ஈடுபட்டனர். இதில், காலி குடங்களுடன் சிறுவர்கள் பெண்கள் என 30க்கும் மேற்பட்டோர் சாலையில் வரிசையாக குடங்களை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

News April 24, 2024

போலீசார் எனக்கூறி தங்கச் செயின் பறிப்பு

image

சிவகங்கை மேலரதவீதியை சேர்ந்த மீனாட்சி(68), நேற்று கோயிலுக்கு சென்றுக்கொண்டிருந்தார் அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த மர்ம நபர்கள் மீனாட்சியிடம் தாங்கள் போலீஸார் என கூறி அவர் அணிந்திருந்த 4 1/2 பவுன் தங்கச் செயினை கழற்றி பையில் வைக்க சொல்லியுள்ளனர். பிறகு அவர் கழற்றி வைக்க முயற்சித்த போது மர்மநபர்கள் செயினை பறித்து தப்பிச் சென்றனர். இதுகுறித்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனனர்.

News April 24, 2024

குடவாசல் கத்தி காட்டி மிரட்டியவர்கள் கைது

image

குடவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடகண்டம் வெட்டாறு பாலம் அருகில் கத்தியை காட்டி மிரட்டி ரௌடிசத்தில் ஈடுபட்டு இருசக்கர வாகனம் மற்றும் பணத்தை பறித்து சென்ற திருக்கண்ணமங்கை மேலத்தெருவை சேர்ந்த மதன்ராஜ் என்பவரின் மகன் நவீன் @ வாஞ்சிநாதன்(24) மற்றும் அம்மையப்பன், கருப்பூர், பாய்ச்சல் கடைவீதியை சேர்ந்த தியாகராஜன் மகன் சந்தோஷ் (23)ஆகியோர் குடவாசல் போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டனர்.

News April 24, 2024

தி.மலை: ரூ.10 கட்டணத்தில் பேருந்து

image

இன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பொதுமக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் சார்பில் நகரின் எல்லைகளில் 11 தற்காலிகப் பேருந்து நிலையங்களில் இருந்து கிரிவலப்பாதை வரை ரூ.10 என்ற கட்டணத்தில் 20 தனியார் பேருந்துகள், 81 பள்ளிப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

error: Content is protected !!